இயற்கையின் கொடையான பழங்களில் மருத்துவப் பயன்கள் அதிகம் உண்டு. அவற்றில் சுலபமாக கிடைக்கும் பழங்கள் மலிவு விலையில் கிடைப்பதால், அதன் மதிப்பு பலருக்கு தெரிவதில்லை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தப் பட்டியலில் பல பழங்கள் உள்ளன. இதில் ஒன்று தான் இலந்தைப்பழம். வறட்சியான பகுதிகளிலும் தானாகவே வளரும் இலந்தை மரத்திற்கு உரம் கூட தேவையில்லை. சிறிது மழை போதும். அதனால் தான் சிறிய பேரிட்சை என்றும் அழைக்கப்படுகிறது இந்த இலந்தைப்பழம்.


இலந்தையில், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புசத்து, உட்பட பல சத்துக்கள் நிறைந்துள்ளன.  இலந்தையில் 74% கலோரி, 17 % மாவுப் பொருள், 0.8 % புரதம்  மற்றும் தாது உப்புகள் உண்டு. இரும்புசத்தும் நிறைந்துள்ள இலந்தைப் பழம் (medciinal benefits)  நினைவாற்றலை அதிகரிக்கும் திறன் கொண்டது.


இலந்தையை சாப்பிட்டு வந்தால், எலும்புகள் பலம் பெறும். எலும்புகள் மட்டுமல்ல, பற்களும் உறுதிபெறும்.



பித்த உடல்வாகு கொண்டவர்களுக்கு பித்தம் அதிகரித்தால் தலைவலி, மயக்கம், தலைச்சுற்றல் என பல நோய்கள் உண்டாகும். பித்தம் அதிகமானால், ரத்தம் தொடர்பான சிக்கல்களும் ஏற்படும். எனவே, பித்தத்தை நீக்கும் இலந்தையை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் பித்தம் சமநிலைப்பட்டு, ரத்தம் சுத்தமாகும், பித்தம் தொடர்பான வியாதிகளும் வராது. 


பயணம் செய்யும்போது அலர்ஜி ஏற்படுகிறதா? கவலையே வேண்டாம். இலந்தை பழத்தை சாப்பிட்டால், வாந்தியும், தலைச்சுற்றலும் ஓடிப்போகும். உடல்வலியை போக்கும் திறன் கொண்டது இலந்தைப்பழம். அதிலும் 40 வயதைத் தாண்டியவர்கள் தொடர்ந்து இலந்தைப்பழத்தை உண்டு வந்தால், அவர்களுக்கு உடல்வலி போய், தெம்பு வரும்.  


பசியின்மையால் அவதிப்படுபவர்களும், செரிமான பிரச்சனைகள் உள்ளவர்களும் தொடர்ந்து இலந்தையை உண்டால், செரிமான சக்தி அதிகரித்து பிரச்சனைகள் நீங்கும். உடல் சூட்டைத் தணித்து குளிர்ச்சியைத் தரக்கூடிய இலந்தைப்பழத்தை இரவு நேரத்தில் சாப்பிடுவதை தவிர்க்கலாம். 


ALSO READ | வில்வப் பழத்தில் இத்தனை நன்மைகளா? 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR