தனது சொந்தக் குழந்தையே தனக்கு அலர்ஜியாக இருப்பதாக கூறும் தாயைப் பற்றி கேள்விப்பட்டதுண்டா? இப்படிச் சொல்வது இந்தியத் தாயாக இருக்காது என்கிறீர்களா? ஆம் இது இங்கிலாந்து தாய். ஆனால், இது அறிவியல் ரீதியிலான உண்மை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது ஒரு அரிதான கர்ப்பத்துடன் தொடர்புடைய தன்னுடல் தாக்க தோல் கோளாறு (pregnancy-associated autoimmune skin disorder), பெம்பிகாய்ட் கர்ப்பகாலத்தின் காரணமாக ஏற்பட்ட வித்தியாசமான ஒவ்வாமை இது.  


இந்த நிலை காரணமாக 32 வயதான தாயின் உடலில் பல வலிமிகுந்த கொப்புளங்கள் மற்றும் வெடிப்புகள் தோன்றியிருக்கிறது.


இங்கிலாந்தின் ஹாம்ப்ஷையரைச் சேர்ந்த ஃபியோனா ஹூக்கர் (Fiona Hooker) என்ற பெண்ணுக்குத் தான் இந்த வித்தியாசமான கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த தாய், தனது  மகனை தூக்குவதே மிகவும் வேதனையான அனுபவமாக இருப்பதாக வருத்தப்படுகிறார்.


மேலும் படிக்க | வேற லெவல் Wedding: நீருக்கடியில் திருமணம் புரிந்த தம்பதி


இந்த வித்தியாசமான விஷயத்தைப் பற்றி மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்? இந்தப் பெண்ணின் உடல், அவரது மகனின் டிஎன்ஏவில் உள்ள மரபணுவுடன் இணைந்து எதிர்வினையாற்றுகிறது.  


அந்த பெண், 31 வார கர்ப்பமாக இருந்தபோது, ​​வயிற்றில் அரிப்பு ஏற்பட்டுள்ளது. வயிற்றில் பல சிவப்புத் திட்டுக்களும் தோன்றியதாம். இந்த செய்தியை தி மிரர் செய்தித்தாள் வெளியிட்டுள்ளது.


காலப்போக்கில், ஒவ்வாமை மோசமடைந்தது. ஹூக்கர், தனது மகன் பார்னி-ஐ (Barney) பிரசவித்தபோது, ​​காயங்கள் வலிமிகுந்த கொப்புளங்களாக மாறின. இதனால் குழந்தையை தூக்குவது கூட அந்தப் பெண்ணுக்கு சிரமமாக இருந்தது.


மேலும் படிக்க | பேயை கல்யாணம் செய்யும் பாடகி! திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறதா?


"தொப்புளைச் சுற்றி சிறிய அரிப்புக் குறிகள் ஏற்பட்டன, அவை தொட்டால் எரிச்சலூட்டுபவையாக இருந்தன. அரிப்பும் எரிச்சலும் தாங்க முடியாமல் இருக்கும். மருத்துவர்கள், இந்த பிரச்சனையை சரி செய்ய  சில ஸ்டீராய்டு கிரீம்களைக் கொடுத்தனர், அவற்றாலும் எந்த பயனும் இல்லை. தொட்டால் புண்கள் பெரியதாகிவிட்டன. அந்தப் பெண்ணின் வயிற்றில் சிவப்பு நிறத்தில் தோன்றிய புண்கள் அரிப்பு காயங்களாக இருந்தன" என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.  


பல மருத்துவர்களைப் பார்த்தாலும் பெம்பிகாய்ட் கெஸ்டேஷனிஸ் (Pemphigoid Gestationis) என்ற பிரச்சனையாக இருக்கும் என்று மூன்றாவதாக பார்த்த மருத்துவர் தான் சொல்லியிருக்கிறார். 


அதன்பிறகு, அந்த மருத்துவர் தான், தோல் மருத்துவரிடம் பரிந்துரைத்திருக்கிறார், அவர்  வலிமையான ஸ்டீராய்டு க்ரீமைக் கொடுத்தார். என் சொந்தக் குழந்தைக்யே எனக்கு அலர்ஜியாக இருப்பதை என்ன சொல்வது? என்று வருத்தப்படுகிறார் இந்த தாய்.


மேலும் படிக்க | 'எங்க தங்கைக்கு கல்யாணம்..' அண்ணன்கள் செய்த காரியத்தால் கதறி அழும் நெட்டிசன்கள்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR