பொதுவாக இந்தியாவில் விரத நாட்களில் ஜவ்வரிசி அதிகமாக உண்ணப்படுகிறது. ஆனால் பெரும்பாலானோர் சாதாரண நாட்களிலும் இதனை உணவில் சேர்த்துக் கொள்கின்றனர். ஜவ்வரிசி என்பது எளிதில் ஜீரணமாகும் உணவாகும். ஜவ்வரிசியில் கார்போஹைட்ரேட்டுகள், ஆற்றல் மற்றும் மாவுச்சத்து ஆகியவை காணப்படுகின்றன. எனவே நீங்கள் ஒல்லியாகவும் பலவீனமாகவும் இருந்தால், ஜவ்வரிசியை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். எனவே ஜவ்வரிசிஉட்கொள்வதால் உடல் எடையை எப்படி அதிகரிப்பது என்பதை இந்த பதிவில் காண்போம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜவ்வரிசியில் உள்ள ஊட்டச்சத்துக்கள்
ஜவ்வரிசியில் அதிக கார்போஹைட்ரேட் உள்ளது. இதனுடன், இதில் புரதங்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்களும் காணப்படுகின்றன. ஜவ்வரிசியில் கால்சியம், நார்ச்சத்து மற்றும் இரும்புச்சத்து சிறிய அளவில் காணப்படுகிறது. இந்த சத்துக்கள் 100 கிராம் ஜவ்வரிசியில் அடங்கும்.


மேலும் படிக்க | Monkeypox: இவைதான் குரங்கு அம்மையின் முக்கிய அறிகுறிகள்


* புரதம்: 0.2 கிராம்
* கொழுப்பு: 0.2 கிராம்
* கார்போஹைட்ரேட்டுகள்: 87 கிராம்
* எனர்ஜி: 351 


ஜவ்வரிசியில் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ளது மற்றும் நார்ச்சத்து குறைவாக உள்ளது. எனவே, இது எடை அதிகரிப்புக்கு பயனுள்ளதாக கருதப்படுகிறது. மேலும் ஜவ்வரிசியில் அதிக அளவு மாவுச்சத்தும் உள்ளது, இது எடை அதிகரிக்க உதவும். அதேபோல் ஜவ்வரிசியை எளிதில் ஜீரணமாக்க முடியும். மருத்துவர் சுகிதா கூறுகையில், எளிதில் ஜீரணமாகும் உணவுகள் உடல் எடையை அதிகரிக்க உதவும். எனவே நீங்கள் எடை அதிகரிக்க விரும்பினால், நீங்கள் பல வழிகளில் ஜவ்வரிசியை உட்கொள்ளலாம் என்றார்.


உடல் எடை அதிகரிக்க ஜவ்வரிசியை எப்படி உட்கொள்வது


1. ஜவ்வரிசி பாயாசம்: நீங்கள் எடை அதிகரிக்க விரும்பினால், நீங்கள் ஜவ்வரிசி பாயாசம் செய்து சாப்பிடலாம் . இதற்கு முதலில் ஜவ்வரிசியை சில மணி நேரம் ஊற வைக்கவும். இதற்குப் பிறகு, பாலை சூடாக்கி அதில் ஒரு கிண்ணம் ஜவ்வரிசியை சேர்த்து நன்கு வேக விடவும். உணவாக எடுத்துக் கொள்ள விரும்பினால் பாதாம், முந்திரி, திராட்சை போன்ற உலர் பழங்களைச் சேர்த்துக் கொள்ளலாம். இது ஜவ்வரிசி பாயசாத்தின் ஊட்டச்சத்து மதிப்பை அதிகரிக்கும்.


2. ஜவ்வரிசி கிச்சடி: ஜவ்வரிசி கிச்சடியையும் சாப்பிட்டு வர உடல் எடை அதிகரிக்கும். ஜவ்வரிசி கிச்சடி எளிதில் ஜீரணமாகும் உணவாகும். இது உங்களுக்கு அதிக பசியை ஏற்படுத்தும். இத்தகைய சூழ்நிலையில், ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வதன் மூலம் உங்கள் எடையை அதிகரிக்கலாம். நீங்கள் ஜவ்வரிசி கிச்சடியில் காய்கறிகளையும் சேர்க்கலாம்.


3. ஜவ்வரிசி சூப்: சூப் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். நீங்கள் உடல் எடையை அதிகரிக்க விரும்பினால், நீங்கள் ஜவ்வரிசி சூப் குடிக்கலாம். இதற்காக, ஜவ்வரிசியை சில மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு தக்காளி சாறு செய்து, அதில் கேரட்டை சிறிய துண்டுகளாக நறுக்கி போடவும். அதன் பிறகு, ஒரு கடாயில் எண்ணெயை சூடாக்கி, அதில் ஊற வைத்த ஜவ்வரிசியை போடவும், மேலும் அதில் கேரட் மற்றும் தக்காளி மிக்ஸிங்கை சேர்க்கவும். இதற்குப் பிறகு தண்ணீர், உப்பு, மிளகு சேர்த்து 15 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். இப்போது இந்த சூப்பை சூடாக குடிக்கவும்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | யார் யாருக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும்? வழிகாட்டு நெறிமுறை வெளியீடு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ