கெட்ட கொலஸ்ட்ராலை 7 நாட்களில் குறைக்க வேண்டுமா? இந்த 4 உணவுகளை சாப்பிடுங்கள்
கெட்ட கொலஸ்ட்ரால் அதிகம் இருந்தால் அது உடலுக்கு ஆபத்து. மாரடைப்பு ஏற்படுவதற்குகூட வாய்ப்புகள் இருக்கின்றன. இதனை உணவு முறை வழியாக நீங்கள் குறைக்கலாம்.
நம் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் மெழுகு போன்ற ஒரு பொருள். கொலஸ்ட்ராலில் 2 வகைகள் உள்ளன. ஒன்று குறைந்த அடர்த்தி கொழுப்புப்புரதம் (LDL) மற்றொன்று அதிக அடர்த்தி கொழுப்புப்புரதம் (HDL). உங்கள் இரத்தத்தில் அதிக அளவு எல்டிஎல் இருந்தால், கொழுப்பு படிவுகள், பிளேக் எனப்படும். இது உங்கள் இரத்த தமனிகளில் உருவாகின்றன. தமனிகளில் பிளேக் பிரச்சனை மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது. மறுபுறம், HDL அதாவது இரத்தத்தில் உள்ள நல்ல கொழுப்பு உடலுக்கு நல்லது என்று கருதப்படுகிறது.
கொலஸ்ட்ரால் அதிகரிப்பது அனைவருக்கும் தலைவலியாக மாறிவிட்டது, அதற்கு நாம் ஓரளவு பொறுப்பு. வெளியே சாப்பிடுவது, தவறான உணவுப் பழக்கம், உடற்பயிற்சியின்மை எல்லாமே காரணம். கொலஸ்ட்ரால் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் தங்கள் வாழ்க்கை முறை மற்றும் உணவு முறைகளில் அதிக கவனம் செலுத்துவது அவசியம். உங்கள் கொலஸ்ட்ரால் பிரச்சனையை கணிசமாக குறைக்கும் சில உணவுகள் உள்ளன.
எனவே கொலஸ்ட்ராலை குறைக்க எந்தெந்த உணவுகள் உதவுகின்றன என்பதை இன்று பார்க்கலாம். நீங்களோ அல்லது உங்கள் குடும்பத்தில் யாரேனும் கொலஸ்ட்ரால் பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களுக்கும் இந்த வைத்தியம் சொல்லி உதவுங்கள்.
மேலும் படிக்க | எக்கச்சக்கமா கொழுப்பு இருக்கா? தினமும் இதை சாப்பிடுங்க.. சட்டுனு குறைக்கலாம்
சியா விதைகள்
சியா விதைகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், நார்ச்சத்து மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் அதிகம். எனவே சியா விதைகளை எப்போதும் உணவில் பயன்படுத்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். சியா விதைகளை சாப்பிடுவது எல்டிஎல் கொழுப்புடன் சேர்ந்து இரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் வைத்திருக்கும்.
பார்லி
பார்லியில் பீட்-குளுக்கோன் உள்ளது. இது இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது. பீட்டா-குளுக்கன் ஆண்டிமைக்ரோபியல், ஆன்டி-கார்சினோஜெனிக், ஆன்டி-டயாபெடிக் மற்றும் ஆன்டி-ஹைபர்கொலஸ்டிரோலெமிக் போன்ற பல முக்கிய பண்புகளைக் கொண்டுள்ளது, இது இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்கும். எனவே, உணவில் பார்லி பயன்பாடு மிகவும் முக்கியமானது.
தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெய் நல்ல மற்றும் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கிறது. சரியான அளவில் எடுத்துக் கொண்டால் உடலுக்கு நல்லது.
சோயாபீன்ஸ்
சைவ உணவு உண்பவர்களுக்கு சோயாபீன்ஸ் சிறந்த வழி. சோயாபீன்களில் கொழுப்புகள், நார்ச்சத்து மற்றும் புரதங்கள் நிறைந்துள்ளன. கொலஸ்ட்ராலைக் குறைக்க இது மிகவும் நன்மை பயக்கும்.
வால்நட்
மிக முக்கியமாக, அக்ரூட் பருப்பில் ஒமேகா -3 கொழுப்புகள் நிறைந்துள்ளன. இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இரத்தத்தில் உள்ள மொத்த கொழுப்பைக் குறைக்கவும், HDL நல்ல கொழுப்பை அதிகரிக்கவும் வால்நட்ஸை உட்கொள்வது எப்போதும் நல்லது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ