Healthy Fruit: சர்க்கரை நோயை குணப்படுத்தும் இந்த பழத்தை சாப்பிடதுண்டா?
சப்பாத்திக் கள்ளி பழத்தை, உண்பதற்கு ஏற்ற பழமாக பலரும் பார்ப்பதில்லை. அதிலுள்ள முட்களை நினைத்தாலே பயப்படுவது காரணமாக இருக்கலாம். ஆனால், உண்மையில் சப்பாத்திக் கள்ளியின் பழம் பல மருத்துவ பயன்பாடுகளைக் கொண்டது.
சப்பாத்திக் கள்ளி பழத்தை, உண்பதற்கு ஏற்ற பழமாக பலரும் பார்ப்பதில்லை. அதிலுள்ள முட்களை நினைத்தாலே பயப்படுவது காரணமாக இருக்கலாம். ஆனால், உண்மையில் சப்பாத்திக் கள்ளியின் பழம் பல மருத்துவ பயன்பாடுகளைக் கொண்டது.
சப்பாத்தி கள்ளியில் பல நுண்ணூட்டச் சத்துக்கள் நிறைந்துள்ளது. கால்சியம், பொட்டாசியம்,பாஸ்பரஸ், மெக்னீசியம் சத்துகளும் நார்சத்தும் நிறைந்து உள்ளது.
சர்க்கரை நோய்க்குக் சப்பாத்திக் கள்ளிப் பழம் சிறந்தது என்றும் கூறப்படுகிறது. பழத்தை எச்சரிக்கையாகப் பறித்து, சப்பாத்திக் கள்ளிப் பழத்தில் முட்கள் உள்ள பகுதியைக் கல்லில் தேய்த்து முட்களை அகற்ற வேண்டும்.பழத்தின் தோலை எடுத்த பிறகு, அதனுள்ளே இருக்கும் விதைகள் நிறைந்த சதைப் பகுதியை சாப்பிட வேண்டும். அந்த சதைப்பகுதி இரத்தச் சிவப்பாகவும், நல்ல இனிப்புச் சுவையுடனும் இருக்கும்.
READ ALSO | அருகில் நெருங்கினாலே உயிர்பலி கேட்கும் கொலைகார மரம்
உடலின் கொலஸ்ட்ரால் அளவை குறைப்பதில் இந்தப் பழம் முக்கிய பங்கு வைக்கிறது. இதிலுள்ள ஆன்டி ஆக்சிடென்டுகள் அபாயகரமான LDL கொழுப்பு அளவுகளை (Antioxidants for LDL cholesterol) எதிர்த்து போராட உதவுபவை.
இப்பழத்தில் 90% நீரும், நார்ச்சத்தும் இருப்பதால், பசி எடுக்காமல் இருக்க உதவுகிறது. உடலின் கொலஸ்ட்ரால் அளவை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் சப்பாத்திக் கள்ளி, இறந்த தேவையற்ற செல்களால் ஏற்படும் ஆக்சிடேட்டிவ் அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.
சப்பாத்திக் கள்ளியின் பழம், பச்சை நிறத்துடன் இருக்கும். பழுத்த பழங்கள் சிவப்பு நிறத்தில் இருக்கும். இந்தப் பழத்தை நாகதாளிப் பழம் என்றும் சொல்வதுண்டு.
பழங்குடியினர் சப்பாத்தி கள்ளியை அதிகம் பயன்படுத்துகின்றனர். சப்பாத்திக் கள்ளிப் பழத்தை நெருப்பில் வாட்டி குழந்தைகளுக்கு கொடுக்கும் வழக்கமும் பழங்குடியின மக்களிடம் உள்ளது. இது பல நோய்கள் ஏற்படாமல் காக்கும் என்று அவர்கள் நம்புகின்றனர்.
ALSO READ | காலிஃபிளவர் சாப்பிட்டா இந்த பிரச்சனை வருமா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR