நீரழிவு நோயாளிகளுக்கு தூக்கம் ஏன் முக்கியம்?
இரவு நேரத்தில் போதுமான தூக்கமின்மை காரணமாக டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு மூச்சு திணறல் மற்றும் நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டு கால் வலி போன்றவை உருவாகக்கூடும்.
நீரிழிவு நோயாளிகளுக்கு போதுமான உறக்கம் அவசியமானது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர், அதிலும் குறிப்பாக இரவு நேரத்தில் நீரிழிவு நோயாளிகளில் எவ்வித இடையூறும் இல்லாமல் நல்ல தூக்கத்தை பெற வேண்டும், இரவு நேரத்தில்சரியாக தூங்கினால் தான் அவரகள் நீரிழிவு நோய் கட்டுக்குள் இருக்கும். நீரிழிவு நோயாளிகள் அமைதியாக ஓய்வெடுக்க வேண்டும், அவ்வாறு செய்தால் தான் அவர்களது உடலுக்கு போதுமான ஆற்றல் கிடைக்கும், மன அழுத்தமின்றி மனதிற்கு நிம்மதி கிடைக்கும் மற்றும் உங்கள் உடலில் நீரிழிவு நோயை அளவை கட்டுக்குள் வைத்திருக்கும் செயல்முறையும் தூண்டப்பட்டு உடல் நல்ல நிலையில் இருக்கும். மேலும் டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இரவில் நன்றாக தூங்காதவர்கள் உடலில் இன்சுலின் சுரத்தலின் அளவில் குளறுபடி ஏற்படும், இன்சுலினில் ஏற்படும் மாறுபாட்டின் காரணமாக உடலில் ரத்த சர்க்கரையின் அளவு அதிகரித்து பாதிப்பை ஏற்படுத்தும்.
அதன் பிறகு நீரிழிவு நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்துவது மிகவும் சிரமமாகிவிடும், அதுமட்டுமல்லாது போதுமான தூக்கமின்மை காரணமாக டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு மூச்சு திணறல், நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டு கால் வலி போன்றவை உருவாகக்கூடும். இதுபோன்ற பாதிப்புகளை நீங்கள் எதிர்கொள்ளக்கூடாது என நினைத்தால் இரவு நேரத்தில் ஒழுங்காக தூங்க வேண்டும். தூக்கத்தை கெடுக்கும் காரணிகளை கட்டுப்படுத்தி நீரிழிவு நோயாளிகள் இரவில் நல்ல உறக்கத்தை பெற சிலவற்றை பின்பற்ற வேண்டும். படுக்கைக்கு முன் வேலைகளை முடிக்க வேண்டாம். எப்போதும் இரவு படுக்கைக்குச் செல்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னர் ஓய்வெடுத்து கொள்ளுங்கள், படுக்கைக்கு செல்வதற்கு முன்னர் வரை வேலைகளை செய்யவேண்டாம். வார இறுதி நாட்கள் உட்பட, ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் இரவில் படுக்கைக்குச் செல்ல முயற்சி செய்ய வேண்டும்.
மேலும் படிக்க | Health Alert: சிறுநீரக கல் இருந்தால் ‘இந்த’ உணவுகளுக்கு NO சொல்லுங்க!
அதேபோல இரவு படுக்கைக்கு செல்லும் முன்னர் செரிமானமாக நேரமெடுத்துக்கொள்ளும் கனமான உணவு வகைகளை சாப்பிடுவதை தவிர்த்து மிதமான எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவுக்குகளை சாப்பிடுவது நல்லது மற்றும் தூங்க செல்வதற்கு முன்னர் ஆல்கஹால் அருந்துவது அல்லது காஃபின் போன்றவற்றை உட்கொள்வதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். மேலும் நள்ளிரவில் ஆழ்ந்த தூக்கத்திலிருந்து எழுந்திருப்பதைத் தவிர்க்க, படுக்கைக்குச் செல்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக எவ்வித திரவ வகைகளையும் உட்கொள்ளுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும், இந்த சில விஷயங்களை நீங்கள் தவறாமல் கடைபிடித்து வந்தால் இரவில் எவ்வித இடையூறுமின்றி நிம்மதியான தூக்கத்தை பெற்று ஆரோக்கியமாக இருக்கலாம்.
மேலும் படிக்க | Anemia: மாதுளை - பீட்ரூட் மட்டுல்ல; இதுவும் ரத்த சோகையை குணப்படுத்தும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ