புதுடெல்லி: கடந்த 24 மணி நேரத்தில், கொரோனாவுக்கு 4,000 க்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர். இது இந்தியாவில் முதன்முறையாக மிகவும் அதிகமான அளவு இறப்பு எண்ணிக்கையாகும். அதேபோல் ஒரு வாரத்தில் தொடர்ந்து நான்காவது முறையாக 4 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவின் கொரோனா வைரஸ் நிலைமை கட்டுப்பாட்டை மீறி வருகிறது. எனவே, நாடு தழுவிய அளவில் கடுமையான லாக்டவுனை அமலுக்கு கொண்டு வரவேண்டும் என நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கத்திற்கு அழுத்தம் அதிகரித்து வருகிறது.
நாட்டில் முழுமையான லாக்டவுனை அமல்படுத்துமாறு, பல மருத்துவ வல்லுநர்கள், உச்சநீதிமன்ற நீதிபதிகள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் அரசாங்கத்திற்க்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Also Read | World Test Championship இந்திய அணி அறிவிப்பு, ஜடேஜா உள்ளே
நாட்டின் தற்போதைய கோவிட் -19 நிலைமை குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இரண்டாவது கடிதம் எழுதியுள்ளார், "தற்போது இந்த நோய் வெடிக்கும் வகையில் அதிகரித்து வருகிறது. இது தற்போது நமது அமைப்பையே மூழ்கடிக்கும் நிலைக்கு வந்துவிட்டது" என்று தனது கடிதத்தில் ராகுல்காந்தி குறிப்பிட்டுள்ளார்.
மத்திய அரசை கடுமையான தாக்கியுள்ள ராகுல் காந்தி, "அரசாங்கத்தின் தோல்வியும், தவறான செயல்பாடும், நாட்டில் மற்றுமொரு மோசமான முழு லாக்டவுன் அமல்படுத்துவதை கிட்டத்தட்ட தவிர்க்க முடியாததாக மாற்றிவிட்டது" என்று கூறினார்.
முன்னதாக, நாடு முழுவதும் செயல்பாடுகளை நிறுத்துவதை முறையாக திட்டமிட்டால் கோவிட் -19 நோய்தொற்று சங்கிலியை உடைக்க உதவும் என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லோட் கூறியிருந்தார். "இரண்டாவது அலை நம்மை திணறடிக்கிறது- நிபுணர்கள் மற்றும் மருத்துவர்கள் எவ்வளவு ஆயத்தமாக இருந்தாலும், ஆக்ஸிஜன், மருந்துகள் மற்றும் பிற உபகரணங்களின் (oxygen, medicines and other equipment) பற்றாக்குறையை எதிர்கொள்கிறோம். கூடிய விரைவில் மருத்துவ ஊழியர்களின் பற்றாக்குறையையும் எதிர்பார்க்கலாம்" என்று தனது தொடர் ட்வீட்களில் அவர் தெரிவித்துள்ளார்.
Also Read | சீனாவின் ராக்கெட் கட்டுப்பாடிழந்து பூமியில் எங்கே வீழும்?
கோவிட் -19 பாதிப்பு விகிதம் 10% க்கும் அதிகமாக இருக்கும் பகுதிகளில் கடுமையான லாக்டவுன் விதிக்க வேண்டும் என்று அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் (எய்ம்ஸ்) இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியா தெரிவித்திருந்தார்.
"ஒரு லாக்டவுன் அறிவிக்கப்படும்போது, அது ஏற்படுத்தும் சமூக-பொருளாதார தாக்கத்தை நாங்கள் அறிந்திருக்கிறோம், குறிப்பாக, விளிம்புநிலை சமூகங்கள் மிகவும் பாதிக்கப்படும் என்பதை உணர்ந்திருக்கிறோம். ஆகவே, ஒரு முழுமையான லாக்டவுன் விதிக்கப்பட்டால், இந்த சமூகங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட வேண்டும்," என்று DY Chandrachud தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு தெரிவித்தது.
இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றுகளின் பரவலை குறைக்க இரண்டு முதல் நான்கு வாரங்கள் தேவைப்படலாம் என்று, அமெரிக்க அதிபர் ஜோ பிடனின் தலைமை மருத்துவ ஆலோசகரான அந்தோனி ஃபாசி (Anthony Fauci) பரிந்துரைத்தார்.
Also Read | கட்சிக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் - EPS and OPS தரப்பு மோதல்
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR