)
Heart Health: நாளுக்கு நாள் மாரடைப்புக்கு ஆளாகும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, சுகாதாரமற்ற உணவு, பதற்றம், அழுத்தம், இறுக்கம் என இவை அனைத்தும் நம் வாழ்வில் அதிகரித்து வருகின்றன. இப்படி ஒரு நிலையில், நம் இதயத்தை மிக பாதுகாப்பாக பேணி பாதுகாக்க வேண்டியது மிக அவசியமாகும்.
இதய நோய்கள் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள மக்களிடையே பெரும் பீதியை கிளப்பியுள்ளன. சமீப காலங்களில் இதய நோய்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்துள்ளதே இதற்கு முக்கிய காரணமாகும். அதுவும் பலர் மாரடைப்பால் பாதிக்கப்படுவதை நாம் காண்கிறோம். மாரடைப்பு மனிதர்களின் தவறுகளால் ஏற்படும் ஒரு நோய். கடந்த சில தசாப்தங்களில், நமது வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கங்கள் மிகவும் மோசமடைந்துள்ளன. மேலும், உடல் செயல்பாடுகளும் குறைந்துள்ளன.
மாரடைப்பை தடுக்க உணவுப்பழக்கத்தில் அதிகப்படியான கட்டுப்பாடு தேவை. இதயத்தை வலுவிழக்கச் செய்து, மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கும் சில உணவு மற்றும் பானங்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
வறுத்த உணவுகள்
வறுத்த உணவுகள் இதயத்திற்கு தீங்கு விளைவிக்கும் என நிபுணர்கள் கூறுகிறார்கள். ஏனெனில் அவற்றில் நிறைவுற்ற கொழுப்பு அதிகமாக உள்ளது. இவற்றை உண்பதால், உடலில் கொழுப்பின் அளவு அதிகரிக்கும். இது மாரடைப்புக்கு முக்கிய காரணமாக அமைகின்றது.
உப்பு அதிகம் உள்ள உணவுப் பொருட்கள்
இது தவிர, சிப்ஸ், பிரெஞ்ச் பிரைஸ் உள்ளிட்ட பிற உணவுகளில் உப்பின் அளவு மிக அதிகமாக இருப்பதால், அதில் உள்ள சோடியத்தை நாம் உட்கொள்வதால், இரத்த அழுத்தம் அதிகரித்து, மாரடைப்பு ஏற்படும். எனவே அதை உட்கொள்வதை தவிர்ப்பது நல்லது.
இனிப்புகள்
சர்க்கரை, இனிப்புகள், கேக், குக்கீக்க்கள் போன்ற இனிப்பு வகைகளில் அதிக அளவு சர்க்கரை உள்ளது. இதனால் நீரிழிவு நோய் ஏர்படுவதோடு உடல் பருமனும் அதிகரிக்கின்றது. இதன் காரணமாக இதய ஆரோக்கியம் மோசமடையத் தொடங்குகிறது. எனவே, இவற்றை உட்கொள்வதைத் தவிர்ப்பது நல்லது.
சிவப்பு இறைச்சி
சிவப்பு இறைச்சி புரதத்தின் வளமான ஆதாரமாகக் கருதப்படுகிறது. ஆனால் அதை அதிகமாக உட்கொள்வது இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும். ஆகையால், குறைந்த அளவிலேயே இதை உட்கொவது அவசியம். இதன் மூலம், இதனால் ஏற்படும் கடுமையான நோய்களிலிருந்து உங்களை காப்பாற்றிக்கொள்ளலாம்.
குளிர் பானங்கள்
குழந்தைகள், முதியவர்கள் மற்றும் சிறியவர்கள் என அனைத்து வயதினரும், குளிர் பானங்களை விரும்பி உட்கொள்கிறார்கள். ஆனால் இதில் அதிக சர்க்கரை உள்ளது. இதை நீண்ட காலத்திற்கு உட்கொண்டால், இதனால் கடுமையான இதயம் தொடர்பான நோய்களின் அபாயம் அதிகரிக்கிறது. ஆகையால் இவற்றை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ