பல தசாப்தங்களுக்கு முன்பு, பல்துலக்க வேப்பம் குச்சிகள், ஆல மரக்குச்சிகள் ஆகியவை தான் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டது. ஆனால் மாறிவரும் கால நிலையில், இப்போது பிரெஷ்கள் அந்த இடத்தை முழுமையாக பயன்படுத்துகின்றன. நமது அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிவிட்டது. இதன் மூலம் பற்கள் மற்றும் ஈறுகளை முழுமையாக சுத்தம் செய்ய இயலுகிறது. பெரும்பாலான பல் மருத்துவர்கள் காலையில் எழுந்த பிறகும், இரவு படுக்கைக்குச் செல்வதற்கு முன்பும் துலக்க வேண்டும் என பரிந்துரைக்கின்றனர். எனவே, பிரெஷ்ஷை தேர்ந்தெடுக்கும்போது, ​​​​சில விஷயங்களில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பல் துலக்க பிரஷ் வாங்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை:


பல் துலக்க பிரஷ்ஷை வாங்கும் போது பெரும்பாலும் நாம் கவனக்குறைவாக, கிடைத்ததை வாங்கும் மனநிலையில் இருக்கிறோம். அதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டியது மிகவும் முக்கியம். அவசரமாக வாங்குவது அல்லது மலிவான விலையில் உள்ள பிரெஷ்ஷை வாங்குவது என்பது, நம் வாய் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல, இது பற்கள் மற்றும் ஈறுகளுக்கு பலத்த சேதத்தை ஏற்படுத்தும், பிரச்சனைகளை எவ்வாறு தவிர்க்கலாம் என்பதை அறிந்து கொள்ளலாம்.


மேலும் படிக்க | Health Alert: இரவில் சாப்பிடக் கூடாத ‘சில’ பழங்கள்!


1. நல்ல பிராண்ட் டூத் பிரஷ் வாங்கவும்


செலவை குறைக்க வேண்டும் என்ற நோக்கில், பலருக்கு மலிவான டூத் பிரஷ்களை வாங்கும் பழக்கம் உள்ளது. அவை பற்கள் மற்றும் ஈறுகளின் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. அதன் தரம் முழுமையாக சோதிக்கப்படுவதில்லை. எனவே அதிக பணம் செலுத்த வேண்டியிருந்தாலும், நல்ல பிராண்டட் பொருட்களை மட்டுமே வாங்குவது நல்லது.


2. மென்மையான முட்கள்உள்ள பிரெஷ்ஷை தேர்ந்தெடுக்கவும்


பொதுவாக, பிரெஷ் முட்கள் சிறிது கடினமாக இருந்தால், பற்களின் தூய்மைக்கு சிறந்தது என்று நாம் நினைக்கிறோம். ஆனால் இந்த அனுமானம் முற்றிலும் தவறானது. கடினமான தன்மை கொண்ட பிரெஷ்கள் ஈறுகளில் இரத்தப்போக்கு மற்றும் அதிக வலியை ஏற்படுத்தும் என்பதால் மென்மையான பிரெஷ்களையே நீங்கள் தேர்வு செய்ய வேண்டும்.


3. நல்ல கிரிப் இருக்கும் டூத்பிரஷ் 


தினமும் உங்கள் பற்களை சுத்தம் செய்ய, வழுக்கும் வகையில் உள்ள பிரெஷ்களை நீங்கள் பயன்படுத்தக்கூடாது. நல்ல கிரிப்களுடன் கூடிய பல வகையான பிரெஷ்கள் இன்று சந்தையில் கிடைக்கின்றன. இதைப் பயன்படுத்துவதன் நன்மை என்னவென்றால், இதன் பிடி வலுவாக இருப்பதோடு, பற்களை மென்மையாகவும் சுத்தம் செய்கிறது.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | Brain Health: மூளை சோர்வை நீக்கி ‘மன அமைதியை’ தரும் அற்புத மூலிகைகள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ