பப்பாளியிடம் இருந்து தள்ளியே இருங்க.... இந்த உடல்நலப் பிரச்னைகள் இருந்தால்...!
Side Effects of Papaya: சில நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் பப்பாளியில் இருந்து தூரம் இருப்பதே நல்லது. அந்த வகையில், யார் யார் பப்பாளியை சாப்பிடக்கூடாது என்பதை இங்கு காணலாம்.
Side Effects of Papaya: பப்பாளி பழம் நாடு முழுவதும் மக்களால் விரும்பி உண்ணப்படும் பழமாகும். மருத்துவ நிபுணர்ககள் மட்டுமின்றி ஊட்டச்சத்து நிபுணர்களும் கூட பப்பாளி பழத்தை அடிக்கடி சாப்பிடும்படி மக்களுக்கு பரிந்துரைக்கின்றனர். குறிப்பாக, செரிமானம் சீராக, நோய் எதிர்ப்பு சக்தி வலுபெற பப்பாளி கைக்கொடுக்கும். பப்பாளியின் விதைக்கூட பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குவதாக கூறப்டுகிறது.
இருப்பினும் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதை போல், அளவுக்கு மீறி பப்பாளியை சாப்பிட்டாலும் பிரச்னையே வரும். அதே நேரத்தில், சில பேர் பப்பாளியை சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது. அதிலும் சில நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் பப்பாளியில் இருந்து தூரம் இருப்பதே நல்லது என்றும் கூறுகின்றனர். பப்பாளியில் நார்ச்சத்து, வைட்டமிண் சி போன்ற உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அதிகம் இருந்தாலும் கூட அது பலருக்கு பிரச்னையை உண்டாக்கலாம் என்கின்றனர். யார் யார் பப்பாளியை சாப்பிடக்கூடாது என்பதை இங்கு காணலாம்.
மாத்திரை, மருந்து சாப்பிடுவோர் கவனத்திற்கு...
ரத்தத்தை மெலிதாக்கும் மருந்துகளை எடுத்துக்கொள்பவர்கள் பழுத்த பப்பாளிகளை சாப்பிட்டால் உடல்நிலை மோசமாகும் வாய்ப்புள்ளது. இதய நோய் இருப்பவர்கள் பெரும்பாலும் ரத்த ஓட்டம் சீராக இருப்பதற்காக இந்த மருந்துகளை உட்கொள்வார்கள். அந்த வகையில் பப்பாளியை சாப்பிடும்பட்சத்தில், அவர்களுக்கு காயம் ஏதும் ஏற்பட்டால் நிக்காமல் ரத்தப்போக்கு ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.
மேலும் படிக்க | Fridge இருக்கா? ஜாக்கிரதை... இதுவும் UTI-க்கு ஒரு காரணமாம்: ஆய்வில் வந்த பகீர் தகவல்
இந்த அலர்ஜிகள் இருப்போர் கவனத்திற்கு...
உடலில் அலர்ஜி பிரச்னை இருக்கும் நபர்கள் பப்பாளியை தவிர்ப்பது நலம். ஏனென்றால் இதில் இருக்கும் Papain என்ற மூலக்கூறு அலர்ஜியை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. இது தோலில் அரிப்பு மற்றும் எரிச்சல் உணர்வு அதிகரிக்கும்.
சிறுநீரக கல் இருப்போர்...
பப்பாளியில் வைட்டமிண் சி அதிகம் இருக்கிறது. இதில் கால்சியமும் கலந்திருக்கிறது. அதுதான் பெரிய பிரச்னை. எனவே, சிறுநீரக கல் இருப்போர் பப்பாளியை தவிர்ப்பது நலம்.
ஆஸ்துமா நோயாளிகள்...
மூச்சு சார்ந்த பிரச்னைகள் இருப்போரும் பப்பாளியை விட்டு தூரம் இருப்பதுதான் நல்லது. அதில் உள்ள சில நொதிப்பொருள்கள் ஆஸ்துமா நோயாளிகளுக்கு பிரச்னையை உண்டாக்கும்.
கருவுற்ற பெண்கள்...
பல்வேறு மருத்துவர்கள் கருவுற்ற பெண்களை பப்பாளியை சாப்பிட வேண்டாம் என்கிறார்கள். அந்த காலகட்டத்தில் அது அவர்களின் உடல்நிலைக்கு தீங்கு விளைவிக்கும் என கூறப்படுகிறது.
(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான மற்றும் வீட்டு வைத்தியங்கள் சார்ந்த தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டவையாகும். இதனை பின்பற்றும் முன்னர் மருத்துவ ஆலோசனையை பெற வேண்டும். இதனை ஜீ நியூஸ் உறுதிப்படுத்தவில்லை)
மேலும் படிக்க | கொலஸ்ட்ரால் முதல் வெயிட்லாஸ் வரை... ஆரோக்கியத்திற்கு வரமாகும் பாசிப்பயறு...
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ