தீபாவளி என்றதுமே பட்டாசுகளுக்கும், ஸ்வீட்டுகளுக்கும் தான் ஞாபகம் வரும். நிறைய ஸ்வீட் சாப்பிடுவதால் செரிமானத்தில் பிரச்னை ஏற்படும் எனவே அஜீரணக் கோளாறுகளை நீக்குவதற்கு தீபாவளி லேகியத்தை சாப்பிடவேண்டும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

லேகியம் செய்யும் முறை:-


*1௦ கிராம் அரிசி திப்பிலி, 1௦ கிராம் கண்டந்திப்பிலி, 1௦ கிராம் சுக்கு, 1௦ கிராம் சித்தரத்தை ஆகியவற்றை இடித்து தூள் செய்துக் கொள்ளவும்


* வாணலியில் 1௦௦ கிராம் வெண்ணெய், 1௦௦ கிராம் கட்டி வெல்லம், அரைக்கப் தேன் இவற்றை தவிர மற்ற எல்லா பொருட்களையும் ஒவ்வொன்றாக போட்டு வாசனை வரும் வரை வறுக்கவும். வறுத்தப்பின் ஒரு தட்டில் கொட்டி ஆற வைக்கவும். ஆறியதும் 2 கப் தண்ணீர் ஊற்றி 8 மணி நேரம் ஊற வைக்கவும். நன்றாக ஊறியதும் எடுத்து மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்க்காமல் விழுதாக அரைக்கவும். 


* வாணலியில் சிறுது வெண்ணெயை போட்டு உருக விட்டு பின்னர் அதை மற்றொரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும். பின்னர் அரைத்த விழுதை ஊற்றி 3 நிமிடம் வரை வதக்கவும்.


* பிறகு அதில் வெல்லத்தை அதில் போட்டு வெல்லம் கரைந்து லேகியத்துடன் சேரும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும். லேகியத்தில் சிறிது நெய்யை ஊற்றி விட்டு கிளறவும். நன்கு சுருண்டு வரும் போது நெய் மேலே மிதக்கும் பதம் வந்ததும் இறக்கி வைத்து விடவும். லேகியம் ஆறியதும் அதன்மேல் தேனை சேர்த்து கிளறி சாப்பிட்டு வந்தால் அஜீரண கோளாறு இருக்காது.