Weight Loss Tips: அதிகரிக்கும் எடை மற்றும் உடல் பருமன் இன்றைய காலத்தின் மிகப்பெரிய பிரச்சனைகளாக மாறியுள்ளன்ன. உணவு மற்றும் வாழ்க்கை முறை தொடர்பான தொந்தரவுகள் மற்றும் மரபணு காரணங்களால் பலருக்கு உடல் எடை அதிகரிக்கிறது. உடல் பருமன் காரணமாக ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், கொலஸ்ட்ரால் போன்ற கடுமையான நோய்களும் உடலை ஆட்கொள்ளலாம். உடல் பருமனை குறைக்க அல்லது எடை குறைக்க, மக்கள் பல்வேறு வகையான முயற்சிகளை எடுக்கிறார்கள். கடுமையான உணவு கட்டுப்பாடுகளை பின்பற்றுகிறார்கள். எனினும் சில எளிய வழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம். அப்படி ஒரு வழியை பற்றி இந்த பதிவில் காணலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கருப்பு திராட்சை (Black Grapes)


கருப்பு திராட்சை சாப்பிடுவது உடல் எடையை குறைக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? கருப்பு திராட்சையை உட்கொள்வது, உடலில் தேங்கியுள்ள கூடுதல் கொழுப்பை எரித்து, தொப்பை கொழுப்பை (Belly Fat) கரைத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. உடல் எடையை குறைக்க கருப்பு திராட்சை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் அதற்கான சரியான வழி பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.


எடை இழப்புக்கு கருப்பு திராட்சையின் நன்மைகள் (Black Grapes For Weight Loss): 


உடல் எடையை குறைக்க (Weight Loss), போதுமான அளவு நார்ச்சத்து, ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் சி உள்ள உணவுகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இந்த சத்துக்கள் உள்ள உணவுகளை உட்கொள்வதால் உடலின் மெட்டபாலிசம் மேம்படும், இது உடல் எடையை குறைக்க உதவும். திராட்சை சாப்பிடுவது உடல் எடையை குறைக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வைட்டமின் சி, நார்ச்சத்து, ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், ஆர்கானிக் அமிலங்கள் மற்றும் பாலியோஸ் போன்ற சத்துக்கள் திராட்சையில் உள்ளன. திராட்சையில் கிடைக்கும் இந்த சத்துக்கள் உடல் எடையைக் குறைக்க உதவுவது மட்டுமல்லாமல் அஜீரணம், வயிற்று வாயு, எரியும் உணர்வு மற்றும் வலியைக் குறைக்கவும் உதவுகிறது.


மேலும் படிக்க | வெறும் வயிற்றில்நெல்லிக்காய் ஜூஸ்... உடலில் ஏற்படும் அதிசய மாற்றங்கள்!


கருப்பு திராட்சை (Grapes) உடலில் சேரும் நச்சுக்களை வெளியேற்றவும் உதவுகிறது. இதனை தொடர்ந்து உட்கொள்வது உடலின் உள் உறுப்புகளுக்கு நன்மை பயக்கும். கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் உள்ளிட்ட செரிமான அமைப்பை வலுப்படுத்த கருப்பு திராட்சை உட்கொள்ள வேண்டும். சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் கருப்பு திராட்சையில் காணப்படுகின்றன, இது எடையைக் குறைக்கவும், உடலில் சேரும் கூடுதல் கொழுப்பை எரிக்கவும் (Fat Burning) உதவுகிறது.


எடை இழப்புக்கு கருப்பு திராட்சை சாப்பிடுவது எப்படி? (How To Eat Black Grapes for Weight Loss)


கருப்பு திராட்சையை சீரான அளவில் உட்கொள்வது உடல் எடையை குறைக்கும். கருப்பு திராட்சையை பல வழிகளில் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். காலை உணவு முதல் மதியம் மதிய உணவு மற்றும் மாலை சிற்றுண்டி ஆகியவற்றில் இதை எளிதாக உட்கொள்ளலாம். கருப்பு திராட்சை சாறும் குடிக்கலாம். இது எடை குறைக்க உதவுகிறது. கருப்பு திராட்சை சாப்பிடுவது கொலஸ்ட்ராலை (Cholesterol)குறைக்கவும், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை (Immunity) பராமரிக்கவும் உதவுகிறது.


கருப்பு திராட்சையை சீரான அளவில் உட்கொள்வது உடலுக்கு நன்மை பயக்கும். திராட்சையில் சாலிசிலிக் அமிலம் உள்ளது. அதை அதிகமாக உட்கொள்வது செரிமான அமைப்பு தொடர்பான பிரச்சனைகளின் அபாயத்தை அதிகரிக்கிறது. கருப்பு திராட்சையை அதிக அளவில் உட்கொள்வது வயிற்று வலி, வாயு மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவற்றை ஏற்படுத்தும். இது தவிர சர்க்கரை நோய் போன்ற பிரச்சனைகளில் மருத்துவரின் ஆலோசனையின்றி உட்கொள்ளக் கூடாது.


மேலும் படிக்க | Weight Loss Diet: ஒரே மாதத்தில் 10 கிலோ எடை குறைய... உங்களை ஏமாற்றாத ‘டயட் பிளான்’ இதோ!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ