வறட்டு இருமல் வீட்டு வைத்தியம்: தற்போது நாட்டின் பல பாகங்களில் பருவமழை பெய்து வருகிறது. மாறிவரும் பருவத்தில், பல வகையான நோய்த்தொற்றுகள் உங்கள் உடலைத் தாக்கத் தொடங்குகின்றன. அதன் பிறகு வறட்டு இருமல் பிரச்சனை தொடங்கிவிடும். ஒருவருக்கு ஒரு முறை வறட்டு இருமல் பிரச்சனை வந்துவிட்டால், அதை சரி செய்வது மிகவும் கடினமாகிவிடும். இது எளிதில் குணமடையாமல் பாடாய் படுத்தும் தன்மை கொண்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வறட்டு இருமல் ஏற்பட்டு விட்டால், அதன் பிறகு இருமலுடன் இரவுகளைக் கழிக்க வேண்டி இருக்கும். அதனால் நிம்மதியாகத் தூங்க முடியாது. சரியான தூக்கம் இல்லாமல் போனால், அடுத்த நாள்  சோர்வாகவும், சோம்பலாகவும் இருப்பதோடு எரிச்சல் உணர்வும் ஏற்படும். சில நேரங்களில் மருந்து மற்றும் இருமல் சிரப் கூட உடனடி விளைவை அளிப்பதில்லை. ஆனால், சில தனிச்சிறப்பு வாய்ந்த வீட்டு வைத்தியங்களின் மூலம் இதற்கு நிவாரணம் காண முடியும். பாட்டி காலத்திலிருந்தே கடைபிடிக்கப்பட்டு வரும் வீட்டு வைத்திய முறைகள் இவை. வறட்டு இருமலுக்கான சில எளிய வீட்டு வைத்தியங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம். 


வறட்டு இருமலில் இருந்து விடுபட இந்த வீட்டு வைத்தியங்களை செய்து பாருங்கள்:


1. சூடான தண்ணீர் மற்றும் தேன்


மாறிவரும் பருவத்தில் குளிர்ந்த நீரைக் குடிப்பதைத் தவிர்த்து, சூடான நீரின் அளவை அதிகரிக்கவும். ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் 4 டீஸ்பூன் தேன் கலந்து குடித்து வந்தால் வறட்டு இருமலில் இருந்து பூரண நிவாரணம் கிடைக்கும். வறட்டு இருமல் சரி ஆனவுடனும் நீங்கள் இதை தொடர்ந்து குடிக்கலாம். இது பல நோய்களைத் தடுக்கிறது.


மேலும் படிக்க | ஜாக்கிரதை! இந்த 5 அறிகுறிகள் இருக்கிறதா? சிறுநீரக பாதிப்பாக இருக்கலாம்!


2. இஞ்சி மற்றும் உப்பு


இஞ்சி நம் வீடுகளில் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒரு மசாலா ஆகும். இது சளிக்கு எதிரான வைத்தியத்தில் ஒரு சஞ்சீவியாக உள்ளது. இஞ்சியை வேண்டுமானால், பச்சையாகவோ அல்லது அதன் சாற்றையோ அருந்தலாம். ஆனால் இஞ்சி கசப்பாக இருப்பதால், இஞ்சி மற்றும் உப்பு கலந்து சாப்பிட்டால் கசப்பு குறையும். இதனால் வறட்டு இருமல் குணமாகும்.


3. கருப்பு மிளகு மற்றும் தேன்


கருப்பு மிளகு மற்றும் தேன் கலவையானது சளி மற்றும் இருமலுக்கு எதிரியாக கருதப்படுகிறது. இதற்கு நீங்கள் 4-5 கருப்பு மிளகு எடுத்து அதை அரைத்து பொடி செய்ய வேண்டும். இப்போது தேனுடன் இதை கலந்து சாப்பிடவும். ஒரு நாளைக்கு 2 முதல் 3 முறை சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் நீங்கும்.


4. மஞ்சள்


மஞ்சள், பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்தது. தொண்டை புண் மற்றும் வீக்கத்தைப் போக்க இது உதவுகிறது. இதில் உள்ள குர்குமில் சுவாச நோய்களுக்கும் பயன் தருகிறது. தொண்டையில் எரியும் உணர்வைத் தவிர்க்க, பாலில் ஒரு சிறிய ஸ்பூன் மஞ்சளைக் கலந்து குடித்து வந்தால், தொண்டை தொற்று குணமாகும். தொண்டை வலிக்கும் இது நன்மை பயக்கும்.


5. பச்சை வெங்காயம்


வறட்டு இருமல் பிரச்சனையில் இருந்து விடுபட வெங்காயத்தை சாப்பிடுங்கள். பச்சை வெங்காயம் சளி பிரச்சனையை நீக்க உதவுகிறது. பச்சையாக வெங்காயம் சாப்பிடுவது தொண்டையுடன் கண்களுக்கும் மிகவும் நன்மை பயக்கும்.


(பொருப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | நிறைய தாகம் எடுத்தால் மூளையில் கட்டி என்று அர்த்தமா..? பாதிக்கப்பட்டவரின் பகீர் கதை..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ