இன்னும் சில நாட்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணிதொடங்கும்: Dr.Harsh Vardhan
இன்னும் சில நாட்களில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிதொடங்கும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் இரண்டாம் கட்ட கொரோனா தடுப்பூசி ஒத்திகை இன்று, அதாவது ஜனவரி 8ம் தேதி தொடங்கிய நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் (Dr.Harsh Vardhan), சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி ஒத்திகையை ஆய்வு செய்தார். அப்போது, மாநில சுகாதாரத்துறை அமைச்சர் திரு.விஜயபாஸ்கர், மாநில சுகாதாரத்துறை செயலாளர் திரு.ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.
இதன்பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் ஹர்ஷ்வர்தன் "பிரதமர் சார்பாக தமிழக மக்களுக்கு வணக்கங்களை தெரிவித்துக்கொள்கிறேன். கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்ட கள பணியாளர்களுக்கு மிகவும் நன்றி" எனக் கூறினார்.
கொரோனா பரவலை (corona Virus) கட்டுப்படுத்தும் பணியில், மத்திய அரசு, மாநில அரசுகள், மாநில சுகாதாரத்துறை அமைச்சர்கள், மக்கள், சுகாதாரப் பணியாளர்கள், விஞ்ஞானிகள் சிறந்த பங்களிப்பை கொடுத்துள்ளனர். தற்போது இந்தியா உலகத்திலேயே அதிக அளவிலான குணமடையும் விகிதத்தை கொண்டுள்ளதோடு, இறப்பு விகிதமும் மிக முறைவாக உள்ளளது. கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட ஒரு கோடிக்கும் மேலானோர் முழுமையாக குணமடைந்துள்ளனர் என அவர் தெரிவித்தார்.
தற்போது நாடு முழுவதும் 2,300 கொரோனா பரிசோதனை மையங்கள் உள்ளன என்றும். PPE எனப்படும் தனிப்பட்ட பாதுகாப்பு கருவிகள் மருந்துகள், வெண்டிலேட்டர், போன்றவற்றின் பற்றாக்குறை ஏதும் இல்லாத நிலை உள்ளது.
குறைவான காலகட்டத்தில் தடுப்பு மருந்தை (Corona Vaccine) தயாரிப்பதற்கான முயற்சியிலும் இந்தியா சிறப்பான பணியை மேற்கொண்டுள்ளது. அவசர கால பயன்பாட்டிற்கு 2 தடுப்பூசிகளை பயன்படுத்த மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது என மத்திய சுகாதார அமைச்சர் குறிப்பிட்டார்.
ALSO READ | கொரோனா தடுப்பூசிக்கு பிறகு 2 மாதங்களுக்கு No Alcohol: நிபுணர்கள் அறிவுரை
விரைவில் நாட்டில் உள்ள சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், தொற்று பாதிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ள முதியவர்கள் ஆகியோருக்கு, முதல் கட்டமாக தடுப்பூசி வழங்கப்படும். அடுத்தக்கட்டமாக இன்னும் சில நாட்களில் பொதுமக்களுக்கும் தடுப்பூசி வழங்கப்படும். இதற்கான பணிகள் அனைத்தும் முறையாக நடைபெற்று வருகிறது. மருத்துவ நிபுணர் குழுவின் அறிவுறுத்தலின்படி கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஒத்திகை நடைபெறுகிறது என திரு ஷர்ஷ் வர்தன் மேலும் கூறினார்.
இன்னும் சில நாட்களில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிதொடங்கும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.
“தொழில்நுட்பங்களை சிறப்பாக பயன்படுத்தி தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதோடு, அனைத்து மாநிலங்களையும் ஒருங்கிணைத்து மத்திய அரசு செயல்பட்டு வருகிறது" எனவும் டாக்டர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்தார்.
ALSO READ | COVAXIN - COVISHIELD: செயல்திறன், விலை பிற விபரங்கள்..!!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR