Weight Loss Tips: ஒருவருக்கு எடை ஏறிவிட்டால், பின்னர் அதை குறைப்பது மிக கடினமான ஒரு பணியாக உள்ளது. அதுவும் குறிப்பாக, குளிர் காலங்களில் மக்களின் எடை வேகமாக அதிகரிக்கிறது. அதேபோல் அதிக உடல் செயல்பாடு இல்லாததாலும், இந்த பருவ நிலையில் அதிக பசி எடுக்கும் என்பதாலும், குளிர் காலத்தில் தொப்பையில் சேரும் கொழுப்பும் அதிகமாக உள்ளது. ஆகையால் குளிர் காலத்தில் எடையை குறைப்பது மிக கடினமான பணியாக உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குளிர் காலத்தில் எடை இழப்பு (Weight Loss in Winters)


குளிர் காலங்களில் எடை இழப்பில் கவனம் செலுத்துபவர்கள் சில குறிப்பிட்ட விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும். தொப்பை கொழுப்பை (Belly Fat) கரைத்து எடை இழப்புக்கு உதவும் குளிர்கால தின்பண்டங்கள் என்று வரும்போது, அவை வயிற்றுக்கு திருப்திகரமாகவும், வயிற்றை நிரப்பும் வகையிலும் இருப்பது மட்டுமல்லாமல், அதிகப்படியான கலோரிகள் இல்லாத ஊட்டச்சத்தை வழங்கும் உணவுகளை தேர்ந்தெடுப்பது முக்கியம்.


குளிர்காலத்தில் எடை இழப்புக்கும் தொப்பை கொழுப்பை கரக்கவும் உதவும் சில ஆரோக்கியமான ஸ்னாக்ஸ் பற்றி இங்கே காணலாம்: 


வறுத்த கொண்டைக்கடலை: 


கொண்டைக்கடலையில் (Chickpeas) நார்ச்சத்து மற்றும் புரதம் நிறைந்துள்ளது. இது உங்களை முழுமையாகவும் திருப்தியாகவும் உணர உதவும். மிளகுத்தூள், சீரகம் அல்லது பூண்டு பொடி போன்ற உங்கள் விருப்பமான மசாலாப் பொருட்களுடன் ஆலிவ் எண்ணையில் லேசாக வறுத்து மொறுமொறுப்பான மற்றும் சுவையான சிற்றுண்டியாக இதை உட்கொள்ளலாம்.


வெஜிடபிள் சூப்: 


வெஜிடபிள் சூப் (Vegetable Soup) குளிர் காலத்தில் உடல் எடையை குறைக்க ஒரு சிறந்த வழி. கேரட், ப்ரோக்கோலி, குடைமிளகாய் மற்றும் கீரை போன்ற பல்வேறு வண்ணமயமான காய்கறிகள் கொண்டு சூப் செய்யலாம். கலோரி குறைவாக உட்கொள்ள கிரீம் அடிப்படையிலான சூப்பை விட காய்கள் அடிப்படையிலான சூப்பைத் தேர்ந்தெடுக்கவும்.


பெர்ரிகளுடன் தயிர்: 


தயிரில் (Curd) புரதம் அதிகமாகவும் கொழுப்பு குறைவாகவும் உள்ளது. இது ஒரு சிறந்த சிற்றுண்டி தேர்வாகும். நார்ச்சத்து, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் இயற்கை இனிப்புகளை சேர்க்க இதில் ப்ளூபெர்ரிகள், ஸ்ட்ராபெர்ரிகள் அல்லது ராஸ்பெர்ரிகள் போன்ற பெர்ரிகளை சேர்க்கலாம். இந்த கலவையானது ஊட்டச்சத்துக்களின் நல்ல சமநிலையை வழங்குகிறது மற்றும் இனிப்புகான உங்கள் பசியையும் திருப்திப்படுத்துகிறது. 


மேலும் படிக்க | பீதியை கிளப்பும் JN.1 வகை கொரோனா... அறிகுறிகளும் முன்னெச்சரிக்கைகளும்!


வேகவைத்த ஆப்பிள் துண்டுகள்: 


ஒரு ஆப்பிளை (Apple) துண்டாக்கி, இலவங்கப்பட்டை பொடி தூவி, மென்மையாகும் வரை அடுப்பில் சுட வேண்டும். ஆப்பிளில் நார்ச்சத்து அதிகமாகவும் கலோரிகள் குறைவாகவும் உள்ளது. அதே சமயம் இலவங்கப்பட்டை சூடான மற்றும் ஆறுதலான சுவையை சேர்க்கிறது. இந்த சிற்றுண்டி சர்க்கரைகள் இல்லாமல் இயற்கையான இனிப்பை வழங்குகிறது மற்றும் குளிர்ந்த குளிர்கால நாட்களில் சூடாக அனுபவிக்க சிறந்தது. 


வறுத்த மக்கானா: 


மக்கானா (Makhana) சாப்பிடுவதற்கு ஆரோக்கியமான தின்பண்டங்களில் ஒன்றாகும். குளிர்கால எடை இழப்பு உணவுக்கு இது ஒரு சிறந்த உணவாக இருக்கும். வறுத்த மக்கானாக்கள் உணவில் சுவையை சேர்ப்பதோடு வயிற்றுக்கும் இலகுவாக இருக்கும். புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த இது, வயிற்றை நீண்ட நேரம் நிரம்பிய உணர்வுடன் வைத்திருக்கும். 


டார்க் சாக்லேட்டில் பாதாம்: 


பாதாமுடனான டார்க் சாக்லேட் (Dark Chocolate) ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் ஆண்டிஆக்சிடெண்ட் இரண்டையும் வழங்கும் திருப்திகரமான விருந்தாக இருக்கும். சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க, அதிக அளவு கோகோ (70% அல்லது அதற்கும் அதிகமான) உள்ள டார்க் சாக்லேட்டைத் தேர்ந்தெடுக்கவும். மொறுமொறுப்பான பாதாம் மற்றும் டார்க் சாக்லேட் ஆகியவற்றின் கலவையானது உங்கள் எடை இழப்பு முயற்சிகளைத் தடுக்காமல் உங்கள் பசியைப் பூர்த்தி செய்ய உதவும்.


எடை இழப்புக்கான (Weight Loss) சிற்றுண்டிகள் அதாவது ஸ்னாக்ஸ் (Snacks) என்று வரும்போது அவற்றின் அளவு மிக முக்கியம். ஆகையால் இவற்றை உட்கொள்ளும் அளவுகளில் கவனமாக இருங்கள். இதனுடன் ஆரோக்கியமான சமச்சீரான உணவுகளை உட்கொளவதும், உடற்பயிற்சி மற்றும் பிற வழக்கமான உடல் செயல்பாடுகளில் ஈடுபடுவதும் மிக அவசியம்.


(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | Health Alert: இந்த பிரச்சனை இருந்தா, தக்காளிக்கு ஸ்டிரிக்டா நோ சொல்லிடுங்க...


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ