பிறந்த குழந்தைக்கு எண்ணெய் மசாஜ் இப்படி தான் செய்ய வேண்டும்
குழந்தைகளுக்கு எண்ணெய் மசாஜ் செய்தால் நல்ல ரத்த ஓட்டம் கிடைப்பதுடன் சரும வறட்சி ஏற்படாமல் இருக்கும். தசைகள் வலுப்பெறவும் உதவும்.
பிறந்த குழந்தைக்கு எண்ணெய் கொண்டு மசாஜ் செய்தல் பல ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வரும் பழக்கமாகும். குழந்தை பிறந்து 15 நாட்களில் இருந்தே இந்த எண்ணெய் மசாஜினை தொடங்கலாம். சில குழந்தைகள் குறை பிரசவத்தில் பிறப்பதுண்டு. அப்படி குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கு கூட இந்த எண்ணெய் மசாஜை செய்யலாம்.
குழந்தைக்கு மசாஜ் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்:
குழந்தையின் உடல் முழுவதும் நல்ல ரத்த ஓட்டம் கிடைக்கும். மசாஜ் செய்யும் பொழுது குழந்தை வாயுத் தொல்லை விடுபட்டு, செரிமானத் திறன் அதிகரிக்கும். இதனால், குழந்தைகள் தாய்ப்பாலை கக்கும் பிரச்சனை சரியாகும். குழந்தையின் சமூக வளர்ச்சித்திறன் மேம்படும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். மேலும், சருமத்தை வறட்சி அடையாமல் மென்மையாக வைத்திருக்க உதவும். எலும்புகள் மற்றும் தசைகள் வலுப்பெற இந்த மசாஜ் துணை புரிகிறது. நல்ல மசாஜ் குழந்தைக்கு ஆழ்ந்த தூக்கத்தை தரும்.உடல் எடையை அதிகரிக்கவும் உதவும்.
மேலும் படிக்க | எடை இழப்புக்கு உதவும் சில சிறந்த கார்போஹைட்ரேட் உணவுகள்!
மசாஜ் எப்படி செய்ய வேண்டும்?
நீங்களும் குழந்தையும் நல்ல ஓய்வு நிலையில் இருக்கும் பொழுது மசாஜ் செய்யுங்கள். மசாஜ் மிகவும் நிதானமாக செய்ய வேண்டும் அரக்கப்பறக்க செய்யக் கூடியது அல்ல. அதேபோல் குழந்தை அழுது கொண்டு இருக்கும் பொழுது செய்ய கூடாது. நல்ல மனநிலையில் விளையாடி சிரித்தபடி இருக்கும் பொழுது மசாஜ் செய்யலாம். தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை இதற்கு ஒதுக்கி விடுங்கள்.
காலை நேரம் மசாஜ் செய்திட உகந்தது. மென்மையான விரிப்பினை விரித்து அதில் குழந்தையை படுக்க வைத்துக் கொள்ளுங்கள். கைகளை சுத்தப்படுத்தி அதன் பின் உங்கள் கைகளில் எண்ணெயை எடுத்து கைகளால் சிறிது சூடாக்கி கால் பகுதியில் இருந்து மசாஜ் செய்ய தொடங்குங்கள். குழந்தையை அதிகம் அழுத்தாமல் மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். வயிற்றுப் பகுதியில் மசாஜ் செய்யும் பொழுது கடிகார வடிவில் வட்டமாக செய்யுங்கள்.
கைகள், உள்ளங்கை, உள்ளங்கால் என அனைத்திலும் மென்மையான அழுத்தம் கொடுத்து மசாஜ் செய்யுங்கள். கழுத்து நிற்காத குழந்தைகளுக்கு கழுத்துப் பகுதிகளில் மசாஜ் செய்யும் பொழுது கவனமாய் செய்யவும். குழந்தைகளை குப்புற படுக்க வைக்கும் டம்மி டைம் என்று சொல்லக்கூடியதும் இந்த மசாஜின் போது அவசியம். குழந்தையின் கண்களைப் பார்த்து பேசியபடி விளையாட்டு காண்பித்தபடி மசாஜ் செய்யுங்கள். குழந்தைக்கு தலைக்கு குளிக்க வைக்கும் பொழுது மட்டும் தலையில் எண்ணெய் வைத்து மசாஜ் செய்தால் போதும். மற்றபடி, உடலுக்கு மட்டும் தினமும் மசாஜ் செய்யவும். நல்லெண்ணெய், கடுகு எண்ணெய், ஆலிவ் ஆயில், அல்லது சுத்தமான தேங்காய் எண்ணெய் இவற்றை மசாஜ் செய்ய பயன்படுத்தலாம். மசாஜ் செய்து 15 நிமிடங்களுக்குப் பிறகு குழந்தையை வெதுவெதுப்பான தண்ணீரில் குளிக்கச் செய்யவும்.
(இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் தகவல்கள் பொதுவானவை. Zee Tamil News இதனை உறுதிபடுத்தவில்லை. எந்த சந்தேகம் இருப்பினும் மருத்துவரிடம் சென்று முறையான ஆலோசனை பெற்றுக் கொள்வது அவசியம்)
மேலும் படிக்க | சிறுநீரக பலவீனம்! இந்த 7 குறிகள் இருந்தால் புறக்கணிக்க வேண்டாம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ