நீரிழிவுக்கு எமனாகும் `இன்சுலின்` நிறைந்த நாவல் பழம்! பயன்படுத்தும் சரியான முறை!
நாவல் பழம் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த மிகச்சிறந்த உணவாகும். இரத்த சர்க்கரை கட்டுப்படுத்த இன்சுலின் நிறைந்த நாவல் பழத்தை எடுத்துக் கொள்ளும் 4 வழிகளை அறிந்து கொள்ளலாம்.
நீரிழிவு நோயாளிகளுக்கு எதைச் சாப்பிடலாம், எதைச் சாப்பிடக்கூடாது என்ற விஷயத்தில் குழப்பம் இருக்கலாம். அதிலும் குறிப்பாக பழங்கள் விஷயத்தில். ஏனென்றால், ஒரு தவறான உணவை உட்கொள்வதன் மூலம், இரத்த சர்க்கரை எகிறி பல விதமான உடல் நல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஆனால், நீரிழிவு நோயாளிகள் சில பழங்களை கண்ணை மூடிக் கொண்டு சாப்பிடலாம். அதில் ஒன்று நாவல் பழம். இதனை சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயிலிருந்து விடுபடலாம்.
நீரிழிவு நோய் மற்றும் அதிக இரத்த சர்க்கரையின் அறிகுறிகள்:
இரவில் அதிக சிறுநீர் கழித்தல், அதிக தாகம், தேவையற்ற எடை இழப்பு, பசி, மங்கலான பார்வை, கை மற்றும் கால்களின் உணர்வின்மை, ஆறாத காயங்கள், வறண்ட சருமம் போன்றவை நீரிழிவு நோய் மற்றும் அதிக இரத்த சர்க்கரையின் அறிகுறிகள்.
சிறந்த நீரிழிவு உணவு
கோடை மற்றும் மழைக்காலங்களில் கிடைக்கும் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் ஜாமுன் எனப்படும் நாவல் பழத்தை சாப்பிடுவதன் மூலமும் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தலாம். இது ஒரு சிறந்த நீரிழிவு உணவாகும், இது பல ஆராய்ச்சிகளில் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துகிறது. இதனை முறையாக சாப்பிட்டால் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம். அதன் பலன்கள் மற்றும் உண்ணும் முறை பற்றி தெரிந்து கொள்வோம்.
நீரிழிவு நோய்க்கு ஜாமுன் பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
நாவல் பழம் சர்க்கரை வியாதி அல்லது நீரிழிவு குறைபாட்டை குணமாக்கும் ஒரு சிறந்த பழம். ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சரியாக வைப்பதோடு, நீரிழிவு நோயாளிகளின், சிறுநீரில் அதிகளவு சர்க்கரை சத்துகள் வெளியேறாமல் தடுக்கிறது. மேலும் நாவல் பழத்தின் விதையில் ஜம்போலைன் என்ற குளூக்கோசைட் உள்ளது. இதன் செயல்பாடு உடலுக்குள் ஸ்டார்ச்சை சர்க்கரையாக மாற்றும் செயல்பாடு தடுக்கப்படுகிறது. இதனால் நாவல் பழம் சாப்பிட்டால் நீரிழிவு நோய் கட்டுபாட்டில் இருக்க்கும்.
மேலும் படிக்க | கலோரிகளை எரித்து உடல் பருமனை குறைக்கும் ‘ஆயுர்வேத பொடியை’ தயாரிக்கும் முறை!
'இன்சுலின்' நிறைந்துள்ள நாவல் பழம்
நாவல் பழம் ஒரு குறைந்த கிளைசெமிக் குறியீட்டு உணவு, இது இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள வைத்திருக்கிறது. இதில் இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கும் சேர்மங்கள் உள்ளன. இதன் காரணமாக உடல் இந்த ஹார்மோனை சிறப்பாக பயன்படுத்துகிறது.
சர்க்கரை வியாதியில் இருந்து விடுபட நாவல் பழத்தை சாப்பிடும் முறை
1. நாவல் பழத்தை அப்படியே சாப்பிடுது சிறந்த பலன் கிடைக்கும்.
2. நாவல் பழ விதை தூள் - விதையை காய வைத்து தூள் செய்து வைத்துக் கொண்டு வெதுவெதுப்பான நீரில் கலந்து சாப்பிடலாம்.
3. நாவல் பழ மரப்பட்டை தூள் - இதனையும் வெதுவெதுப்பான நீரில் கலந்து சாப்பிடலாம்
4. நாவல் பழ ஜூஸ் - இதனை ஜூஸ் செய்து குடிக்கலாம். நாவல் பழச்சாற்றை தினமும் மூன்று வேளை தவறாமல் உட்கொண்டு வந்தால் நீரிழிவு நோயாளியின் சர்க்கரையின் அளவு 15 நாட்களில் பத்து சதவிகிதம் குறைத்துவிடலாம். மூன்று மாதத்திற்குள் முற்றிலும் கட்டுப் படுத்திவிடலாம். ஆனால், அப்படியே சாப்பிடுவது தான் சிறந்தது. ஏனெனில் ஜூஸ் செய்தால் நார்சத்தினை இழந்து விடுவோம்.
நாவல் பழம் சாப்பிடுவதன் மூலம் உடல் எடையையும் குறைக்கலாம்
நாவல் பழம் ஆங்கிலத்தில் ஜாவா பிளம், பிளாக் பிளம், இந்தியன் பிளாக்பெர்ரி போன்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. இதில் மிகக் குறைந்த கலோரிகள் மற்றும் நிறைய நார்ச்சத்து உள்ளது. இதன் காரணமாக இது எடை இழப்புக்கு உகந்த உணவாகும். இது வயிற்றை நீண்ட நேரம் நிரம்ப வைத்து, பசி எடுக்காமல் இருக்கும். இதனால் கலோரிகளை குறைக்கிறது.
நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் இதயம் ஆரோக்கியம்
நீரிழிவு நோய்க்கு சிகிச்சை அளிக்கும் ஜாமூன், நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. இதில் வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன, இது நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது மற்றும் தொற்றுநோயிலிருந்து பாதுகாக்கிறது. இந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள் வீக்கத்தைக் குறைப்பதன் மூலம் இதய நோய்களிலிருந்து பாதுகாக்கின்றன.
நாவல் பழம் சாப்பிடுவதால் ஏற்படும் பிற நன்மைகள்
நீரிழிவு சிகிச்சை, எடை இழப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது தவிர, நாவல் பழத்தை சாப்பிடுவது வேறு பல நன்மைகளையும் வழங்குகிறது. அவை ஆரோக்கியமான சருமம்,
ஆரோக்கியமான தலைமுடி, சிறந்த இரத்த ஓட்டம் ஆகியவை.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை பொதுவான தகவலுக்காக மட்டுமே. இது எந்த வகையிலும் எந்த மருந்துக்கும் அல்லது சிகிச்சைக்கும் மாற்றாக இருக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு எப்போதும் உங்கள் மருத்துவரை அணுகவும்.
மேலும் படிக்க | எடையை குறைக்க சூப்பர் வழி: இந்த பழங்களுக்கு கண்டிப்பா நோ சொல்லிடுங்க!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ