Kidney Failure: சிறுநீர் இந்த நிறத்தில் வருகிறதா? சிறுநீரக செயலிழப்புக்கான அறிகுறி
உடலின் மிக முக்கிய உறுப்பான கிட்னி செயலிழப்பை சிறுநீர் நிறத்தைக் கொண்டே அறிந்து கொள்ள முடியும்.
இந்தியாவில் சிறுநீரக செயலிழப்பு என்பது அதிரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்க வழக்கம். ஜங்க் புட்டுகளை விரும்பி சாப்பிடுபவர்கள் மற்றும் சாலையோரக் கடைகளில் கிடைக்கும் சுகாதாரமற்ற உணவுகளை சாப்பிடுவதால் இத்தகைய பிரச்சனைகளை நாளடைவில் எதிர்கொள்கின்றனர். அந்த நேரத்தில் சிறுநீரின் நிறம் மாறும். எந்த நிறத்தில் சிறுநீர் வருகிறது என்பதை பொறுத்து, என்ன பாதிப்பு? என்பதை அறிந்து கொள்ளலாம்.
மது அருந்துதல், உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்ட பிரச்சனை உள்ளவர்களுக்கு சிறுநீர செயலிழப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. இவைதவிர சில மருந்துகளும் சிறுநீரக பாதிப்புகளுக்கு காரணமாக அமைகின்றன. ஆரம்ப அறிகுறிகளில் எந்த பிரச்சனையும் தெரியாது. ஆனால் அப்போதே கண்டுகொண்டால், தீவிரமான பாதிப்பில் இருந்து தப்பிக்க உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ள முடியும். முற்றிய நிலை என்றால் நிறைய பாதிப்புகளும் அறிகுறிகளும் தென்படத் தொடங்கும்.
மேலும் படிக்க | யூரிக் அமிலத்தை சீராக்கி மூட்டு வலி பிரச்சனை வராமல் தடுக்கும் உணவுகள்
ஆரம்ப அறிகுறிகள் என்ன?
குறைவாக சிறுநீர் கழித்தல்
மூட்டு வலி
மூச்சு திணறல்
சிறுநீரக செயலிழப்பு அறிகுறிகள்
தலைவலி
உடல் முழுவதும் அரிப்பு
நாள் முழுவதும் சோர்வு
இரவில் தூங்குவதில் சிக்கல்
எடை இழப்பு அல்லது பசியின்மை
உடல் பலவீனம்
நினைவாற்றல் இழப்பு
இந்த பாதிப்புகள் சிறுநீரக செயலிழப்புக்கான முக்கிய அறிகுறிகள் ஆகும்.
சிறுநீரின் நிறத்தில் தெரிந்து கொள்ளுங்கள்
வெளிர் மஞ்சள் நிறம் - உடல் நன்கு நீரேற்றமாக உள்ளது
அடர் மஞ்சள் நிறம் - உடலில் நீர் பற்றாக்குறை, அதாவது போதுமான நீர் பருக வேண்டும்
ஆரஞ்சு நிறம் - உடலில் கடுமையான நீர் பற்றாக்குறை அல்லது இரத்தத்தில் பித்தத்தின் அறிகுறி
இளஞ்சிவப்பு அல்லது சிவப்பு நிறம் - சிறுநீரில் இரத்தம் அல்லது ஸ்ட்ராபெர்ரி மற்றும் பீட்ரூட் போன்ற உணவுகளை சாப்பிடுவதால்
சிறுநீரில் நுரை - சிறுநீரில் புரதம் இருப்பதற்கான அறிகுறி மற்றும் சிறுநீரக செயலிழப்பு போன்ற சிறுநீரக நோயின் அறிகுறி
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | சிறுநீரக பிரச்சனை இருக்கா... இந்த உணவுகளுக்கு 'NO' சொல்லுங்க!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைதளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR