Brain-Eating Amoeba... மூளையை உண்ணும் அமீபா தொற்று... மேலும் ஒரு சிறுவன் பலி... தடுக்க செய்ய வேண்டியவை!
Brain-Eating Amoeba: மூளையில் ஆபத்தான தொற்றுநோயை பரப்பும் அமீபா சூடான ஏரிகள், ஆறுகள் மற்றும் வெந்நீர் ஊற்றுகளில் செழித்து வளரும் என அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் (CDC) அறிக்கை ஒன்று கூறுகிறது.
Brain-Eating Amoeba: கேரளாவின் கோழிக்கோட்டில் புதன்கிழமை இரவு அசுத்தமான குளத்தில் குளித்த 12 வயது சிறுவன் மனித மூளையை உண்ணும் பாக்டீரியா தாக்கியதால் ஏற்பட்ட அரிய தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நன்னீரில் வாழும் அமீபா வகையான "நெக்லீரியா ஃபோவ்லேரி" (Naegleria fowleri), மூளையைப் பாதிக்கும் அரிய தொற்றை ஏற்படுத்தி, படிப்படியாக உயிரிழப்பை ஏற்படுத்தும் என்கின்றனர் வல்லுநர்கள்.
கடந்த மே 20 முதல் கேரளாவில் (Kerala), நெக்லீரியா ஃபோவ்லேரி அமீபா தொற்றினால் ஏற்ட்ட மூளை பாதிப்பைத் தொடர்ந்து இது வரை மூன்று பேர் இறந்துள்ளனர். கேரளாவின் கோழிக்கோடு, கண்ணூர், மலப்புரம் மாவட்டங்களை சேர்ந்த மூன்று குழந்தைகள் இந்த அமீபா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
சமீபத்தில் இறந்த மிருதுல் என்ற சிறுவன், ராமநாட்டுக்கரையில் உள்ள ஃபெரோக் கல்லூரி அருகே உள்ள குளத்தில் குளித்த 5 நாட்களுக்குப் பிறகு உடல்நலக்குறைவினால் பாதிக்கப்பட்டான். ஏழாவது நாளில் அவருக்கு காய்ச்சல், தலைவலி மற்றும் வாந்தி ஆகிய அறிகுறிகள் அதிகரித்தன. இந்நிலையில், ஜூன் 24 அன்று கோழிக்கோடு பேபி மெமோரியல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலன் இன்றி சிறுவன் உயிரிழந்தான்.
முன்னதாக, ஜூன் 12 அன்று கண்ணூர் தோட்டாவைச் சேர்ந்த ஒரு சிறுமியும், மே 20 அன்று மலப்புரத்தின் முன்னியூரைச் சேர்ந்த ஐந்து வயது சிறுமியும் இந்த நோய்த்தொற்றால் இறந்தனர். கேரளாவில் மூளையை உண்ணும் அமீபா தொற்றினால் ஏற்படும் மூளைக்காய்ச்சலின் தொடர்ச்சியான நிகழ்வுகள் மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.
மேலும் படிக்க | மழை காலத்தில் பரவும் பயங்கர நோய்கள்... குழந்தைகளை காக்கும் இந்த 5 உணவுகள்!
மூளையில் ஆபத்தான தொற்றுநோயை பரப்பும் அமீபா சூடான ஏரிகள், ஆறுகள் மற்றும் வெந்நீர் ஊற்றுகளில் செழித்து வளரும் என அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் (CDC) அறிக்கை ஒன்று கூறுகிறது. மூளையை உண்ணும் அமீபாவான இது, மூளையில் தொற்றினை ஏற்படுத்தி மூளை திசுக்களை சேதப்படுத்தும். இந்த அமீபா மூக்கு வழியாக உடலுக்குள் நுழைந்து மூளையில் வீக்கத்தை ஏற்படுத்தி, முதன்மை அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ் (Primary Amoebic Meningoencephalitis - PAM) க்கு வழிவகுக்கும். இந்த தொற்று ஆபத்தானது.
நெக்லீரியா ஃபோவ்லேரி அமீபா தொற்று ஏற்படாமல் இருக்க, நீர்வீழ்ச்சி, ஆறு அல்லது ஏரியில் நீந்தும்போது மூக்கிற்கான மாஸ் அணிய வேண்டும். டைவிங் செய்யும் போது உங்கள் மூக்கை பிடித்துக் கொண்டு டைவ் செய்யலாம். வெந்நீர் ஊற்றுகளில் நீந்தும்போது, எப்போதும் உங்கள் தலையை தண்ணீருக்கு மேல் இருக்கும் படி பார்த்துக் கொள்வது நல்லது. ஆழமற்ற நீரில் அமீபா இருப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதால், ஆழமற்ற நீரில் நீந்துவதை தவிர்ப்பது சிறப்பு. உங்கள் மூக்கை சுத்தம் செய்ய காய்ச்சி வடிகட்டிய நீரை பயன்படுத்தவும். இது தவிர அழுக்கு நிறைந்த குளம், கால்வாய், ஆற்றில் குளிக்கக் கூடாது. குறிப்பாக மழைக்காலத்தில் தவிர்க்க வேண்டும்.
மேலும் படிக்க | வயிற்றுப்போக்கை நிறுத்த முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ