தைராய்டு காரணமாக உடல் எடை கூடுகிறது, இந்த மாற்றங்களைச் செய்யுங்கள்
தைராய்டு பிரச்சனையால், எடை வேகமாக அதிகரிக்கத் தொடங்குகிறது, அதை உணவில் மாற்றங்களைச் செய்வதன் மூலம் கட்டுப்படுத்தலாம். அதிகரித்து வரும் உங்கள் எடையை எப்படி குறைக்கலாம் என்பதை இங்கு தெரிந்துக்கொள்வோம்.
தைராய்டு நோயாளிகளுக்கு உடல் எடையை குறைக்க சிறந்த உணவுகள்: தைராய்டு என்பது ஒரு வகை சுரப்பி ஆகும், இது உடலின் வளர்சிதை மாற்ற சக்தி என்றும் அழைக்கப்படுகிறது. தைராய்டு சுரப்பி நமது உடல் நன்றாக வேலை செய்ய உதவுகிறது மற்றும் உடலை ஆரோக்கியமாக வைக்கிறது. ஆனால் நீங்கள் ஹைப்போ-தைராய்டிசம் பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்தால், அதன் முதல் அறிகுறியை விரைவான எடை அதிகரிப்பு என்று அழைக்கலாம். ஆனால் நல்ல விஷயம் என்னவெனில், தைராய்டு கோளாறுகளால் அதிகரித்து வரும் எடையை, வாழ்க்கை முறை மற்றும் உணவு முறைகளில் மாற்றுவதன் மூலம் குறைக்கலாம். எனவே தைராய்டு காரணமாக அதிகரித்த எடையைக் குறைக்க உணவில் என்னென்ன மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
தைராய்டால் அதிகரித்த எடையை எவ்வாறு குறைப்பது
அதிக பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்ளுங்கள்
உங்கள் உணவில் அதிகமான பழங்கள் மற்றும் காய்கறிகளை சேர்த்துக் கொள்ளும்போது, கலோரிகளை குறைக்கும் அதே வேளையில் உங்கள் உடலில் ஆரோக்கியமான கூறுகள் மற்றும் ஊட்டச்சத்துக்கு வழிவகுக்கிறது. இதன் காரணமாக உங்கள் உடல் மேலும் மேலும் சுறுசுறுப்பாக இருக்க முடியும் மற்றும் எடை அதிகரிக்காது.
மேலும் படிக்க | பார்வையை கூர்மையாக்கும் வைட்டமின் A நிறைந்த ‘சில’ சைவ உணவுகள்!
நார்ச்சத்து உட்கொள்வதை அதிகரிக்கவும்
நீங்கள் அதிக நார்ச்சத்து உட்கொள்ளும் போது, அது உங்கள் வயிற்றை நன்றாக சுத்தம் செய்து, நீண்ட நேரம் நிரம்பியதாக உணர வைக்கிறது.
உயர்தர புரதம்
நீங்கள் உணவில் அதிக புரதத்தை சேர்த்துக் கொள்ளும்போது, உங்கள் வளர்சிதை மாற்றம் மேம்படும் மற்றும் நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்க உதவும்.
செலினியம் நிறைந்த உணவு
நீங்கள் செலினியம் நிறைந்த உணவை உட்கொண்டால், அதாவது பிரேசில் நட்டு, அது தைராய்டு செயல்பாட்டை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
தானிய உட்கொள்ளல்
உங்கள் உணவில் தானியங்கள், அதாவது கோதுமை, சோளம், பருப்பு வகைகளை அதிகமாக உட்கொண்டால், உடல் எடை அதிகரிக்காது.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையை பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிபடுத்தவில்லை.)
மேலும் படிக்க | தினசரி டயட்டில் புளியை சேர்த்துக்கோங்க; எக்கச்சக்க நன்மைகள் இருக்கு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ