புதுடெல்லி: கோவிட் தொற்றுநோயின் இரண்டாவது அலைக்கு எதிராக இந்தியா போராடி வருகிறது. இந்தியாவின் இந்த போராட்டத்திற்கு 42 நாடுகள் ஆதரவு கொடுக்கின்றன. 21 நாடுகளிடம் இருந்து உதவிப் பொருட்கள் ஏற்கனவே வந்துவிட்டன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவில் தற்போது மருத்துவ ஆக்ஸிஜன் உற்பத்தி 5,700 மெட்ரிக் டன் என்ற அளவில் இருந்து 9,480 மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது, ஆனால் தேவையோ இதை விட அதிகமாக இருக்கிறது.


சர்வதேச நாடுகள் இதுவரை இந்தியாவுக்கு 20,000 ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், 11,000 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், 30 ஆக்ஸிஜன் டேங்கர்கள் மற்றும் 75 ஆக்ஸிஜன் ஜெனரேட்டர் ஆலைகளை வழங்கியுள்ளன. 30 ஆக்ஸிஜன் டேங்கர்களில், இதுவரை 9 டேங்கர்கள் இந்தியாவிற்கு வந்துவிட்டன.


Also Read | தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி பணிகள் தீவிரம் 


1,02,400 ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் மற்றும் 100,000 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் வாங்கப்படுகின்றன. தனியார் நிறுவனங்களுக்கிடையிலான ஒப்பந்தங்களின் ஒரு பகுதியாக டேங்கர்களும் வந்துள்ளன.


ரெம்டெசிவிர் மருந்து 10 மில்லியன் அல்லது ஒரு நாளைக்கு சுமார் 300,000 என்ற அளவில் உற்பத்தி செய்ய வேண்டும். அமெரிக்க மருந்து தயாரிப்பு நிறுவனமான கிலியட் சயின்சஸ் (American biopharmaceutical company Gilead Sciences) சனிக்கிழமையன்று 150,000 எண்ணிக்கையிலான ரெம்டெசிவிரை  அனுப்பியது, மேலும் 150,000 வரவிருக்கிறது.


எகிப்தின் ஈவா பார்மா நிறுவனத்திடம் இருந்து இந்தியாவுக்கு 400,000 டோஸ் மருந்துகள்   கிடக்கும். பங்களாதேஷ், ஜெர்மனி, உஸ்பெகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளிலிருந்தும் இந்தியா விலைப் பட்டியலை வாங்கியிருக்கிறது. இந்த ஆதாரங்களின் அடிப்படையில்  இந்தியாவுக்கு 1.6 மில்லியன் டோஸ் ரெம்டெசிவிர் மருந்துகள் கிடைக்கும்.


Also Read | Oxygen Action: முதல்வர் ஸ்டாலினின் 'ஆக்ஷன்'..  மத்திய அரசின் 'ரியாக்ஷன்' 


டொசிலிசுமாப் (tocilizumab) ம்ருந்து விநியோகத்தை 60 மடங்கு அதிகரித்துள்ளது. இந்தியா 11,000 டோஸ்களைப் பெறுகிறது, மேலும் 21,000 டோஸ்கள் சுவிட்சர்லாந்தின் ரோச்சில் (Switzerland-based Roche) இருந்து கிடைக்கும். இது வழக்கமாக கோவிட்டின் ஆரம்ப கட்டங்களில் கொடுக்கப்படுகிறது.  


கொரோனாவின் இரண்டாவது அலை நாட்டைத் தாக்கியதால், வெளிவிவகார அமைச்சகத்தின் COVID பிரிவு மீண்டும் செயல்படத் தொடங்கியது. கடந்த ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த கோவிட் செல்லில், தம்மு ரவி தலைமையில் சுமார் 15-20 இளம் ஐ.எஃப்.எஸ் அதிகாரிகள் பணிபுரிகின்றனர்.  
உலகெங்கிலும் இருந்து ஏராளமான உதவிக்கரங்கள் நீண்டுள்ளது..


எது எப்படியிருந்தாலும், குறுகிய கால திறன் தடைகளை குறைக்க சர்வதேச நாடுகள் உதவுகின்றன என்றால், தனது உற்பத்தித் திறனை அதிகரிப்பதை இந்தியா நீண்ட கால லட்சியமாகக் கொண்டுள்ளது.


Also Read | இந்தியாவில் முழு லாக்டவுனை கொண்டு வர மத்திய அரசுக்கு அழுத்தம்


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற  ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR