நியூயார்க்: மகளிர் கவனத்திற்கு! உதட்டுச்சாயங்கள்கூட உங்களை புத்திசாலியாக்கவும், உங்கள் அறிவாற்றல், செயல்திறனை அதிகரிக்கவும் உதவக்கூடும், ஒப்பனை ஆர்வம் அதிகம் உடைய பெண்கள் கல்வி துறையில் சாதிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமெரிக்க ஹர்ட்வர்ட் பல்கலைகழக நடத்திய ஓர் ஆய்வின்படி, ஒப்பனைப்பொருள்கள் உபயோகிப்பவர்களின் உளவியல் நன்கு ஆவணப்படுத்தப்படும் விளைவைக் கொண்டிருக்கின்றன, மனோரீதியாக சுயமரியாதையின் உயர்ந்த உணர்வை பெறுகிறன்றனர் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளார். இருப்பினும், இந்த ஊக்கத்தன்மையினால் புலனுணர்வு திறன்களும் பாதிக்கப்படலாம் எனவும், அவற்றை நேர்மறை உணர்ச்சிகள் மூலம் மேம்படுத்தப்படும் கூறுகின்றனர்.


உளவியல்ரீதியான பரிசோதனையை ஒன்றை ஆய்வாளர்கள் மேற்கொண்டனர், இதில் இளங்கலை பெண் பட்டதாரிகள் மூன்று குழுக்களாக வரிசைப்படுத்தப்பட்டு சோதனைக்கு உட்படுத்தபட்டனர்.


ஒரு குழு ஒப்பனை செய்ய வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது, மற்றொன்று நேர்மறையான இசையினை கேட்குமாறு பணிக்கப்பட்டது மற்றும் ஒரு மூன்றாவது குழு மனித முகத்தில் வரைபடம் வரைதல் போன்ற செயல்களை செய்தனர். இவர்களில் நேர்மறையான இசையினை கேட்குமாறு பணிக்கப்பட்ட குழுவினரின் செயல்திறனில் கணிசமான அதிகரிப்பு இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.


இந்த ஆய்வறிக்கையானது கோக்நெட் உளவியலில்(Cogent Psychology) பத்திரிகையில் வெளியிடப்பட்டது.