Pfizer தடுப்பூசியை இந்தியாவில் பயன்படுத்துவதில் உள்ள சவால்கள்
இந்தியாவில், பாரத் பயோடெக்கின் கோவாக்சின் மற்றும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் (எஸ்ஐஐ) கோவிஷீல்ட் ஆகிய தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ள நிலையில், இது வரை 15 கோடி பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில், பாரத் பயோடெக்கின் கோவாக்சின் (Covaxin) மற்றும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் (SII) கோவிஷீல்ட் (Covishield) ஆகிய தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ள நிலையில், இது வரை 15 கோடி பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், மே 1 ஆம் தேதி ரஷ்யாவின் ஸ்பூட்னிக் வி (Sputnik-V) கோவிட் -19 தடுப்பூசியை 1,50,000 டோஸ்கள் இந்தியாவிற்கு வந்துள்ளன. மேலும் லட்சக்கணக்கிலான டோஸ்கள் வரும் என அரசாங்கம் கூறியுள்ளது.
அமெரிக்க மருந்து தயாரிப்பாளரான பைசர் (Pfizer), அதன் ஜெர்மன் கூட்டு நிறுவனமான பயோஎன்டெக்குடன் (BioNTech) கொரோனாவிற்கு எதிராக ஒரு எம்ஆர்என்ஏ (mRNA) தடுப்பூசியை உருவாக்கியது. இந்நிலையில், மே 3 ஆம் தேதி, இந்தியாவில் விரைவில் தடுப்பூச்சியை பயன்பாட்டிற்கு கொண்டு வர இந்திய அரசுடன் ஆலோசனை நடத்தி வருவதாக கூறியுள்ளது.
ஃபைசர் தடுப்பூசியை இந்தியாவில் பயன்படுத்துவதில் சில முக்கியமான சவால்கள் உள்ளன. அதனால் தான் இந்தியா அதன் பயன்பாட்டிற்கு இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | கொரோனா நோயாளிகள் உடலில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க உதவும் Prone Positioning
ஃபைசர் தடுப்பூசியை -70 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் சேமிக்க வேண்டும். இதற்கான குளிர்சாதனை கட்டமைப்பை ஏற்பாடு செய்வது ஒரு பெரிய சவாலாகும். இது எந்த ஒரு நாட்டிற்கும் எளிதானது அல்ல. மேலும் இதனால், தடுப்பூசிகளை சேமித்து வைப்பதற்கான செலவுகளும் மிக அதிக அளவாக இருக்கும்.
நாம் வீட்டில் பயன்படுத்தும் குளிர்சாதன் பெட்டியில் (Refridgerator) ப்ரீசரில் உள்ள தட்ப நிலை -20 டிகிரி செல்சியஸ் என்ற நிலையில், அதை விட மும்மடங்கு அதிகமாக உறை நிலையை பராமரிக்க வேண்டும் என்பதிலிருந்து அதற்கான செலவை நீங்கள் கற்பனை செய்து கொள்ளலாம்.
இந்த தடுப்பூசியை சேமிக்க மிகவும் நவீன தொழில்நுட்பம் கொண்ட அதிக செலவில் அமைக்கப்படும் விநியோக சங்கிலி (Supply chain) தேவைப்படும்.
கைக்கு வரும் தடுப்பூசிகள், தடுப்பூசி மையத்திற்கு சென்றடையை 10 தேவை என்ற நிலையில், அதனை 5 நாட்கள் மட்டுமே அதனை, 2 முதல் 8 டிகிரி செல்சியஸ் வரையிலான தட்ப நிலையில் சேமிக்க முடியும்.
மேலும், தடுப்புச்சிகள் உள்ள பெட்டியை திறந்தவுடன், ஒரு தடுப்பூசியில் உள்ள 5-6 டோஸ்கள், சலைனில் கலக்கப்பட்டு, - 6 மணி நேரத்திற்குள் செலுத்தப்பட்டிருக்க வேண்டும்.
WHO இன் நோய்த்தடுப்பு, தடுப்பூசிகள் மற்றும் உயிரியல் துறையின் இயக்குநர் டாக்டர் கேட் ஓ பிரையன் (Kate O'Brien), பைசர் தடுப்பூசிகளை கொண்டு செல்வதும் விநியோகிப்பதும் எந்த ஒரு நாட்டிற்கும் ஒரு சவாலான விஷயம் தான் என்பதை வெளிப்ப்டையாகவே ஒப்புக் கொண்டுள்ளார்.
ALSO READ | ஆக்ஸிஜன் செறிவு அளவு 92 என குறைந்தால் பதற்றம் அடைய வேண்டாம்: AIIMS இயக்குநர்
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR