Exercises To Burn More Calories: நமது வயிறு மற்றும் இடுப்பைச் சுற்றி கொழுப்பு அதிகரிப்பதால், உடலின் அமைப்பும் கெட்டுவிடும் என்பதோடு, தோற்றத்தையும் பாதிக்கும். நீங்கள் உடற்பயிற்சி செய்யும் போது, உடல் எடையை குறைக்க, தொப்பையை  கரைக்க அதிக எண்ணிக்கையிலான கலோரிகளை எரிப்பது தான் பலன் தரும். இந்நிலையில், அதிக கலோரிகளை எரிக்க உதவும் உடற்பயிற்சிகளை அறிந்து கொள்ளவதன் மூலம், உடலை பிட்டாக வைத்துக் கொள்ளலாம். கொழுப்பை குறைக்க பல வகை டயட்டுகள் நிச்சயம் உதவும். இருப்பினும் இதனுடன் சேர்ந்து உடற்பயிற்சிகளில் ஈடுபடுவதும் மிகவும் முக்கியமாகும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும்  இருக்க உடல் எடை கட்டுக்குள் இருக்க வேண்டும். அதற்கு, நீங்கள் உட்கொள்வதை விட அதிக கலோரிகளை எரிக்க (Weight Loss Tips) வேண்டும். சைக்கிள் ஓட்டுதல், ஜாகிங் அல்லது ஓட்டம் போன்ற அதிக தீவிரம் கொண்ட உடற்பயிற்சிகள், பொதுவாக மற்ற உடற்பயிற்சிகளை விட அதிக கலோரிகளை எரிக்கிறது. உடற்பயிற்சியின் தீவிரம், உங்கள் உடற்பயிற்சியின் காலம், வேகம், வயது, உயரம் மற்றும் எடை ஆகியவற்றின் அடிப்படையில், உங்களது உடற்பயிற்சி மூலம் எரிக்கப்படும் கலோரிகளின் எண்ணிக்கை ஒருவருக்கு ஒருவர் மாறுபடும் என்று பயிற்சியாளர்கள் கூறுகிறார்கள்.


அதிக கலோரிகளை எரிக்க உதவும் உடற்பயிற்சிகள்


ஓடுதல் அல்லது ஜாகிங்


ஜாகிங் அல்லது ஓடுவது சிறந்த வகையில் கலோரிகளை எரிக்கும் பயிற்சிகளில் ஒன்றாகும். ஒரு மணிநேர ஓட்டத்தில் ஒரு சராசரி நபர் 500-1000 கலோரி வரை எரிக்க முடியும். இருப்பினும், உங்கள் வேகம் மற்றும் உடல் வலிமை ஆகியவற்றை பொறுத்து சிறிது மாறுபடலாம். ஆனால் ஓடுவது உடலில் உள்ள ஒவ்வொரு தசைக்கும் வேலை கொடுக்கிறது. இதனால் அதிக கலோரி எரிக்கப்படுகிறது.


சைக்கிள் ஓட்டுதல்


சைக்கிள் ஓட்டுதல் சிறந்த கார்டியோ பயிற்சிகளில் ஒன்றாகும். இதன் மூலம் ஒரு மணி நேரத்தில் 500-700 கலோரிகளை எரிக்க முடியும். உடற்பயிற்சிக்கென பிரத்யேகமான அசையும் மற்றும் நிலையான இருசக்கர வாகனங்களை ஓட்டி பயிற்சி செய்தல் உங்கள் முழங்கால்கள், கைகள், கால்கள் மற்றும் உடலின் முக்கியமான தசைகளுக்கு வேலை கொடுக்கின்றன. இதனால், அதிக கலோரி எரிக்கப்படுகின்றன.


பிளாங்க் பயிற்சி


பிளாங்க் உடற்பயிற்சி, உடலின் முக்கிய தசைகளை வலுப்படுத்த ஒரு சிறந்த பயிற்சியாக கருதப்படுகிறது. இந்த உடற்பயிற்சியை, ஒரு நாளைக்கு 30 முதல் 1 நிமிடம் வரை கூட செய்யலாம். ஆரம்பத்தில் இந்த சிறிது நேரம் செய்து, பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக இந்த நேரத்தை அதிகரிக்கலாம்.  முதலில் தரையில் குப்புற படுத்துக் கொண்டு கைகளை மடக்கி முன்பக்கமாக வைக்க வேண்டும். கால் விரல்கள் தரையில் பதித்தபடி இருக்க வேண்டும். முன்னங்கை முழுவதையும் தரையில் ஊன்றி இருக்க வேண்டும். இப்போது உடலை தரையிலிருந்து மேலே உயர்த்த வேண்டும். இந்த பயிற்சி மூலம உடலில் பலவேறு பாகங்களில் உள்ள தசைகளுக்கு வேலை கிடைக்கிறது.


மேலும் படிக்க | வேகமா எடை குறைய வெதுவெதுப்பான நீரில் இதை கலந்து குடிங்க போதும்.. மேஜிக் நடக்கும்


படிக்கட்டுகளில் ஏறுதல்


படிக்கட்டுகளில் ஏறுவது உங்கள் உடல் எடையைக் குறைக்கவும், உடல் எடையைக் குறைக்கவும் உதவுவதோடு, உங்கள் உடல் வலிமை மற்றும் இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது. படிக்கட்டு ஏறுதல் ஓய்வு நேரத்தில் நீங்கள் எரிக்கும் கலோரிகளை விட கிட்டத்தட்ட 8-10 மடங்கு அதிகமாக இருக்கும். எனவே, முடிந்தவரை லிஃப்ட் அல்லது எஸ்கலேட்டரைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக ஒவ்வொரு முறையும் படிக்கட்டுகளில் ஏறுவது நல்லது.


ஸ்கிப்பிங்


ஸ்கிப்பிங் பயிற்சி அல்லது குதிப்பது உங்கள் ஆரோக்கியத்திற்கு அதிசயங்களைச் செய்யும். ஸ்கிப்பிங் பயிற்சி உங்கள் கீழ் மற்றும் மேல் உடலை வலுப்படுத்த உதவுகிறது, அதே நேரத்தில் உடல் வலிமை மற்றும் இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இது உங்கள் மனதை ஒருமுகப்படுத்தவும் உதவுகிறது, ஏனெனில் நீங்கள் குதிக்கும் போது உங்கள் மூளையும் வேலை செய்ய வேண்டும். மேலும் ஒரு மணி நேரத்தில் குறைந்தது 600 -1000 கலோரிகளை எரிக்க உதவும்.


பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.


மேலும் படிக்க | பிபி அளவு கட்டுக்குள் இருக்க... நீங்கள் கடைபிடிக்க வேண்டியவை..!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ