கொரோனா நோய்த்தொற்றைத் தடுக்க, பல நிறுவனங்கள் டிசம்பர் மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடையில் தடுப்பூசியைக் கொண்டு வருவதாகக் கூறியுள்ளன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதற்கிடையில், கொரோனா நோயாளிளுக்கு ஆயுஷ் மருந்துகள் எவ்வாறு பலன் அளிக்கின்றன என்பது குறித்த இரண்டாம் கட்ட பரிசோதனையில், மருந்துகள்  மிகவும் ஆற்றலுடன் செயல்பட்டு சிகிச்சை வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் நிலை முடிவுகளின் முழுமையான மதிப்பீட்டிற்குப் பிறகு, அதன் மூன்றாம் நிலை பரிசோதனை விரைவில் தொடங்க உள்ளது. ஆயுஷ் மருந்துகள் நோயாளிகளின் மொத்த சிகிச்சை காலத்தை 6 முதல் 8 நாட்களாகக் குறைக்க உதவுகிறது, இது தற்போது 14 முதல் 22 நாட்களாக உள்ளது. ஆயுஷ் நிபுணர்கள் தொடர்பாக உற்சாகமாக உள்ளனர்.


ஆயுஷ் (AYUSH) அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில், இரண்டாம் நிலை பரிசோதனையில், ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு ஆயுஷ் மருந்துகள் வழங்கப்பட்டு நடத்தப்பட்ட ஆராய்ச்சியில், சிறந்த முடிவுகளை கொடுத்துள்ளது என்றார். சாதாரண மற்றும் லேசான தொற்று உள்ள நோயாளிகளுக்கு, சிகிச்சை மிகவும் வெற்றிகரமாக இருந்தது என்றும், மிதமான தொற்று உள்ள நோயாளிகளுக்கு நோய்த்தொற்றின் வீரியத்தை பலவீனப்படுத்த உதவுகிறது என்றும் கூறப்படுகிறது. ஆயுஷ் மருந்துகளின் பயன்பாடு ஏற்கனவே பாதுகாப்பானது என ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.


கொரோனா (Corona)சிகிச்சையில் நோயாளிகள் குணமடைய சராசரியாக 14 நாட்கள் தேவை என கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் ஆயுஷின் மருந்துகளை பயன்படுத்திய பிறகு, குணமடையும் காலம் 6-8 நாட்களுக்கு என்ற அளவில் வியக்கத்தக்க அளவில் குறைவாக இருந்தது. இது ஆயுஷ் மருந்துகளின் முக்கிய சாதனை என்று விவரிக்கப்படுகிறது.


ALSO READ | AstraZeneca-Oxford தயாரிக்கும் கொரோனா தடுப்பு மருந்து 70% தடுப்பாற்றல் கொண்டது


கொரோனா நோயாளிகளுக்கு திபியா கல்லூரி மற்றும் டெல்லியில் உள்ள சவுத்ரி பிரம்மபிரகாஷ் மருத்துவமனைகளில் ஆயுஷ் மருந்துகள் மூலம் முழுமையாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது தவிர, ஆயுஷ் மருந்துகளின் பரிசோதனையும் மற்ற எட்டு மருத்துவமனைகளில் நடந்து வருகிறது. இங்கே, சாதாரண, லேசான மற்றும் மிதமான தொற்று உள்ள நோயாளிகளுக்கு மருந்துகள் சிறந்த பலனை தருகிறது. இது தவிர, உத்திரபிரதேசம் மற்றும் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஆயுஷ் மருந்துகள் மூலம் நோயாளிகள் விரைவில் குணமடைந்து ஆரோக்கியமாக உள்ளனர்.


கொரோனாவிலிருந்து குணமான பின்னரும், நோயாளிகளிடம் பல உடல் நல சிக்கல்கள் காணப்படுகின்றன. ஆனால் ஆயுஷ் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டவர்களுக்கு பிரச்சனை ஏதும் இன்றி முழுமையாக குணம் அடைந்துள்ளனர்.


ALSO READ | மின் சாதனம், மொபைல் வேண்டவே வேண்டாம் என ஓடும் உலகின் அதிசய மனிதர்..!!!


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR