நரை முடிக்கு நேச்சுரல் ஹேர் டை.. வீட்டில் இருக்கும் இந்த 3 பொருட்கள் போதும்
Natura black hair color: இந்த கட்டுரையில், சமையலறையில் உள்ள சில பொருட்களின் உதவியுடம் இயற்கையான முடி சாயத்தை எவ்வாறு தயாரிப்பது என்பதை தெரிந்துக்கொள்வோம். இதனால் உங்கள் தலைமுடியின் மோசமான நிலையை நீங்கள் எளிதாக மேம்படுத்த முடியும்.
நரை முடிக்கு வீட்டிலேயே தயார் செய்யலாம் நேச்சுரல் ஹேர் டை: முடியை கருப்பாக்க சந்தையில் பல வகையான ஹேர் டைகள் விற்கப்படுகிறது, ஆனால் அவற்றைப் பயன்படுத்திய பிறகு முடி நரைப்பது குறையாது, அந்த ஹேர் டைகள் சில நாட்களுக்கு தான் வெள்ளை முடியை மறைக்கின்றன. அதேசமயம், வீட்டில் தயாரிக்கப்படும் சாயத்தைப் பூசினால், அது முடியை வலுவாக்குகிறது, கூந்தலின் நீளத்தை அதிகரிக்கிறது, முடி கருமையாகிறது மற்றும் நரைப்பதை நிறுத்த உதவுகிறது, ஏனெனில் அதில் இயற்கை பொருட்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. இந்த நிலையில் இந்த கட்டுரையில், சமையலறையில் இருக்கும் சில பொருட்களின் உதவியுடன் இயற்கையான முறையில் முடி சாயத்தை எவ்வாறு தயாரிப்பது என்பதை தெரிந்துக்கொள்வோம். மேலும் இதனால் உங்கள் தலைமுடியின் மோசமான நிலையை நீங்கள் எளிதாக மேம்படுத்த முடியும்.
கூந்தல் நரைப்பதற்கு இதுவே முக்கிய காரணம்
பொதுவாக நம் உடலில் இயற்கையாகவே மெலனின் அளவு குறையும் போது அது கூந்தலிலும் பிரதிபலிக்கும். கருமையான கூந்தலுக்கு நிறத்தைக் கொடுப்பது இந்த மெலனின் தான். இந்த மெலனின் உடலில் குறையும் போது நமது கூந்தலின் நிறம் மாறுகிறது. இது நரைமுடிக்கு முக்கிய காரணமாகும்.
மேலும் படிக்க | எண்ணெய் குளியல் எப்போது குளிக்கணும்..! இதை தெரிஞ்சுக்கோங்க..
நேச்சுரல் ஹேர் டையை எவ்வாறு தயாரிப்பது
நேச்சுரல் ஹேர் டை தயார் செய்ய தேவையான பொருட்கள்:
இந்த நேச்சுரல் ஹேர் டை தயார் செய்ய, உங்களுக்கு 5 முதல் 6 மாதுளைத் தோல்கள், ஒரு சிறிய ப்ரூ காபி பவுடர், ஒரு டீஸ்பூன் செங்கருங்காலி பவுடர், ஒரு தேக்கரண்டி நெல்லிக்காய் தூள், 5 தேக்கரண்டி மருதாணி தூள் மற்றும் ஒரு கிளாஸ் தண்ணீர் தேவை.
நேச்சுரல் ஹேர் டை செய்முறை:
இதை தயார் செய்ய உங்களுக்கு இரும்புச் சட்டி ஒன்று தேவை. பிறகு இந்த சட்டியை கேஸ் மீது வைத்து அதில் ஒரு கிளாஸ் தண்ணீரை வைத்து சூடாக்க வேண்டும். அதன் பிறகு மாதுளை தோல்கள், செங்கருங்காலி பவுடர், நெல்லிக்காய் தூள், ப்ரூட் காபி சேர்த்து 15 நிமிடம் குறைந்த தீயில் நன்கு சமைக்கவும். அதன் பிறகு, கேஸை அணைத்து, இந்த கலவையை இரவு முழுவதும் மூடி ஊற வைக்கவும். இப்போது காலையில், ஒரு பாத்திரத்தில் வடிகட்டியின் உதவியுடன் கலவையை வடிகட்டி, ஒரு இரும்பு பாத்திரத்தில் 5 ஸ்பூன் மருதாணி தூள் போட்டு, மேலே இருந்து கலவையை கலக்கவும். பின் இதையும் 6 மணி நேரம் இரும்பு சட்டியில் வைத்து, அதன் பிறகு தலைமுடியில் தடவ வேண்டும். இந்த சாயத்தை குறைந்தது 2 மணிநேரம் ஊற வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் நினைத்த பலன் கிடைக்கும். எனவே, உங்கள் நேச்சுரல் ஹேர் டை ரெடி.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | உங்கள் கால்களை பலவீனமாக்கும் ‘சில’ ஆபத்தான பழக்கங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ