நிதி ஆயோக் சுகாதார தர பட்டியலில் இந்தியாவின் தலைசிறந்த மாநிலம் கேரளா தேர்வு செய்யப்பட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உலக வங்கியின் ஒத்துழைப்புடன் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் உதவியுடன் மத்திய நிதி ஆயோக் ஆண்டுதோறும் சுகாதாரம் தொடர்பான ஆய்வறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இந்தாண்டிற்கான பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. இப்பட்டியலில் கேரளா மாநிலம் முதலிடத்தை பிடித்துள்ளது. சுகாதாரக்கேடால் பல உயிர்களை பலி வாங்கிய பிகார் மற்றும் உத்திரபிரதேச மாநிலம் பின்தங்கிய நிலையில் உள்ளது.


நோய்கள் தாக்குமுன் காத்தால், விழிப்புணர்வு உண்டாக்குதல், வந்த பின்னர் மேலும் பரவாமல் தடுத்தல், கட்டுப்படுத்தி, குணப்படுத்த அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் உள்ளிட்ட 23 அம்சங்களின் அடிப்படையில் நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் ஆய்வு நடத்தப்பட்டு இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.


அந்த வகையில் கடந்த 2015-16 ஆண்டுகளை அடிப்படையாக வைத்து  2017-18 ஆண்டுகளை மேற்கோளாக காட்டி இந்த ஆண்டு வெளியான அறிக்கையில் சுகாதாரத்தை பொருத்தமட்டில் இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாக கேரளா அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் படுமோசமான மாநிலமாக உத்தரப்பிரதேசம், பிகார் மாநிலங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.


கேரளாவுக்கு அடுத்தபடியாக முதல் மூன்று இடங்களில் ஆந்திரா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்கள் இடம்பெற்றுள்ளன.


நிதி ஆயோக் வெளியிட்டுள்ள முழு பட்டியல் விவரம்...


  1. கேரளா

  2. ஆந்திர பிரதேஷ்

  3. மகாராஷ்டிரா

  4. குஜராத்

  5. பஞ்சாப்

  6. இமச்சாள் பிரதேஷ்

  7. ஜம்மு - காஷ்மீர்

  8. கர்நாடகா

  9. தமிழ் நாடு

  10. தெலங்கானா

  11. மேற்கு வங்கம்

  12. ஹரியாணா

  13. சட்டீஸ்கர்

  14. ஜார்கண்ட்

  15. அசாம்

  16. ராஜஸ்தான்

  17. உத்ரகாண்ட்

  18. மத்திய பிரதேஷ்

  19. ஒடிசா

  20. பிகார்

  21. உத்திர பிரதேஷ்