Quick Recipes: சட்டென்று தயார் செய்ய சில சத்தான & சுவையான Lunch Box உணவுகள்!
Quick & Best Recipes: காலை உணவிற்கும், மதிய உணவிற்கும், சில நிமிடங்களில் தயாரிக்கக்கூடிய, சுவையான மூன்று சமையல் குறிப்புகளைத் தெரிந்து கொள்வோம்.
காலை உணவு என்பது மிகவும் முக்கியம். ஆனால், அவசர யுகத்தில், சுவையான சத்தான காலை உணவை தயாரிப்பதும், குழந்தைகளுக்கு அலுவலகத்திற்கும் லஞ்ச பாக்ஸிற்கான உணவு தயாரிப்பதும், ஒரு சவாலாகவே ஆகி விடுகிறது. இந்நிலையில், சட்டென்று தயாரிக்கக் கூடிய சில, சத்தான சுவையான உணவுகளை பற்றி அறிந்து கொள்ளலாம். சுவையான உணவு மனித வாழ்வில் மிகவும் முக்கியமானது இந்த பரபரப்பான வாழ்க்கையில், காலை உணவு மற்றும் மதிய உணவுக்கு என்ன செய்வது என்று புரியாமல் தவிப்பவர்களுக்கு இந்த குறிப்புகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சில நிமிடங்களில் தயாரிக்கக்கூடிய அத்தகைய உணவைப் பற்றிய தகவல்களை இன்று நாங்கள் உங்களுக்கு வழங்கப் போகிறோம்.
மசாலா கிச்சடி & கீரை கிச்சடி
மசாலா கிச்சடி என்பது எளிதில் தயாரிக்க கூடிய சிறப்பான சத்தான ஒரு உணவாகும். இது டிபன் பாக்ஸிற்கு மட்டுமல்ல ,நோய்வாய்ப்பட்டிருப்பவர்களும் சாப்பிடக் கூடிய சத்தான, சுவைஆயன் உணவாகும் நோய்வாய்ப்பட்டிருந்தால் இது குறிப்பாக செய்யப்படுகிறது. இதை செய்ய, உங்களுக்கு தேவையானது சிறிது பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, மிளகாய் மற்றும் ஏதேனும் பிடித்த காய்கறிகள் அல்லது கீரை. முதலில், ஜீரகம், தாளித்து, தாக்காளி வெங்காயத்தில் உப்பு மிளகாய்ய் பொடி, சிறிது கரம் மசாலா சேர்த்து போட்டு வதக்கி, அதில் உங்களுக்கு பிடித்த அனைத்து காய்கறிகளையும் சேர்த்து சிறிது வதக்க வேண்டும். கீரை கிச்சடிக்கு, காய்கறிகளுக்கு பதில் பொடியாக நறுக்கிய கீரை சேர்க்க வேண்டும். பின்னர் அதனுடன் பாசிப் பருப்பு மற்றும் வழக்கமாக சாப்பிடும் அரிசி அல்லது பாஸ்மதி அரிசி சேர்க்கவும். அதனை பிரஷ்ர் குக்கரில் வேக வைக்க வோண்டும் இரண்டு அல்லது மூன்று விசில்களுக்குப் பிறகு உங்கள் சுவையான மசாலா கிச்சடி அல்லது கீரை கிச்சடி தயாராகி விடும். மசாலா கிச்சடி அல்லது கீரை கிச்சடியை தயிர் பச்சடி அல்லது தயிருடன் சாப்பிட மிக சுவையாக இருக்கும்.
மேலும் படிக்க | Health Alert: சிறுநீரக கல் இருந்தால் ‘இந்த’ உணவுகளுக்கு NO சொல்லுங்க!
பன்னீர் கீரை பராத்தா
பராட்டாவில் பல வகைகள் உள்ளன. இது காலையில் மிகவும் சுவையான காலை உணவாகவும், டிபன் பாக்ஸ் உணவாகவும் கருதப்படுகிறது. காலை உணவிற்கும் பராத்தா தான் முதல் தேர்வு. இதயாரிக்க, கீரை மற்றும் பன்னீரை எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது கீரையை நன்கு சுத்தம் செய்து, சிறிது உலர்த்திய பிறகு பொடிப் பொடியாக நறுக்கி பன்னீருடன் பிசைந்து வைத்துக் கொள்ளவும், சுவைக்கு ஏற்ப அதில் உப்பு, மிளகாஇ பொடி, சிறிது கரம் மசாலா சேர்க்கவும். பின்னர் பிசைந்த சப்பாத்தி மாவில், பன்னீர் கலவையை ஸ்டப்பிங் செய்து பராத்தா தயாரித்து உண்டு மகிழவும்.
முட்டை மசாலா
பெரும்பாலானோர், முட்டை மசாலாவை முட்டை கறி என்றும் அழைப்பர். இது அசைவ உணவில் மிகவும் சுவையான உணவாக கருதப்படுகிறது. இது உங்கள் மதிய உணவிற்கு சிறந்த தேர்வாக இருக்கும். பல சமயங்களில் இறைச்சி சாப்பிடாதவர்களும் முட்டையை உணவில் சேர்த்துக்கொள்ள தயங்க மாட்டார்கள். இதனை தயாரிக்க, உங்களுக்கு தேவையானது வேகவைத்த முட்டை, தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி, மிளகாய் மற்றும் சில மசாலா. உங்கள் ரசனைக்கேற்ப தயார் செய்யலாம்.
மேலும் படிக்க | Anemia: மாதுளை - பீட்ரூட் மட்டுல்ல; இதுவும் ரத்த சோகையை குணப்படுத்தும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ