Home Viagra: இது உங்கள் அடுப்பங்கரையில் இருக்கும் இயற்கையான வயகரா
சில தசாப்தங்களுக்கு முன்னதாக அலோபதி மருத்துவத்தில் அறிமுகமாகி அபரிதமாக விற்பனையாகும் மருந்து வயகரா. இது பாலியல் தூண்டுதலுக்கான மருந்தாக பிரபலமாக அறியப்படும் மருந்து ஆகும். நமது இந்தியாவில் பண்டைய காலந்தொட்டே பல உணவுபொருட்கள் மனதை மகிழ்விக்கும் ஊக்கியாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதில் ஒன்றுதான் ஜாதிக்காய்.
சில தசாப்தங்களுக்கு முன்னதாக அலோபதி மருத்துவத்தில் அறிமுகமாகி அபரிதமாக விற்பனையாகும் மருந்து வயகரா. இது பாலியல் தூண்டுதலுக்கான மருந்தாக பிரபலமாக அறியப்படும் மருந்து ஆகும். நமது இந்தியாவில் பண்டைய காலந்தொட்டே பல உணவுபொருட்கள் மனதை மகிழ்விக்கும் ஊக்கியாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதில் ஒன்றுதான் ஜாதிக்காய்.
ஜாதிக்காயின் பயன்பாடு பல நூற்றாண்டுகளாக இந்தியாவில் தொடர்கிறது. விறைப்புதன்மை இல்லாமல் இருத்தல் பிரச்சனையால் அவதியுறும் ஆண்களுக்கு ஜாதிக்காய் அருமருந்தாக உதவி புரியும் மன்னர்கள் காலத்தில் இருந்தே சாதிக்காய் வயகராவாக பயன்படுத்தப் பட்டுள்ளது. சாதிக்காயை பயன்படுத்தும்போது உடலில் ஒருவித போதை உணர்வை ஏற்படுத்தி பாலுணர்வை தூண்டுகிறது. ஜாதிக்காயை சூரணமாக செய்து சாப்பிடுவது வழக்கம்.
உயிரணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும் தன்மை கொண்ட ஜாதிக்காய் மன அழுத்தத்தை போக்கும், மனதில் காம உணர்வுகளைப் பெருக்கும். விந்து உற்பத்தியை அதிகரிக்கும். வீட்டிலேயே சாதிக்காய் சூரணம் செய்வது மிகவும் சுலபமானது.
READ ALSO | காற்று மாசுபாடு விந்தணு எண்ணிக்கையை குறைக்கிறதா..
ஜாதிக்காயை லேசான சூட்டில் நெய்யில் வறுத்து இடித்து பொடியாக்கி வைத்துக்கொள்ளவும். காய்ச்சிய பசும்பாலில் 5 கிராம் சூரணத்தை கலந்து காலையும் மாலையும் குடித்து வந்தால், நரம்பு தளர்ச்சி மற்றும் ஆண்மை குறைவைப் போக்கும். நீர்த்துப்போன விந்தினை கெட்டிப்படுத்தும். விந்தில் உள்ள உயிரணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும்.
விந்து முந்துதலை தவிர்க்கவும் சாதிக்காய் பயன்படுத்தப்படுகிறது. அதேபோல, தாம்பத்தியம் தொடர்பான பிரச்சனைகளுக்கு ஜாதிக்காய் அருமருந்தாக பயன்படுகிறது.
ஆனால், கருவுற்ற பெண் சாதிக்காயை சாப்பிட்டால், அது கருச்சிதைவுக்குக் காரணமாகும் என்றும் நம்பப்படுகிறது. அதற்கு காரணம் சாதிக்காய், புராஸ்டோகிலான்டின் உற்பத்தியைத் தடை செய்கிறது. அதோடு, மனதை மயக்கும் தன்மையை கொண்டது. எனவே சாதிக்காயை அதிக அளவு பயன்படுத்தினால், கர்ப்பிணியின் கரு கலைந்துவிடும் என்று கூறப்படுகிறது.
Also Read | மூங்கிலின் மருத்துவ பண்புகள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR