தண்ணீர் உடல் வெப்பநிலையை ஒழுங்குபடுத்துவதிலிருந்து தொடங்கி உடலுக்கான ஊட்டச்சத்துக்களை கொண்டு செல்வது வரை பல முக்கியமான செயல்பாடுகளைச் செய்ய நம் உடலுக்கு தேவைப்படுகிறது.  தண்ணீர் குடிக்கவேண்டும் என்பது நமக்கு தெரியும், ஆனால் எப்படி குடிப்பது என்பது நம்மில் பலருக்கும் தெரியாது.  ஒரு நாளைக்கு ஒருவர் எட்டு க்ளாஸ் அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்று கூறப்படுகிறது, ஆனால் உண்மையிலேயே அந்தளவு தான் தண்ணீர் குடிக்க வேண்டுமா என்பது நமக்கு தெரியாது.  அதற்கு ஆயுர்வேதத்தில் தண்ணீர் குடிப்பதற்கு சில விதிமுறைகள் விதிக்கப்படுகிறது, அதன்படி நாம் தண்ணீர் குடித்தால் நமது உடலுக்கு எண்ணற்ற நன்மைகள் கிடைக்கிறது.  பெரும்பாலும் சாதரண தண்ணீரை குடிப்பதை காட்டிலும் அதில் சிறிதளவு சீரகத்தை போட்டு வைத்துக்கொண்டு தினமும் குடிப்பது ஆரோக்கியத்தை மேம்பபடுத்தும் என்றும் வேண்டுமென்றால் அதில் சிறிது வெட்டிவேர் கலந்துகொள்ளலாம் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆயுர்வேதத்தின்படி, நின்ற நிலையில் தண்ணீர் குடிக்காமல் அமர்ந்த நிலையில் தண்ணீர் குடிக்க வேண்டும், அப்போதுதான் நமது உடல் தண்ணீரை நன்கு உறிஞ்சும்.  தண்ணீரை வேகமாக மடக்மடக்கென்று குடிக்காமல் பொறுமையாக ஒவ்வொரு சிப்பாக குடிக்க வேண்டும், தினசரி தண்ணீர் குடிக்க அளவை நீங்கள் கணக்கெடுத்து வைத்துக்கொள்ள வேண்டிய தேவையில்லை.  ஆயுர்வேதத்தின் கூற்றுப்படி, நீங்கள் நாள் முழுவதும் தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.  முடிந்தவரை வெதுவெதுப்பான அல்லது அறை வெப்பநிலையில் உள்ள தண்ணீரைக் குடிக்கவும், ப்ரிட்ஜில் உள்ள குளிர்ந்த நீரை நேரடியாக குடிக்க வேண்டாம், இது உங்கள் செரிமான திறனை குறைக்கும்.  பிளாஸ்டிக் பாத்திரத்தில் தண்ணீரை சேமித்து வைப்பதை தவிர்த்து மண் பானைகள் அல்லது செம்பு அல்லது எஃகு போன்ற பாத்திரங்களில் சேமித்து வைத்துக்கொள்ளலாம்.



மேலும் படிக்க | நீரிழிவு நோயாளிகளுக்கு ஆகச் சிறந்த ஐந்து பழங்கள்


அதேபோல திறந்த வெளியில் ஓடும் தண்ணீரை குடிக்காமல் வீடுகளில் சேமித்து வைக்கும் தண்ணீரையே குடியுங்கள்.  தண்ணீரை நன்கு கொதிக்கவைத்து, மூன்றில் ஒன்று அல்லது நான்கில் ஒன்று அல்லது அதன் அளவு இரண்டாகக் குறையும் வரை கொதிக்க வைத்து குடிப்பதால் செரிமான திறன் மேம்படும், மேலும் கூடுமானவரை காலையில் எழுந்ததும் வெதுவெதுப்பான நீரைக் குடிப்பதை வழக்கமாக்குங்கள்.  அதிகமான தண்ணீர் குடிப்பது நல்லது என நினைத்து அதிகமாக குடிப்பது தவறு, ஆயுர்வேதத்தின்படி தண்ணீர் கூட ஜீரணமாக வேண்டும்.  ஒவ்வொரும் அவர் உடலின் தேவைக்கேற்ப நீரை அருந்தவேண்டும்.  உணவு உண்பதற்கு 30 நிமிடங்களுக்குப் பிறகு அல்லது அதற்கு முன் தண்ணீர் குடிக்க வேண்டும்.  ஊட்டச் சத்து குறைபாடு உள்ள நபர்கள் உணவு உண்ட 30 நிமிடங்களுக்குப் பிறகும், அதிக எடை கொண்ட நபர்கள் உணவு உண்பதற்கு  30 நிமிடங்களுக்கு முன்பும் தண்ணீர் குடிப்பது சிறந்தது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.


மேலும் படிக்க | Health Tips: மூளை வளர்ச்சிக்கு உதவும் 'Vitamin B12' நிறைந்த சில உணவுகள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ