பறவைக் காய்ச்சலால் கோழி பறவைகள் இறந்து வருவதாக தகவல்கள் வந்துள்ள நிலையில், இந்த நேரத்தில் சிக்கன் மற்றும் முட்டைகளை உட்கொள்வது குறித்து பலரின் மனதில் அச்சம் எழுந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த ஒரு வார காலமாக கேரளா(Kerala), குஜராத், ஹரியானா, பீகார் உள்ளிட்ட 12க்கும் மேற்பட்ட மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பரவி வருகிறது. இதை அடுத்து அரசாங்கம் அதிக எச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.


H5N1 என்பது ஒரு வகை காய்ச்சல், இது பறவைகளுக்கு கடுமையான சுவாச நோய் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது என உலக சுகாதார அமைப்பு (WHO) கூறுகிறது.


பறவைக் காய்ச்சலால் (Bird Flu) கோழிகள் இறந்ததாக தகவல்கள் வந்துள்ள நிலையில், இந்த நேரத்தில் சிக்கன் மற்றும் முட்டைகளை உட்கொள்வது குறித்து மக்கள் மனதில் அச்சம் நிலவுகிறது. சில இடங்களில் கோழியின் விலைகளின் விலையில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.


பறவை காய்ச்சல் காலங்களில் சிக்கன் மற்றும் முட்டைகளை உண்ண முடியுமா?
முட்டை மற்றும் சிக்கனை சரியான முறையில் தயாரித்து சமைத்து சாப்பிடுவது பாதுகாப்பானது என்று WHO கூறுகிறது. சமைக்கும் போது, அதிலுள்ள வைரஸ் செத்து விடும் என உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.


"ஒரு  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கோழிகளை வளர்க்கும் போது சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி வளர்க்க வேண்டும் என்றும் சிக்கனை முறையாக சமைக்க வேண்டும் என்றும் WHO பரிந்துரைக்கிறது.


"கோழிகளை இறைச்சிக்காக கொல்லும் நடைமுறை மூலம் நோய்த்தொற்று பரவும் ஆபத்து அதிகம் உள்ளது எனவும், அதை தவிர்க்க சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்வது முக்கியம் " என்று WHO அறிவுறுத்துகிறது.


"மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு H5N1 வைரஸ் பரவுவது மிகவும் அரிதானது. எனவே பீதி அடையத் தேவையில்லை" என்று அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின்  (AIIMS) பேராசிரியர் IANS செய்தி நிறுவனத்திடம் கூறினார்.


ALSO READ | இன்னும் சில நாட்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கும்: Dr.Harsh Vardhan


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR