Diabetes Symptoms: ‘இந்த’ அறிகுறிகள் இருந்தா... உடனே பரிசோதித்து பாருங்க..!!

நீரிழிவு நோய் ஒரு தீவிர நோயாகும். முன்னர் வயதானவர்களையே அதிகம் ஆட்கொண்டு வந்த இந்த நோய் இப்போது அனைத்து வயதினரையும் பரவலாக தாக்கி வருகிறது. இதற்கான நிரந்தரமான மற்றும் துல்லியமான சிகிச்சை இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்பது கவலைக்குரிய விஷயமாகும். 

மக்களின் வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் உடற்பயிற்சி செய்யாதது போன்ற தவறுகளால், உயர் இரத்த சர்க்கரை அளவு என்னும் நீரிழிவு நோய் இப்போது மிகவும் பொதுவான பிரச்சனையாக ஆகிவிட்டது.

1 /6

சர்க்கரை நோய் ஒரு நாள்பட்ட நோய் என்றும், அதனால் அவதிப்படுபவர் தனது வாழ்நாள் முழுவதும் மருந்துகளை உட்கொள்ள வேண்டியிருக்கும். எனவே, நீரிழிவு நோயின் அறிகுறிகளை அலட்சியம் செய்ய கூடாது. நீரிழிவு நோயைத் தடுக்க, மிக முக்கியமான விஷயம் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைப்பிடிப்பது மற்றும் ஆரோக்கியமாக இருக்க நல்ல பழக்கங்களைப் பின்பற்றுவது. 

2 /6

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், அடிக்கடி தாகத்தை உணர்வு ஏற்படும். அதோடு, அடிக்கடி பசி எடுப்பது நீரிழிவு நோயின் அறிகுறியாகும். எனவே இந்த அறிகுறி இருந்தால், உடனே மருத்துவரை ஆலோசிக்கவும்  

3 /6

இரவில் அடிக்கடி எழுந்து சிறுநீர் கழிக்க வேண்டியவர்கள் சர்க்கரை நோயின் அறிகுறியாக இருக்கலாம் என்பதால் சர்க்கரை நோய் இருக்கிறதா என்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். 

4 /6

நீரிழிவு நோயின் முக்கியமான ஆரம்ப அறிகுறிகளில் ஒன்று விரைவான எடை இழப்பு. எந்த காரணமும் இல்லாமல் உங்கள் எடை வேகமாக குறைந்து கொண்டே இருந்தால், உங்கள் இரத்த சர்க்கரை அளவை பரிசோதிக்க வேண்டும். இது நீரிழிவு தொடர்பான பிரச்சனையாக இருக்கலாம்.

5 /6

உயர் இரத்த சர்க்கரை அளவு காரணமாக, மிகவும் சோர்வாக உணரலாம். சர்க்கரை நோய் இருந்தால், அத்தகையவர்கள் நல்ல தூக்கத்திற்குப் பிறகும் பகலில் மிகவும் சோர்வாக உணர்கிறார்கள். உங்களுக்கு இவ்வாறு இருந்தால், சர்க்கரை நோய்க்கான பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

6 /6

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)