Pongal 2024: பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் தொடங்கிவிட்டது. மார்கழி கடைசி நாளான இன்று போகி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. தை முதல் நாளான நாளை சூரிய பொங்கல் அதாவது தை பொங்கல் திருநாள் கொண்டாடப்பட உள்ளது. தமிழர்களின் பண்பாடு போற்றும் இந்த பண்டிகையில், சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஒரு அறுவடை திருநாளாக பொங்கல் கொண்டாடப்படுகிறது. தை பொங்கலுக்கு பானையில் பொங்கல் வைத்து, காய்கறிகள், கிழங்கு வகைகள் ஆகியவற்றை படையலிட்டு சூரிய பகவானை நோக்கிய வழிபாடும் நடைபெறும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பொங்கலும் பனங்கிழங்கும்


அந்த வகையில், பொங்கல் என்றால் கரும்பு, மஞ்சள் உள்ளிட்ட பொருள்கள்தான் நினைவுக்கு வரும். அதேபோல், பல பேருக்கு பொங்கல் என்றாலே பனங்கிழங்கும், அதன் ருசியும் சட்டென அவர்களின் மூளைக்கு எதிரொலிக்கும் எனலாம். பொங்கல் படையலை சாப்பிட்ட பின்னர், உறவினர்கள் நண்பர்களுடன் அமர்ந்து கரும்பு சாப்பிடுவது ஒருபுறம் என்றால், வீட்டில் உள்ள பெரியவர்கள் பனங்கிழங்கை அவித்து, அதனை வீட்டில் உள்ள இளையோருக்கு உணவுக்கு பின் கொடுப்பதும் வாடிக்கைதான். பொங்கல் பண்டிகை விடுமுறையின் போது யாரெல்லாம் வீட்டுக்கு வருகிறார்களோ அவர்களுக்கு பனங்கிழங்கை சாப்பிடக் கொடுத்து வரவேற்கும் பழக்கமும் அதிகம் உள்ளது. 


பனங்கிழங்கை எப்படி சாப்பிடலாம்?


பனங்கிழங்கின் வெளிப்புற தோலை முதலில் உரித்து எடுக்க வேண்டும். அதில் நல்ல கனமான பகுதியுடன் உள்ளே இருக்கும் வேர் போன்ற மெல்லிசான பகுதியை நீக்க வேண்டும். பின்னர், ஒரு விரல் அளவிற்கு வெட்டிக் கொள்ள வேண்டும். அதை நன்றாக நீரில் கழுவி, அதனை அவித்து சாப்பிட வேண்டும். அதனை குக்கரில் வைத்து 6 - 10 விசில் வைத்து இறக்கவும். அதில் சிறிது அளவு மஞ்சள் தூளையும், உப்பையும் சேர்த்துக்கொள்ளலாம்.


மேலும் படிக்க | டீடாக்ஸ் முதல் வெயிட் லாஸ் வரை... வெறும் வயிற்றில் வெந்நீர் குடித்தாலே போதும்!


பனங்கிழங்கின் ஊட்டச்சத்துகள்


நார்ச்சத்து: பனங்கிழங்கு நார்ச்சத்து நிறைந்ததாகவும். குடல் இயக்கங்களை இயல்பாக்குவதன் மூலம் மலச்சிக்கலைத் தடுக்கும். வயிறு கோளாறுகளுக்கு நிவாரணம் அளிக்கும். நார்ச்சத்து உட்கொள்வதை அதிகரிப்பது இருதய நோய் மற்றும் புற்றுநோய்களை உருவாக்கும் அபாயத்தைக் குறைக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


இரும்புச்சத்து: பனங்கிழங்கில் நார்ச்சத்துடன் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. இரும்புச்சத்து பெண்களுக்கு ஆரோக்கியமான பிரசவத்திற்கு உதவும். ஆற்றலை அதிகரிக்கும். மேலும், விளையாட்டு போன்ற செயல்பாடுகளில் சுறுசுறுப்பாக இருக்கவும் உதவும். 


புரதமும் இருக்கு...: பனங்கிழங்கில் இருக்கும் முக்கியமான ஊட்டச்சத்து கால்சியம் ஆகும். இது தசை சுருக்கம், வலுவான எலும்புகள் மற்றும் பற்களை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கும் மிகவும் அவசியமான சத்தாகும். இது ஆஸ்டியோபோரோசிஸ், கீல்வாதம் போன்ற வயது தொடர்பான எலும்பு கோளாறுகளைத் தடுக்கிறது. பனங்கிழங்கில் உள்ள மெக்னீசியம் இதய ஆரோக்கியத்தை பராமரிக்க பயன்படுகிறது. இது இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் உற்பத்தியை சீராக்க உதவுகிறது என்றும் தெரிவிக்கப்படுகிறது. பனங்கிழங்கு புரதத்தின் நல்ல மூலமாகும். உடலில் உள்ள ஒவ்வொரு செல்லிலும் புரதம் ஒரு முக்கிய அங்கம் என்பதை அனைவரும் அறிவார்கள். 


மேலும் படிக்க | Diabetes Symptoms: ‘இந்த’ அறிகுறிகள் இருந்தா... உடனே பரிசோதித்து பாருங்க..!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ