How To Eat Cucumber: வெயில் காலம் வெள்ளரிக்காய் காலம். கோடையில் நாம் வெள்ளரிக்காயை அதிகமாக உட்கொள்கிறோம். இது நமது உடலுக்கு தேவையான நீர்ச்சத்தை அளிக்கின்றது. இது சாலட்டில் பச்சையாக உண்ணப்படுகிறது. இதில் அதிகப்படியான நன்மைகள் உள்ளன. இதில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. கோடையில், சந்தைகளில் அனைத்து இடங்களிலும் வெள்ளரிக்காய் கொட்டிக்கிடக்கும். வெள்ளரிக்காயில் 95% தண்ணீர் உள்ளது. ஆகையால் இது கோடை காலத்திற்கு ஏற்றதாக கருதப்படுகின்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கோடையில் ஏற்படும் நீர்ச்சத்து குறைபாடு பிரச்சனையை தடுக்க வெள்ளரிக்காய் பெரிதும் உதவுகிறது. இருப்பினும், சிலர் வெள்ளரிக்காயை தோலுடன் சாப்பிடுகிறார்கள், சிலரோ தோலை நீக்கி, தோல் இல்லாமல் சாப்பிடுகிறார்கள். ஆகையால் பலரது மனதில் வெள்ளரிக்காயை தோலுடன் சாப்பிட வேண்டுமா? அல்லது தோல் இல்லாமல் சாப்பிட வேண்டுமா? என்ற கேள்வி உள்ளது. இதை பற்றி இங்கே காணலாம். 


வெள்ளரிக்காய் தோலுரிக்காமல் சாப்பிட்டால், அது பல ஆரோக்கிய நன்மைகளைக் கொடுக்கும். ஏனெனில் இதில் பல வகையான ஆண்டிஆக்சிடெண்டுகள் உள்ளன. இது பல வழிகளில் ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. இது தவிர, வெள்ளரி தோலில் டானின்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் மற்றும் பல ஆண்டி-ஆக்சிடெண்டுகள் காணப்படுகின்றன. இது ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்தைத் தடுக்க உதவுகிறது. மேலும் பல நாள்பட்ட நோய்களின் அபாயத்தையும் குறைக்கிறது.


வெள்ளரிக்காயை ஏன் தோலுடன் உட்கொள்ள வேண்டும்?


எடை இழப்பு (Weight Loss)


வெள்ளரிக்காயை தோல் நீக்காமல் சாப்பிடுவது உடல் எடையை வேகமாக குறைக்க உதவுகிறது. வெள்ளரிக்காய் தோல் உடலில் உள்ள நச்சுகளை நீக்கி உடலுக்கு தேவையான நார்ச்சத்தையும் அளிக்கின்றது. வெள்ளரிக்காய் உட்கொள்வதால் தொப்பை கொழுப்பை குறைக்கவும், உடல் எடையை குறைக்கவும் பெரிய அளவில் உதவி கிடைக்கும். இதில் நீர்ச்சத்து அதிகமாக உள்ளது, கலோரிகளும் மிக குறைவாக உள்ளன. ஆகையால் இது உடல் எடையை குறைப்பதில் அதிகமாக உதவுகின்றது. 


மலச்சிக்கல் (Constipation)


வெள்ளரிக்காயை தோலுடன் சேர்த்து சாப்பிட்டால் மலச்சிக்கல் பிரச்சனை வராது. இதன் மூலம் உங்கள் வயிறு தினமும் சுத்தமாக இருக்கும். உங்கள் உடலும் நீரேற்றமாக இருக்கும். முழு வெள்ளரிக்காயை சாப்பிடுவதால் வயிறு தொடர்பான பிரச்சனைகளும் நீங்கும்.


மேலும் படிக்க | வெறும் வயித்தில எலுமிச்சை ஜூஸ் தொடர்ந்து குடிச்சா என்னவாகும்? டாக்டர் செலவு மிச்சம்!


உடலில் உள்ள நச்சுகள் நீங்கும் (Detox) 


வெள்ளரிக்காயை தோல் உரிக்காமல் சாப்பிடுவதும் உடலில் உள்ள நச்சுகளை நீக்க உதவுகிறது, இது தவிர, நச்சுகளை உடலை விட்டு அகற்றுவதிலும் இது உதவியாக இருக்கின்றது. 


வெள்ளரிக்காய் சாப்பிடும் முன் 3 விஷயங்களை மனதில் கொள்ளவும்


- உரிக்கப்படாத வெள்ளரிக்காய் சாப்பிடுவதற்கு முன், அதை நன்கு கழுவ வேண்டும்.


- வெள்ளரியை கழுவுவதற்கு வெந்நீரைப் பயன்படுத்தவும்.


- வெள்ளரிக்காயின் மேல் மற்றும் கீழ் பகுதிகளை வெட்டி பிரிக்கவும்.


(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | உடலில் அதிக கொலஸ்ட்ரால் இருக்கிறதா? கண்களில் இந்த அறிகுறிகள் ஏற்படலாம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ