எலுமிச்சை பழம் நல்லதுதான்! ஆனால் இந்த பக்கவிளைவுகளை தெரிந்து கொள்ளுங்கள்!

வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு, தேன், புதினா இலைகள் அல்லது இஞ்சியை சேர்த்து குடிக்க நல்ல பலன்களை பெறலாம்.  அதிகளவில் எலுமிச்சை நீர் குடித்தால் தலைவலி அல்லது ஒற்றைத்தலைவலி ஏற்படும்.    

Written by - RK Spark | Last Updated : Mar 21, 2023, 06:49 AM IST
  • அதிகளவில் எலுமிச்சை நீர் குடிப்பது முடி உதிர்தலுக்கு வழிவகுக்கும்.
  • நாக்கின் கீழ் அல்லது கன்னங்களின் உள்ளே வாய் புண்கள் ஏற்படும்.
  • அதிகளவில் எலுமிச்சை நீர் குடித்தால் தலைவலி அல்லது ஒற்றைத்தலைவலி ஏற்படும்.
எலுமிச்சை பழம் நல்லதுதான்! ஆனால் இந்த பக்கவிளைவுகளை தெரிந்து கொள்ளுங்கள்! title=

கோடை காலம் தொடங்கிவிட்டாலே பலரும் எலுமிச்சை பழத்தை தேட ஆரம்பித்துவிடுவார்கள், இந்த காலத்தில் எலுமிச்சை தண்ணீர் குடிப்பது புத்துணர்ச்சியுடன் இருக்க செய்ய உதவும்.  எலுமிச்சை சாறில் வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது,  பலரும் தங்களது உடலிலுள்ள நச்சுக்களை வெளியேற்ற காலை வேளையில் எலுமிச்சை சாறு அருந்துகின்றனர்.  எலுமிச்சை சாறு குடிப்பதால் சருமம் பொலிவடைதல், நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் உடல் எடை இழப்பு போன்ற பல நன்மைகள் கிடைக்கிறது. சரும பராமரிப்பிலும் சிலர் எலுமிச்சை பழத்தை பயன்படுத்துகின்றனர்.  தினமும் இரண்டு கிளாஸ் எலுமிச்சை தண்ணீரை குடிப்பது நல்லது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.  ஒரு லிட்டர் தண்ணீரில் நான்கு எலுமிச்சை துண்டுகளை கலந்து அந்த நீரை குடித்தால் உடல் நீரேற்றமாக இருக்கும்.  மேலும் நீங்கள் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு, தேன், புதினா இலைகள் அல்லது இஞ்சியை சேர்த்து குடிக்க நல்ல பலன்களை பெறலாம்.  இப்படி பல நன்மைகள் வாய்ந்த எலுமிச்சை சாறை அதிகளவில் குடிப்பது உடலுக்கு பல ஆரோக்கிய சிக்கல்களை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.  அதிகளவில் எலுமிச்சை சாறை உட்கொள்வதால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதை பின்வருமாறு காண்போம்.

மேலும் படிக்க | தினமும் வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?

1) தினமும் வெறும் வயிற்றில் எலுமிச்சை நீரில் தேன் கலந்து குடிப்பது செரிமானத்திற்கு உதவுகிறது. இருப்பினும், நாள் முழுவதும் அதை குடிப்பதால் வயிற்றின் புறணியில் எரிச்சல் உண்டாகும் மற்றும் செரிமான செயல்முறையை மெதுவாக்கும்.  மேலும் நெஞ்செரிச்சல், வயிற்று வலி, குமட்டல் மற்றும் வாய்வு ஏற்படலாம்.  இதிலுள்ள அதிகப்படியான அமிலத்தன்மை அல்சரைத் தூண்டும் என கூறப்படுகிறது.

2) எலுமிச்சை சாறு உடலில் இருந்து நச்சுகளை அகற்றுவதற்கான சிறந்த டையூரிடிக் ஆக செயல்படுகிறது. இதனை குடிப்பதால் சிறுநீர் வெளியேற்றம் அதிகரிக்கிறது, இவ்வாறு அடிக்கடி சிறுநீர் கழிப்பதால் உடலில் இருந்து எலக்ட்ரோலைட்டுகள் வெளியேறி நீரிழப்பு, உடல் சோர்வு, உதடுகள் வறட்சி மற்றும் அதிகப்படியான தாகம் போன்றவை ஏற்படும்.

3) தினமும் எலுமிச்சை தண்ணீரை அதிகமாக குடிப்பதால் உடலில் நீரிழப்பு ஏற்பட்டு கடுமையான தலைவலி மற்றும் ஒற்றைத் தலைவலி ஏற்படும்.

4) எலுமிச்சையிலுள்ள அதிகப்படியான பற்களில் கூச்ச உணர்வு மற்றும் பல் சிதைவுக்கு காரணமாகிறது.  பற்களில் உள்ள கால்சியம் சத்து அரிக்கப்பட்டு பல் சம்மந்தமான பிரச்சனைகள் ஏற்படுகிறது.  எனவே பற்கூச்சம் ஏற்பட்டால் நீங்கள் எலுமிச்சை போன்ற அமில உணவுகளை உட்கொள்வதைக் கட்டுப்படுத்த வேண்டும்.

5) அதிகளவில் எலுமிச்சை நீர் குடிப்பது முடி உதிர்தலுக்கு வழிவகுக்கும், இது  முடியின் வேர்களை உலர வைப்பதால் முடி சேதமடைந்து அதிகளவில் முடி உதிர்கிறது.

6) நாக்கின் கீழ் அல்லது கன்னங்களின் உள்ளே வாய் புண்கள் ஏற்படும்.  அமில அல்லது காரமான உணவுகளை அதிகமாக உண்பவர்கள், வைட்டமின் குறைபாடு உள்ளவர்கள் போன்றவர்களுக்கு இதுபோன்ற புண்கள் ஏற்படும்.  அப்படிப்பட்ட சமயத்தில் அதிகப்படியான எலுமிச்சை தண்ணீரை குடிப்பதால் இந்த புண்கள் மேலும் மோசமடையும்.

மேலும் படிக்க | தூக்கமின்மைக்கு தீர்வுகளை கொடுக்கும் AI..! இனி நிம்மதியாக தூங்கலாம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News