புதுடெல்லி: இந்தியாவில் கோவிட் -19 தொற்று பாதிப்புகள் கடந்த இரண்டு-மூன்று வாரங்களாக சீராக குறைந்து வருகின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவின் மிக மோசமான பாதிப்புக்குள்ளான முதல் ஐந்து மாநிலங்களில் கொரோனா (Corona) தாக்கம் குறைந்து வருவது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.


மகாராஷ்டிரா (Maharashtra), கர்நாடகா, கேரளா, ஆந்திரா மற்றும் தமிழ்நாடு ஆகிய ஐந்து மாநிலங்களில் தினசரி தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. 


தொடர்ச்சியாக 3 நாட்களாக  ஆக்டிவ் நோயாளிகள் எண்ணிக்கை 8 லட்சத்திற்கும் குறைவாகவே உள்ளது ”என்று மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.


கடந்த 24 மணி நேரத்தில் 45,000 க்கும் மேற்பட்ட புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ள நிலையில், கடந்த 90 நாட்களில் நாட்டில் பதிவான மிக குறைவான புதிய தொற்று பாதிப்புகள் என்பது குறிப்பிடத்தக்கது.


ALSO READ |  சீனாவிற்கு மறைமுக எச்சரிக்கை... மலபார் கூட்டு பயிற்சியில் இந்தியாவுடன் இணையும் ஆஸ்திரேலியா..!!!  


வைரஸ் நோய்த்தொற்று அதிகரிக்கும் விகிதம் கடந்த 30 நாட்களில் நாட்டில்  கிட்டத்தட்ட பாதியாக குறைந்து விட்டது. இந்த விகிதம் செப்டம்பர் மாதத்திற்கு முந்தைய மாதத்தில் 92 சதவீதமாக இருந்தது. தற்போது 42 சதவீதமாகக் குறைந்துள்ளது.


இருப்பினும், கேரளாவின் (kerala) நிலைமை தொடர்ந்து கவலை அளிப்பதாக உள்ளது, ஏனெனில் மாநிலத்தின் ஆக்டிவ் நோயாளிகளின் எண்ணிக்கை தேசிய அளவிலான சராசரியை விட ஐந்து மடங்கு அதிகமாகும்.


கேரளாவில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை தற்போது ஒரு 10 லட்சம் பேருக்கு, 2,874 பேர் என்ற அளவில் உள்ளது, அதே நேரத்தில் தேசிய சராசரி 10 லட்சம் பேருக்கு 572  பேர் என்ற அளவில் உள்ளது.


ALSO READ |  COVID-19 காரணமாக தாமதமான CAA விரைவில் அமல்படுத்தப்படும்: J.P.Nadda


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYe