திருவாதிரைக்களி எப்படி செய்வது!!
திருவாதிரைக் களி என்பது திருவாதிரை நோன்பை நிறைவு செய்யும் ஓர் உணவாகும். இது மார்கழி மாதத் திருவாதிரை நாளில் இறைவனுக்குப் படைக்கப்படுகிறது.
திருவாதிரைக் களி செய்யும் முறை:-
பச்சரிசி- 2 கப்
வெல்லம்- 400 கிராம்
நெய்- 1/4 கப்
முந்திரி- தேவையான அளவு
திராட்சை- தேவையான அளவு
துருவிய தேங்காய் துருவல்- 1/2 கப்
ஏலக்காய் பொடி- 1/2 மேசைக்கரண்டி
வெறும் வாணலியில் பச்சரிசியை போட்டு 10 நிமிடம் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
பிறகு அதை ஆறவைத்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். பிறகு சல்லடையில் போட்டு சலித்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் மூன்றரை கப் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும். கொதித்ததும் 1/2 கப் தண்ணீரை எடுத்து வைத்து விடவும்.
பாத்திரத்தில் இருக்கும் தண்ணீரில் பொடித்த மாவை சிறிது சிறிதாக சேர்த்து, நன்கு கைவிடாமல் கட்டிவிழாதவாறு கிளறவும்.
தண்ணீர் கொதிக்கும் நேரத்தில் வேறொரு பாத்திரத்தில் வெல்லத்தை போட்டு 1/4 கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து வெல்லத்தை கிளறவும்.
வெல்லம் கரைந்தது பாகு ஆவதற்கு முன்பதம் வரும் வரை கிளறவும். பிறகு அதை எடுத்து மாவுடன் ஊற்றி கிளறவும்.
மாவுடன் பாகு ஒன்றாக கலந்ததும் 10 நிமிடம் வேக விடவும். ஏலப்பொடியை சேர்க்கவும்.
வாணலியில் ஒரு மேசைக்கரண்டி நெய் ஊற்றி அதில் முந்திரி, திராட்சை, தேங்காய்த் துருவல் போட்டு 3 நிமிடம் வதக்கவும்.
வதக்கியவற்றை களியுடன் சேர்த்து கிளறவும். மீதம் இருக்கும் நெய்யை ஊற்றி நன்கு கிளறி விட்டு இறக்கி விடவும். மாவை தண்ணீரில் போட்ட பிறகு அடுப்பை மிதமான தீயில் வைத்து செய்யவும். கிளறும் போது களி சற்று கெட்டியாக இருந்தால், முன்பு எடுத்து வைத்த தண்ணீரை ஊற்றி கிளறிக் கொள்ளவும்.
திருவாதிரை களி ரெடி.