தட்டையான வயிறு வேண்டுமா? அப்போ இந்த உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள்
Weight Loss Tips: கோடை காலம் உடல் எடையை குறைக்க சிறந்ததாக கருதப்படுகிறது. கொழுப்பைக் குறைக்க மக்கள் பல வழிகளைக் கடைப்பிடிக்கின்றனர். பலர் டயட் செய்கிறார்கள், சிலர் கடுமையான உடற்பயிற்சிகளை செய்கிறார்கள். எனவே வெயில் காலத்தில் சிலவற்றை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடல் பருமனை எளிதில் குறைக்கலாம்.
உடல் எடையைக் குறைக்கும் குறிப்புகள்: தற்போது மாறிவரும் வாழ்க்கை முறையால் உடல் பருமன் என்பது ஒரு பொதுவான பிரச்சனையாக மாறி வருகிறது. ஆனால் உடல் எடை அதிகரிப்பதால் நீரிழிவு, இதய நோய் போன்ற பல தீவிர நோய்களுக்கு மக்கள் பலியாகின்றனர். அத்தகைய சூழ்நிலையில், எடையைக் கட்டுப்படுத்த வாழ்க்கை முறை மற்றும் உணவு முறைகளில் சிறப்பு கவனம் செலுத்துவது அவசியமாகும்.
உடல் பருமனை குறைக்க, சீரான உணவு, வழக்கமான உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை பழக்கங்களை கடைப்பிடிப்பது மிகவும் முக்கியமாகும். இருப்பினும், கோடை காலத்தில் உடல் எடையை எளிதில் குறைக்கலாம். இதற்கு சில உணவுகளை மட்டும் டயட்டில் சேர்த்துக்கொள்ளலாம். எனவே இந்த கோடைக் கால சீசனில் உடல் எடையை குறைக்க என்னென்ன சாப்பிட வேண்டும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
மேலும் படிக்க | எப்போதாவது வெள்ளை வெங்காயம் சாப்பிட்டிருக்கிறீர்களா? இந்த பிரச்சனைகள் எல்லாம் தீரும்
வெள்ளரிக்காய்
வெள்ளரிக்காயில் கலோரிகள் குறைவாகவும், நீர்ச்சத்து அதிகமாகவும் உள்ளது. கோடைக் காலத்தில் உடல் எடையை குறைக்க வேண்டும் என்றால், அதை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். மேலும் நார்ச்சத்தும் இந்த வெள்ளரிக்காயில் நிறைந்துள்ளது, இது உங்கள் வயிற்றை நீண்ட நேரம் நிறைவாக வைத்திருக்க உதவும். எனவே வெள்ளரிக்காயை சாலட்களில் சேர்த்து தொடர்ந்து சாப்பிடலாம்.
சுரைக்காய்
சுரைக்காயில் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளது. சுரைக்காயில் கலோரிகள் குறைவு மற்றும் அதிக நீர்ச்சத்து உள்ளது. எனவே நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால், இது உங்களுக்கு சிறந்த காய்கறியாக இருக்கும். சுரைக்காயை பயன்படுத்தி சுவையான சூப் செய்துக் கொள்ளலாம் அல்லது சாலட் வடிவில் சுரைக்காயை சேர்த்துக் கொள்ளலாம்.
ஐஸ் கிரீன் டீ
ஐஸ் கிரீன் டீ உடல் எடையை குறைக்க உதவும். இது ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளது. இந்த பானத்தை வீட்டிலும் தயார் செய்து குடிக்கலாம். அதற்கு முதலில் க்ரீன் டீ தயாரித்து அதில் சிறிது ஐஸ் கட்டிகளை சேர்க்கவும். இதோ ரெடி ஐஸ் கிரீன் டீ.
மக்காச்சோளம்
மக்காச்சோளம் ஒரு முழு தானியமாகும், இதில் நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் அதிகளவு நிறைந்துள்ளன. இது கொழுப்பு மற்றும் கலோரிகளில் குறைவாக உள்ளது, எனவே நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால் மக்காச்சோளம் உங்களுக்கு சிறந்த உணவாகும். எனவே வேகவைத்த சோளத்தை சாலட் வடிவில் உட்கொள்ளலாம்.
தர்பூசணி சாப்பிடுங்கள்
கோடையில் உடல் எடையை குறைக்க தர்பூசணியும் சாப்பிடப்படுகிறது. தர்பூசணியில் சோடியம், பொட்டாசியம், நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இதன் காரணமாக உடல் எடையை குறைக்க இதை உட்கொள்ளலாம்.
பாலக்கீரை
கிராமப்புறங்களில் இருப்பவர்கள் இந்த கீரையானது காலி இடங்களில் ஏராளமாக வளர்ந்து நிற்பதை பார்க்க முடியும். இப்போது நகரங்களிலும் விற்பனைக்கு வருகிறது. செரிமான சக்தியை மேம்படுத்தும். ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தி, மலச்சிக்கல் பிரச்சினைக்கு தீர்வு தரும். இது உடல் எடையை குறைக்க உதவும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | இள நரை பிரச்சனையா? இந்த இயற்கை வைத்தியத்தை ட்ரை பண்ணுங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ