அமெரிக்காவில் சர்வதேச யோகா தினம் தொடங்கப்பட்டு, பல்வேறு இடங்களில் யோகா பயிற்சி மற்றும் தியான நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் வேண்டுகோளை ஏற்று, ஆண்டுதோறும் ஜூன் 21-ஆம் நாள் சர்வதேச யோகா தினமாக ஐ.நா. அறிவித்தது. இதன்படி கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் அன்றைய தினம் யோகா தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. 


இந்நிலையில் யோகா தினத்தை முன்னிட்டு அமெரிக்காவின் வாஷிங்டன் கேபிடால் ஹில் கட்டிடத்தில் நேற்று முன்தினம் சர்வ தேச யோகா தின கொண்டாட்டம் தொடங்கியது. இந்த கொண்டாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டு யோகா பயிற்சி மேற்கொண்டனர்.



வழக்கத்தை விட இந்தாண்டு அதிமான மக்கள் கேபிடால் ஹில் கட்டிடத்தில் திரண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ஆண்டுதோறும் யோகாவை பற்றிய விழிப்புணர்வு அதிகரித்து வருவதைக் வெளிக்காட்டுகிறது என அமெரிக்காவிற்கான இந்திய தூதர் நவ்தேஜ் சிங் சர்னா மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். 


இதேபோன்று நியூயார்க் நகரில் சுதந்திர தேவி சிலை பின்னணியில் கவர்னர்கள் தீவு பகுதியில் இந்திய தூதரகம் சார்பில் கடந்த சனிக்கிழமை யோகா தினக் கொண்டாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு சூர்ய நமஸ்காரம், பிரணாயாமம், யோகா ஆசனங்கள் மற்றும் தியான பயிற்சிகள் போன்றவற்றை செய்தனர்.