Weight Loss Tips: எடை அதிகரிப்பு ஒரு தீவிர பிரச்சனையாக மாறி வருகிறது. உடல் பருமன் ஒருவரது அழகைக் குறைப்பது மட்டுமல்லாமல் நீரிழிவு, புற்றுநோய், கொலஸ்ட்ரால், இதய நோய்கள் மற்றும் தைராய்டு போன்ற பல கடுமையான நோய்களையும் ஏற்படுத்துகிறது. உடல் எடை அதிகரிப்பதற்கான முக்கிய காரணங்கள் பல உள்ளன, அவற்றில் அதிக செயல்பாடுகள் இல்லாத வாழ்க்கை முறையும் மோசமான உணவு முறையும் முக்கிய பங்கு வகிக்கின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உடல் எடையை குறைக்க என்ன வழிகள்? உடல் எடை மிக எளிதாக விரைவாக அதிகரித்து விடும். ஆனால், அதை குறைப்பது மிக கடினம். உடல் எடையைக் குறைக்க, மக்கள் பல வித முயற்சிகளை எடுக்கிறார்கள். சிலர் ஜிம் சென்று உடற்பயிற்சிகளை செய்கிறார்கள். சிலர் கடுமையான உணவு கட்டுப்பாடுகளை மேற்கொள்கிறார்கள்.  ஆனால், எவ்வளவு கடினமாக உழைத்தாலும் பலருக்கு எதிர்பார்த்த பலன் கிடைப்பதில்லை. ஆனால், சில எளிய இயற்கையான வழிகளில் நாம் உடல் எடையை குறைக்க முடியும். அப்படி ஒரு எளிய வழியை பற்றி இந்த பதிவில் காணலாம்.


உங்கள் உணவுப் பழக்கத்தை மேம்படுத்துவதன் மூலம் எடையைக் குறைக்கலாம். தொப்பையை (Belly Fat) குறைக்க, சமையலறையில் நாம் தினமும் பயன்படுத்தும் பலவகை பொருட்களே ஆயுர்வேத மூலிகைகளாக பயன்படுகின்றன. நமது வயிற்றில் உள்ள கூடுதல் கொழுப்பை சரியான நேரத்தில் குறைத்து உடல் எடையை குறைக்கும் சில ஆயுர்வேத பானங்களை பற்றி இந்த பதிவில் காணலாம். இந்த பானங்களை தயாரிக்க, மஞ்சள், இலவங்கப்பட்டை, துளசி இலைகள் மற்றும் இஞ்சி போன்ற மூலிகைகள் தேவைப்படும்.


கொழுப்பு இழப்புக்கான பானம் (Fat Loss Drink)


இங்கே குறிப்பிடப்பட்டுள்ள பானம் உங்களை உடனடியாக எடை இழக்க வைத்து மெலிதாக மாற்றும். கொழுப்பை குறைத்து உடல் எடையை குறைக்க வீட்டிலேயே தயாரிக்கக்கூடிய பானத்தை பற்றி இங்கே காணலாம். 


இஞ்சி


இஞ்சியை (Ginger) உட்கொள்வதால் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன. இஞ்சியில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் எடையைக் குறைக்கவும் அதை கட்டுப்படுத்தவும் உதவுகின்றன. இது தவிர இஞ்சி உப்பசத்தை குறைத்து வளர்சிதை மாற்றத்தையும் ஊக்குவிக்கிறது.


இலவங்கப்பட்டை


இலவங்கப்பட்டை (Cinnamon) பல வித ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. இது இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தவும், தேவையற்ற பசியை கட்டுப்படுத்தவும், வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் மற்றும் அதிகப்படியான தொப்பையை குறைக்கவும் உதவுகிறது.


மேலும் படிக்க | எச்சரிக்கை! இதய நரம்புகளை பலவீனமாக்கும் ‘சில’ ஆபத்தான உணவுகள்!


மஞ்சள்


உடல் எடையை குறைக்கும் வீட்டு மசாலாக்களில் மஞ்சளுக்கு (Turmeric) முக்கிய பங்கு உள்ளது. மஞ்சள் உடலில் கொழுப்பு குவிவதைத் தடுக்கிறது, வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது, பசியை அடக்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக தேவையற்ற, ஆரோக்கியமற்ற உணவுகளை நாம் அடிக்கடி உட்கொள்வது தவிர்க்கப்படுகின்றது. இதுமட்டுமின்றி, இதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உப்பசத்தைக் குறைக்கவும் உதவியாக இருக்கும்.


துளசி இலைகள்


துளசி (Tulsi) வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது. இதன் மூலம் நமது உடலின் வளர்சிதை மாற்றம் வேகமாகும், கலோரிகளை எரிப்பது எளிதாகும். இது இயற்கையான முறையில் செரிமானத்தை ஊக்குவிக்கவும், உங்கள் உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றவும் உதவுகிறது.


கொழுப்பை குறைக்கும் பானத்தை எப்படி தயார் செய்வது? 


- ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் 1-2 துளசி இலைகளை சேர்க்கவும்
- இதற்குப் பிறகு இதில் ஒரு துண்டு இலவங்கப்பட்டை சேர்க்கவும்
- இதற்குப் பிறகு 1/4 தேக்கரண்டி மஞ்சள்தூள் கலக்கவும்
- பின்னர் ஒரு அங்குல துருவிய இஞ்சி சேர்க்கவும்
- இந்த கலவையை குறைந்தது 10 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்


எடையை இழக்க இந்த கொழுப்பு இழப்பு பானத்தை எப்போது குடிக்க வேண்டும்?


இந்த கலவை உடல் எடையை (Weight Loss) குறைப்பதில் பயனுள்ளதாக இருக்கும் என்றும், இதனால் எந்த பக்கவிளைவுகளும் இல்லை என்றும் உணவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். உடல் எடையை குறைக்க இதை உட்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், சளி தொடர்பான நோய்களைத் தவிர்க்கவும் உதவுகிறது. சிறந்த முடிவுகளை பெற, இந்த பானத்தை (Weight Loss Drink) காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ளுங்கள். எனினும், நீண்ட காலத்திற்கு கொழுப்பு சேராமல் ஆரோக்கியமாக வாழ நினைத்தால், இந்த பானத்துடன் உங்கள் முழு வாழ்க்கை முறையையும் நீங்கள் கட்டுப்பாட்டுடன் வைத்திருக்க வேண்டும். இதனுடன், உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருப்பதும் ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்வதும் அவசியம்.


(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | கல்லீரலை இரண்டே வாரத்தில் டீடாக்ஸ் செய்யும் ‘சூப்பர்’ உணவுகள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ