இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று இரண்டாவது அலை பரவல், பீதியை கிளப்பும் வகையில் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், இது வரை இல்லாத அளவிற்கு, புதிய தொற்று பாதிப்பு எண்ணிக்கை  4 லட்சத்தை தாண்டியுள்ளது. இது இதுவரை இல்லாத உச்ச அளவாகும். கடந்த 24 மணி நேரத்தில், தொற்று காரணமாக 3523 பேர்  உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்று,  வயதானோர், இளையவர் என யாரையும் விட்டு வைக்கவில்லை.
 உடலை வலிமையாக ஆரோக்கியமாக வைத்திருக்கும், சர்வதேச பாடி பில்டர், ஆணழகனையும், இந்த கொரோனா தொற்று விட்டு வைக்கவில்லை. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இந்திய ஆணழகன், சர்வதேச பாடி பில்டர் ஜகதீஷ் லாட் மரணமடைந்தார். கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டு ஆக்சிஜன் துணையுடன் சிகிச்சைப் அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிறந்த நோய் எதிர்ப்பு திரன் கொண்டவர் இறந்தது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு வயது 34


ALSO READ | அஸ்வகந்தா சிலருக்கு விஷமாகலாம்.. எச்சரிக்கை தேவை..!!


உடலை ஆரோக்கியமாக பேணுவதில் அதிக ஆர்வம் கொண்ட ஜகதீஷ் லாட், மாநிலப்போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளதோடு என அகில இந்திய அளவிலான ஆணழகன் போட்டியில் தங்கப்பதக்கம், உலக சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு, மும்பை மாநாகராட்சி அவருக்கு வேலை கொடுக்க முன் வந்தது. ஆனால், அவரது வயது அதற்கு தடையாக இருந்தது.


அவர் மனைவியும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது உயிரிழப்பு குறித்து பாடிபில்டர் சங்கத்தினர் அதிர்ச்சி வெளியிட்டுள்ளனர்.


மறுபுறம், கொரோனா தடுப்பூசி (Corona Vaccine) செலுத்திக் கொண்ட, முன்னாள் பிரதமர் மன்மோஹன் சிங், திமுக தலைவர் துரைமுருகன் போன்றவர்கள் உயிர் பிழைத்துள்ளனர். இதன் மூலம் தடுப்பூசி ஒன்று தான் கொரோனாவிலிருந்து பாதுகாக்கும் ஆயுதம் என்பது தெளிவாக தெரிகிறது. 


ALSO READ | Corona Second Wave: ஆயுதப்படைகளுக்கு அவசர கால அதிகாரம் 


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR