உறக்கம் என்பது அனைவருக்கும் மிகவும் தேவையான ஒன்று. தினமும் சரியான உறக்கம் இல்லையென்றால் அதுவே நமது உடலில் பல நோய்களை உண்டுபண்ணக்கூடும். ஆனால் எதுவுமே அளவோடு இருக்க வேண்டும் என்பதைப் போல உறக்கமும் அளவோடு இருக்க வேண்டும். காலை வேளையில் அதிக நேரம் உறங்குவது நல்லதல்ல.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காலை வேளையில் நல்ல தூக்கத்தில் (Sleep) இருக்கும்போது எழுந்துகொள்வதென்பது பலருக்கு மிகவும் கடினமான விஷயமாக உள்ளது. ஆனால், அதிகாலையில் எழுவது நம் உடலுக்கும் மனதுக்கும் மிகவும் நல்லது. வெயில் காலமோ குளிர் காலமோ காலையில் சோர்வில்லாமல் எழுந்திருக்க சில உதவிக்குறிப்புகளை இங்கே காணலாம்.


உங்கள் உடலையே உங்கள் அலாரமாக்குங்கள்


அலாரம் வைத்து விழிப்பதற்கு பதிலாக உங்கள் உடலையே உங்கள் அலாரத்தைப் போலாக்குங்கள். இதற்கு தொடர்ந்து 10 நாட்கள் ஒரே நேரத்தில் தூங்கி ஒரே நேரத்தில் எழுந்திருக்க வேண்டும். இது உங்கள் பாடி க்ளாக்கை செட் செய்யும்.


ஆரோக்கியமான மற்றும் லேசான இரவு உணவை உட்கொள்ளவும்


இரவில் லேசான மற்றும் ஆரோக்கியமனா உணவை (Healthy Food) உட்கொண்டால், உடல் லேசாக இருக்கும். காலையில் எழுந்திருக்கும்போது சோம்பெறித்தனம் இருக்காது. அதிக அளவிலான அல்லது எளிதில் ஜீரணமாகாத உணவுகளை உட்கொண்டால் அதனால் நம் உடலில் சுறுசுறுப்பு குறைந்து காலை எழுந்திருக்கும் போது நம் உடலில் சோர்வே அதிகமாக இருக்கும். இதனால் எழுந்துகொள்வதில் சிரமம் ஏற்படும்.


ALSO READ: அஸ்வகந்தா சிலருக்கு விஷமாகலாம்.. எச்சரிக்கை தேவை..!!


காலை எழுந்தவுடன் குளிக்கவும்


படுக்கையில் இருந்து எழுந்தவுடன் சிறிது நேரத்திற்கெல்லாம் குளிக்கவும். ஏனென்றால், நீர் உடலின் வெப்பநிலையை மாற்றி, நீங்கள் சுறுசுறுப்பாக உணர வைக்கும். உடற்பயிற்சி (Exercise) போன்றவற்றை செய்யும் பழக்கம் இருந்தால் அதை செய்து முடித்தவுடனேயே குளித்து விடுவது நல்லது. குளித்த பின்னர் நம் உடல் பெறும் புத்துணர்ச்சியால் உடலில் அதிக உறுதி பிறக்கிறது. சிலர் காலையில் எழுந்தவுடன் சிறிது நேரத்திற்கெல்லாம் மீண்டும் தூங்கி விடுவார்கள். அதை குளிப்பதன் மூலம் தவிர்க்கலாம்.


உடற்பயிற்சி செய்யுங்கள்


 உங்களை சுறுசுறுப்பாக வைத்திருக்க உடற்பயிற்சி செய்யுங்கள். இது நாள் முழுவதற்குமான புத்துணர்ச்சியை அளிக்கும். மேலும் உடற்பயிற்சி செய்வதால், மதிய வேளையில் சோர்வில்லாமல் நாள் முழுவதும் உடல் சுறுசுறுப்பாக இருக்கும்.


தூங்குவதற்கு முன்னும் பின்னும் தண்ணீர் குடிக்கவும்


இரவில் படுக்கைக்குச் செல்வதற்கு முன்பும், காலையில் எழுந்தவுடனும் தண்ணீர் குடுப்பது நல்லது. இதனால் உடல் சோர்வில்லாமல், துடிப்பாக இருக்கும். மேலும் தண்ணீர் நம் உடலின் உணவின் ஜீரணத்திற்கும் உதவும். இதனால் உடலில் உள்ள மந்தமான நிலை மாறி உடல் சுறுசுறுப்பாக இருக்கும். 


ALSO READ: Health News: உடல் சோர்வை வெல்ல, நோயை வெல்ல, வெல்லம் இருக்க வேறென்ன வேண்டும்?


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR