இரட்டை கிளென்சிங் முறை மூலம் ஒரு நாளைக்கு இரண்டு முறை முகத்தை கிளென்சிங் செய்யவேண்டும்.  முதலில் எண்ணைய் சார்ந்த கிளென்சரை பயன்படுத்திவிட்டு, பின்னர் திரவ சார்ந்த கிளென்சரை பயன்படுத்த வேண்டும்.  இவ்வாறு இரண்டு முறை முகத்தை கழுவுவதன் நோக்கம் முகத்தில் படிந்துள்ள அழுக்குகளை நீக்குவது, முதலில் க்ளென்ஸ் செய்யும்போது அழுக்கு நீங்கும், இரண்டாவது முறை செய்யும்போது ஆழமாக அழுக்குகளை நீக்கி முகம் பளபளப்பாகும்.  இதுபற்றி நிபுணர்கள் கூறுகையில்  இரண்டு முறை கிளென்ஸ செய்வதன் மூலம் நம் முகத்திலுள்ள தேவையற்ற மேக்கப்புகள் நீக்கப்படும், அதிகப்படியான அழுக்குகள், எண்னெய் பசை போன்றவை நீக்கப்படும்.  இதன் மூலம் உங்கள் முகம் ஹைட்ரேட்டாகவும், மென்மையாகவும், எக்ஸோஃபோலியேட்டாகவும் இருப்பதோடு, முகப்பருக்களை சரிசெய்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | உடல் எடையை குறைக்க வேண்டுமா: இரவில் இந்த உணவுகளை தவிர்த்தால் போதும் 


இரண்டு முறை முகத்தை கிளென்ஸ செய்ய பலரும் சோம்பேறியாக இருக்கிறோம்.  ஆனால் அவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் முகத்திலுள்ள அழுக்குகள் போவது மட்டுமல்லாமல் முகத்திற்கு பிரகாசத்தையும் கொடுக்கிறது.  இதிலுள்ள பொருட்கள் சருமத்தில் நன்கு ஆழமாக ஊடுருவி முகத்தில் அடியில் படிந்திருக்கும் அழுக்குகளை முற்றிலுமாக நீக்குகிறது.  இது முக்கியமான செயல்முறை இல்லை என்றாலும், இதனை கடைபிடிப்பது உங்களது சருமத்தின் தரத்தை மேம்படுத்த உதவும்.  


வறண்ட சருமம் கொண்டவர்கள் முதலில் மிஸல்லர் நீரை கொண்டு முகத்தை சுத்தம் செய்யவேண்டும், பின்னர் நல்ல க்ரீமி ஆன கிளென்சரை பயன்படுத்தி முகத்தை கழுவ வேண்டும்.  எண்ணெய் சருமம் கொண்டவர்கள், எண்ணெய் சார்ந்த கிளென்சர்களை பயன்படுத்துவதே சிறந்தது, இது முகத்தில் உள்ள எண்ணையுடன் நன்கு வினைபுரியும்.  நார்மலான சருமத்தை கொண்டவர்கள் செராமைட் கொண்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்த மற்றும் எண்ணெய் சார்ந்த கிளென்சர்களை பயன்படுத்தலாம்.  சென்சிட்டிவான சருமம், முகப்பரு பாதிப்புகள் கொண்டவர்கள் மேக்கப்பை அகற்றும்போது மென்மையான கிளென்சர்களை பயன்படுத்தவும்.  மேலும் அதில் அசெலிக் அமிலம் மற்றும் கிளைகாலிக் அமிலம் போன்ற அழற்சியை எதிர்க்கும் பொருட்கள் உள்ளதா என்பதை பார்த்து பயன்படுத்த வேண்டும்.


மேலும் படிக்க | புற்று நோய் அண்டாமல் இருக்க ‘இந்த’ மசாலாவை உணவில் தினமும் சேர்க்கவும்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR