Marriage: பேயை கல்யாணம் செய்யும் பாடகி! திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறதா?

திருமணங்களில் பல வகைகளை கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால், பெண்ணுக்கும் பேய்க்கும் திருமணம் நடைபெறுவதை கேள்விப்பட்டதுண்டா?    

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 12, 2022, 12:18 PM IST
  • பேயை மணக்கப் போகும் பெண்
  • ராணுவ சிப்பாய் மீது கொண்ட காதலால் பேயை மணக்கும் பெண்
  • தனித்துவமான உத்தியால் மணமகனுடன் பேசும் மணமகள்
Marriage: பேயை கல்யாணம் செய்யும் பாடகி! திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறதா? title=

திருமணம் என்றால் மகிழ்ச்சி என வாழ்த்துவோம், பெரியவர்கள் ஆசீர்வாதம் செய்வார்கள். ஆனால், மணமகன் 'பேய்' என்றால், தீர்காயுசுமான் பவ என்று வாழ்த்த முடியுமா?! இது கதையல்ல நிஜமான சம்பவம். ஒரு பெண் பேயை திருமணம் (Woman Marry Ghost) செய்ய போகிறார். 

பெரியவர்கள் பார்த்து வைத்த திருமணம், சாதிக்குள் திருமணம், சாதி மாறி திருமனம், மதம் மாறி திருமணம், சாதி மறுப்பு திருமணம், ஒரு பால் திருமணம் என கல்யாணங்களின் பல வகைகளை கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால், பெண்ணுக்கும் பேய்க்கும் திருமணம் நடைபெறுவதை கேள்விப்பட்டதுண்டா?  

இது விநோதமான உலகம், திருமண பந்தம் என்பது பாரம்பரியமாக தொடர்கிறது என்றாலும், காலத்திற்கு ஏற்றவாறு மாறுகிறது.

மேலும் படிக்க | Tirupati: திருமலையில் நடந்த முதல் திருமணம்

ஆணும் பெண்ணும் திருமணம் செய்துக் கொண்டது என்பதில் இருந்து, ஓரே பால் திருமணம் என்பது வரை நவீன காலம் மாறிக் கொண்டே வருகிறது. இந்த திருமணம் கொடுக்கும் அதிர்ச்சியே பெரிது என்பவர்கள், பெண்ணுக்கும் பேய்க்கும் நடைபெறும் திருமணம் (Woman Marry Ghost) பற்றி கேள்விப்பட்டால் என்ன சொல்வார்கள்?

சரி, மாப்பிள்ளை என்ன வேலை செய்கிறார்? மன்னிக்கவும், மரணிப்பதற்கு முன் என்ன வேலை செய்தார்? மாப்பிள்ளை விக்டோரியன் சிப்பாயாக இருந்தவர். மாப்பிள்ளை எர்வர்டோ (Edwardo) தனக்கு மிகவும் பிடித்தமானவர் என்று மணமகள் ப்ரொகார்டே (Brocarde) கூறுகிறார்.

இங்கிலாந்தை சேர்ந்த ப்ரொகார்டே, Oxfordshireஇல் வசிக்கிறார். இந்த 38 வயது பெண்ணின் திருமணம் உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. எட்வர்டோ என்ற பேயை தான் திருமணம் செய்யப் போவதாக அந்தப் பெண் கூறுகிறார்.

மேலும் படிக்க | 'எங்க தங்கைக்கு கல்யாணம்..' அண்ணன்கள் செய்த காரியத்தால் கதறி அழும் நெட்டிசன்கள்

விக்டோரியன் காலத்து சிப்பாய் காதலன்
டெய்லி ஸ்டார் செய்தியின்படி, அந்தப் பெண் திருமணம் செய்யப் போகும் பேய் ஒரு விக்டோரியா நாட்டு ராணுவ வீரர். ப்ரோகார்டே ஒரு பாடகி. எட்வர்டோ பேயை தான் மிகவும் விரும்புவதாக அந்த பெண் கூறுகிறார்.

எட்வர்டோவும் அவரை மிகவும் நேசிக்கிறார். சரி ப்ரகார்டேவை பேய் திருமணம் செய்துக் கொள்ள விரும்புகிறதா? அது தனக்கு உறுதியாக தெரியும் என்று சொல்லும் மணப்பெண், எட்வர்டோ எரிச்சலூட்டும் இயல்புடையவர் எனவே, இதுவரை அவருடன் பேசி திருமண தேதியை முடிவு செய்ய முடியவில்லை என்று மணப்பெண் கூறுகிறார். 

இந்தக் கோடை காலத்தில் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும், அவரது காதலன் எட்வர்டோ குளிர்காலத்தை விரும்புவதாகவும் கூறும் மணப்பெண், திருமணம் தொடர்பான பிணக்கு தீர்ந்ததாகவும் சொல்கிறார். சரி, இதுமட்டுமா விசித்திரமாக இருக்கிறது?

எட்வர்டோவிடம் மிகவும் விசித்திரமான முறையில் பேசுவதாக கூறும் ப்ரோகார்டே, தங்கள் இருவருக்கும் இடையிலான பேச்சு வார்த்தைகள் மூலமாக நடைபெறுவதாக கூறுகிறார்.

எட்வர்டோ ரகசிய குறியீடுகளைப் பயன்படுத்தி செய்தி அனுப்புகிறார். குளிக்கும் போது வெந்நீரில் நீராவியில் எழுதி தன்னிடம் பேசுவதாகவும் அல்லது ஒரு பொருளை கீழே இறக்கி தன் குரலில் பேசுவதாகவும் ப்ரோகார்டே கூறுகிறார்.

மேலும் படிக்க | வேற லெவல் Wedding: நீருக்கடியில் திருமணம் புரிந்த தம்பதி

தலையணைக்கு அருகில் மோதிரத்தை வைத்து காதலை சொன்ன பேய்
கடந்த ஆண்டு எட்வர்டோ தனது தலையணைக்கு அருகில் மோதிரத்தை வைத்து தன்னிடம் அன்பை வெளிப்படுத்தியதாக இந்த காதல் பெண்மணி கூறுகிறார். இதைத் தொடர்ந்து, நீராவியில் கேள்விக்குறியை உருவாக்கி, அவரது காதலை நான் ஏற்றுக்கொள்வேனா என்று கேட்டாராம்!

இருவரும் மிகவும் ஆர்வத்துடன் திருமணத்திற்கு தயாராகி வருவதாக கூறும் கல்யாணப் பெண்,  மறைந்த நடிகை மர்லின் மன்றோவின் பேயை தனது திருமணத்திற்கு சிறப்பு விருந்தினராக அழைக்க விரும்புகிறார். இதுதவிர உலகப் புகழ்பெற்ற நாடக ஆசிரியர் வில்லியம் ஷேக்ஸ்பியரின் பேயையும் திருமணத்திற்கு அழைக்கப் போகிறாராம்!

திருமணத்தை பேயுடன் நடத்தவிருப்பதாக கூறும் இந்த இங்கிலாந்து பெண், எங்கே குடும்பம் நடத்துவார். பூவுலகிலா இல்லை பேயுலகிலா இல்லை இரண்டிற்கும் இடையில் திரிசங்கு சொர்க்கத்திலா? பேயுடனான விநோதமான திருமணம் (Woman Marry Ghost) என்ற செய்தி வைரல் திருமண செய்தியாக மாறிவருகிறது.

மேலும் படிக்க | 70 வயது முதியவரை திருமணம் செய்த இளம்பெண் முதலிரவில் ஓட்டம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News