இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே அடுத்த மாதம்  4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. இந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றினால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். இதனால், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த டெஸ்ட் தொடராக இந்திய அணிக்கு இது உள்ளது. இந்த சூழலில் ஆஸ்திரேலிய அணியின் முக்கிய வீரரான மிட்செல் ஸ்டார்க் அந்த அணியில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு காயம் ஏற்பட்டதால், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விலகியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முதல் டெஸ்ட் போட்டி


இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஆலன் பார்டர் - கவாஸ்கர் டிராபி முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரில் நடைபெறுகிறது. பிப்ரவரி 9 ஆம் தேதி தொடங்கும் இந்த போட்டிக்கான இந்திய அணியினர் பயிற்சியை தொடங்கியுள்ளனர். அவர்களுக்கு இப்போதே ஒரு நல்ல செய்தி தேடி வந்துள்ளது. ஆஸ்திரேலிய அணியின் துருப்புச் சீட்டு, நட்சத்திர வேக பந்துவீச்சாளரான மிட்செல் ஸ்டார்க் இந்த டெஸ்ட் தொடரில் இருந்து விலகியுள்ளார். இது ஆஸ்திரேலிய அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. 


மேலும் படிக்க | Hardik Pandya: லக்னோ பிட்ச் குறித்து பாண்டியா அதிருப்தி..! பிசிசிஐ மீது சாப்ட் சாடல் 


தென்னாப்பிரிக்கா தொடரில் காயம்


மிட்செல் ஸ்டார்க் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான தொடரில் காயமடைந்தார். பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் அவருக்கு விரலில் காயம் ஏற்பட்டது. இதனால், அந்த அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் மிட்செல் ஸ்டார்க் விளையாடவில்லை. இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்பாக அவர் முழு உடல் தகுதியை எட்டிவிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. 


இந்த வீரர் முதல் டெஸ்டில் இருந்து வெளியேறினார்


இந்தியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் டிராபியின் முதல் டெஸ்டில் ஆட முடியாது என ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் தெரிவித்துள்ளார். விரலில் ஏற்பட்ட காயத்துடன் அவர் போராடி வருகிறார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான குத்துச்சண்டை நாள் டெஸ்டில் ஸ்டார்க் தனது இடது ஆள்காட்டி விரலில் காயம் அடைந்தார், அதைத் தொடர்ந்து தொடரின் கடைசி போட்டியில் விளையாடவில்லை. ஆஸ்திரேலிய அணியின் மிகப்பெரிய வெற்றியாளர்களில் ஒருவர் மிட்செல் ஸ்டார்க். அவரது வெளியேற்றம் அணிக்கு பெரும் அடியாக அமையும்.


ஆஸ்திரேலிய அணி நம்பிக்கை


மிட்செல் ஸ்டார்க் தற்போது காயத்தில் இருந்து குணமடைந்திருந்தாலும், இன்னும் சில வாரங்கள் ஓய்வெடுக்க வேண்டியுள்ளது. அதனால், 2வது டெஸ்ட் போட்டிக்கு ஆஸ்திரேலிய அணியுடன் அவர் இணைவார் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. அதேபோல், அந்த அணியின் மற்றொரு நம்பிக்கை நட்சத்திரமாக உருவாகி வரும் கேம்ரூன் கிரீனும் காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். இருப்பினும், அந்த காயம் கவலைப்படும் அளவுக்கு இல்லை என்பதால், முதல் டெஸ்ட் போட்டியில் கிரீன் களமிறக்கப்படுவார் என ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. 


மேலும் படிக்க | திடீர் ஓய்வை அறிவித்த சிஎஸ்கே வீரர்! காரணம் ஏன் தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ