வேகமா எடை குறைய வெதுவெதுப்பான நீரில் இதை கலந்து குடிங்க போதும்.. மேஜிக் நடக்கும்
Weight Loss Tips: சமீப காலங்களில் உடல் பருமன் மக்களிடையே அதி வேகமாக அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக சிறு வயதிலேயே சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், இதய நோய்கள் போன்ற நோய்களும் நம்மை ஆட்கொள்கின்றன.
Weight Loss Tips: இன்றைய காலகட்டத்தில் பலருக்கு உள்ள ஒரு பொதுவான இலக்கு உடல் எடையை குறைப்பதுதான். இதற்கு இந்த காலத்தில் பல வழிகளும் உள்ளன. ஜிம், டயட் என பல வித முயற்சிகளை மேற்கொண்டு மக்கள் உடல் எடையை குறைக்க முயற்சிக்கிறார்கள். எனினும் இவற்றாலும் சில சமயங்களில் அனைவருக்கும் நினைத்த பலன்கள் கிடைப்பதில்லை. தவறான உணவுப் பழக்கம், வாழ்க்கை முறை, உடற்பயிற்சியின்மை, மன அழுத்தம் போன்ற காரணங்களால் பெரும்பாலானோர் உடல் பருமனை எதிர்கொள்கின்றனர். தொப்பை கொழுப்பு (Belly Fat), உடல் பருமன் ஆகியவை ஒரு நபரின் முழு ஆளுமையையும் கெடுத்துவிடுகிறது. இதனால், பலரது தன்னம்பிக்கையும் நிலைகுலைந்து விடுகிறது. இது தவிர அதிக எடையால் பல வித உடல் நல கோளாறுகளும் ஏற்படுகின்றன.
சமீப காலங்களில் உடல் பருமன் மக்களிடையே அதி வேகமாக அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக சிறு வயதிலேயே சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், இதய நோய்கள் போன்ற நோய்களும் நம்மை ஆட்கொள்கின்றன. உடலில் அதிகரிக்கும் கொழுப்பை சரியான நேரத்தில் கட்டுப்படுத்தாவிட்டால், அது மற்ற கடுமையான நோய்களுக்கு வழிவகுக்கும். ஆகையால், ஒருவர் ஆரோக்கியமாக இருக்க விரும்பினால், தனது உடற்தகுதியில் கவனம் செலுத்தத் தொடங்குவது மிகவும் அவசியம்.
உடல் எடையை குறைக்கும் முயற்சியில் நாம் பிற பக்க விளைவுகளுக்கும் ஆளாகிவிடக் கூடாது என்பதும் முக்கியமான ஒன்று. ஆகையால் இயற்கையான வழிகளில் உடல் எடையை குறைப்பது எப்போதும் நன்மை பயக்கும். எடை இழப்புக்கான முதல் படி, குறைந்த கலோரி உணவுகளை உட்கொள்வதாகும். சில சக்திவாய்ந்த பானங்களை குடிப்பது உங்கள் எடை இழப்பு பயணத்தை துரிதப்படுத்தும். அப்படி ஒரு பானம்தான் ஆப்பிள் சைடர் வினிகர். இதை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிப்பது விரைவான எடை இழப்புக்கு உதவுகிறது.
உடல் எடையை குறைக்க ஆப்பிள் சைடர் வினிகரை எவ்வாறு உட்கொள்வது? (How to Use Apple Cider Vinegar for Weight Loss)
- உடல் எடையை குறைக்க, காலை வேளையில் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் வெந்நீரில் 2 மூடி அளவு, அதாவது சுமார் 20 மில்லி ஆப்பிள் சைடர் வினிகரை நன்றாக கலந்து குடிக்கவும்.
- இது தவிர, உணவுக்கு 15 நிமிடங்களுக்கு முன் இதை உட்கொள்ளலாம்.
- இது உணவை நன்றாக ஜீரணிக்க உதவும்.
- எனினும், இதை அதிக அளவில் உட்கொள்ளக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
மேலும் படிக்க | யூரிக் அமில பிரச்சனையா? இந்த உணவுகளை நம்பி சாப்பிடுங்க.. உடனடி நிவாரணம் கிடைக்கும்
ஆப்பிள் சைடர் வினிகரின் நன்மைகள் (Benefits of Apple Cider Vinegar in Weight Loss):
- உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தினமும் ஆப்பிள் சைடர் வினிகரை குடிக்கலாம்.
- இதன் மூலம் கலோரிகளை குறைத்து, கொழுப்பை கரைத்து வேகமாக உடல் எடையை குறைக்க முடியும்.
- இந்த அற்புதமான பானம் பல வழிகளில் உடல் எடையை குறைக்க உதவுகின்றது.
- இது அவ்வப்போது வரும் பசியை அடக்கி தேவையற்ற ஆரோக்கியமற்ற உணவுகளை நாம் உட்கொள்ளாமல் தவிர்க்கிறது.
- இதை நாம் குடிப்பதால், நாம் அதிகப்படியான கலோரிகளை உட்கொள்வது தவிர்க்கப்படுகின்றது.
- இதன் மூலம் வளர்சிதை மாற்றம் மேம்பட்டு அதன் மூலம் உடல் எடை குறைகின்றது.
- இது செரிமானத்தை மேம்படுத்தி உணவில் இருந்து ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கு உதவுகிறது.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | பிபி அளவு கட்டுக்குள் இருக்க... நீங்கள் கடைபிடிக்க வேண்டியவை..!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ