Kidney Stones Removal Tips: சிறுநீரக கற்கள் ஒருவருக்கு கடுமையான வயிற்று வலியை ஏற்படுத்தும். கால்சியம், யூரிக் அமிலம், உப்பு, தாதுக்கள் உள்ளிட்டவற்றின் கலவையால் உருவாகும் கற்கள்தான் சிறுநிரக கற்களாகும். இந்த கற்கள் உருவாக பல காரணங்கள் இருக்கின்றன. அவற்றில்  முக்கியமாக பார்க்கப்படுவது, உடல் பருமனுடன் இருப்பது, நீர்ச்சத்து இல்லாமல் இருப்பது, சிறுநீர் வெளியேற்றாமல் இருப்பது போன்றவை இதற்கான காரணிகளாக இருக்கலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சிறுநீரக கல் இருப்பதற்கான அறிகுறிகள்:


>சிறுநீரக கல் இருப்பவர்களுக்கு முதுகு, வயிறு மற்றும் பக்கவாட்டில் வலி ஏற்படுதல்.


>சிறுநீர் கழிக்கும் போது வலி ஏற்படுதல்.


>சிறுநீர் சரியான நிறத்தில் இல்லாமல், சிவப்பு, இளஞ்சிவப்பு அல்லது பழுப்பு நிறத்தில் இருக்கும். 


>அடிக்கடி சிறுநீர் கழிப்பது. 


>இந்த கற்களால், அடிக்கடி வயிற்று வலி ஏற்படும். அப்படி வலி ஏற்படும் போது வாந்தி, குமட்டல் போன்ற உணர்வு ஏற்படும். சாப்பிட்ட உணவு செரிக்காததால் இது போன்ற பாதிப்பு ஏற்படும். 


என்ன சாப்பிட வேண்டும்?


எலுமிச்சை பழங்கள், சிட்ரஸ் பழ வகைகளுள் ஒன்றாகும். இவை, சுவைக்கு மட்டுமல்ல, அவற்றின் அற்புதமான ஆரோக்கிய நன்மைகளுக்கும் பெயர் பெற்றது. எலுமிச்சை, மனித ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் வைட்டமின் சி, நார்ச்சத்து ஆகியவற்றையும் அளிக்கும். 


சிறுநீரக கல்:


எலுமிச்சை பழத்தை உணவில் சேர்த்துக்கொள்வதால் சிறுநீரக கல் ஏற்படாது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இவை, உடலில் பி.எச் அளவை அதிகரித்து அடிக்கடி சிறமமின்றி சிறுநீர் கழிக்க உதவும். இதனால் வயிற்றில் கற்கள்  உருவாகாமல் தடுக்கலாம். உடலுக்கு மட்டுமல்லாமல், உணவில் நல்ல சுவையையும் எலுமிச்சை கூட்டும்.


கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும்:


இருதயத்தை பாதுகாக்கும் ஒரு உணவு பொருட்களுள் ஒன்று, எலுமிச்சை பழம். இது குறித்து வெளியான ஒரு மருத்துவ ஆராய்ச்சி அறிக்கையில், இது நிரூபிக்கப்பட்டுள்ளது. இதில் இருக்கும் சிட்ரிக் அமிலங்கள் இருதயத்தை பாதுகாக்க உதவும். 


மேலும் படிக்க | டீக்கடைக்கு போனா இனி இதை வாங்கி குடியுங்கள்... உடலுக்கு மிகவும் நல்லதாம்!


எடை மேலாண்மை:


சரியான உடல் எடையை பராமரிக்க எலுமிச்சை பழம் உதவும். மெட்டபாலிசத்தை அதிகரித்து, உடல் உறுப்புகளை நன்றாக பார்த்துக்கொள்ளும். எலுமிச்சையில் இருக்கும் சத்து, அதிக பசியை ஏற்படாமல் தடுக்கலாம். 


இரும்பு சத்து:


இரத்த சத்து இல்லாமல், சோகையை எதிர்த்துப் போராடுபவர்களுக்கு, எலுமிச்சை சத்துகளை அதிகரிக்கிறத்து. எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம் தாவர மூலங்களிலிருந்து இரும்பு சத்தினை மேம்படுத்துகிறது, இந்த பொதுவான இரத்தம் தொடர்பான பிரச்சனைகளை எதிர்த்து போராட உதவுகிறது. உங்கள் உணவில் எலுமிச்சையை சேர்த்துக்கொள்வது இரத்த சோகைக்கு எதிராக உங்கள் உடலை வலுப்படுத்த நல்ல உத்தியக இருக்கும்.


செரிமானத்திற்கு உதவும்:


எலுமிச்சையில் இருக்கும் சத்து, உமிழ்நீர் மற்றும் இரைப்பை சாற்றின் உற்பத்தியை தூண்டும். இதனால் செரிமானம் அதிகரித்து மலச்சிக்கலையும்தவிர்க்கும். இதை ந்ணவில் சேர்த்துக்கொள்வதனால் உங்கள் சுவை மொட்டுகளும் நன்றாக மேம்படும். 


அழற்சி எதிர்ப்பு:


நோயெதிர்ப்பு சக்திகளை அதிகரிக்க, எலுமிச்சையினை உங்களின் உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. எலுமிச்சையில் இருக்கும் சத்துகள், பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. 


(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | வெந்தயம் இருக்கும்போது வயகரா எதுக்கு? முளை கட்டி பயன்படுத்தினால் பலன் தரும் அற்புத மசாலா!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ