கடந்த தசாப்தத்தில் நீரிழிவு நோயின் ஆபத்து மிக வேகமாக அதிகரித்து வருகிறது. இப்போது வயதானவர்கள் மட்டுமல்ல, 40 வயதுக்கு குறைவானவர்கள், குழந்தைகள் கூட சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். நீரிழிவு நோயின் நிலை உடலில் பல வகையான கடுமையான சிக்கல்களை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர், இந்த ஆபத்தை மனதில் வைத்து, அதைத் தடுக்க அனைவரும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நீரிழிவு நோய்க்கான பல ஆபத்து காரணிகள் இருக்கலாம், அதாவது மரபியல், உணவு மற்றும் வாழ்க்கை முறை போன்றவை. இந்த விஷயங்களில் கவனம் செலுத்துவதன் மூலம் இந்த கடுமையான உடல்நலப் பிரச்சனையைத் தவிர்க்கலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உலக அளவில் அதிகரித்து வரும் சர்க்கரை நோய் அபாயம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அதைத் தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14ஆம் தேதி உலக சர்க்கரை நோய் தினம் அனுசரிக்கப்படுகிறது. நீரிழிவு பிரச்சனை மிக வேகமாக அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். கிட்டத்தட்ட ஒவ்வொரு இரண்டாவது வீட்டிலும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட ஒரு நபரை காணலாம். இருப்பினும் துரதிர்ஷ்டவசமான விஷயம் என்னவென்றால், அது பற்றிய சரியான தகவல்கள் இன்னும் பெரும்பாலான மக்களுக்கு தெரியவில்லை.


பல ஆண்டுகளாக உண்மை என்று நாம் நம்பி வரும் பல கட்டுக்கதைகள் நீரிழிவு நோயை நிர்வகிப்பதற்கும் தடுப்பதற்கும் பல பிரச்சனைகளை உருவாக்கியுள்ளன. இந்த கடுமையான நோயிலிருந்து பாதுகாப்பாக இருக்க, மக்கள் சரியான தகவல்களை வைத்திருக்க வேண்டும். பெரும்பாலான மக்கள் உண்மை என்று நம்பும் சில கட்டுக்கதைகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.


மேலும் படிக்க | காலையில் புல் தரையில் வெறுங்காலுடன் நடந்தால் இத்தனை நன்மைகளா..!


கட்டுக்கதை 1: நீரிழிவு நோயாளிகள் அரிசி மற்றும் உருளைக்கிழங்கு சாப்பிடக்கூடாது.


சர்க்கரை நோய் தொடர்பான உணவு தொடர்பான பல கட்டுக்கதைகள் உள்ளன, அவற்றில் ஒன்று நீரிழிவு நோயாளிகள் அரிசி மற்றும் உருளைக்கிழங்கு போன்றவற்றை தவிர்க்க வேண்டும். அவற்றில் கார்போஹைட்ரேட்டுகள் அதிகம், கார்போஹைட்ரேட்டுகள் இரத்த சர்க்கரையின் அளவை அதிகரிக்கின்றன என்பதாகும்


ஆனால், சர்க்கரை நோயில் கூட கார்போஹைட்ரேட்டை முற்றிலும் தவிர்ப்பது சரியல்ல என்கின்றனர் சுகாதார நிபுணர்கள். கார்போஹைட்ரேட்டுகள் உடலுக்கு ஆற்றலை வழங்குவதற்கு அவசியமானவை. எனவே அவற்றை முற்றிலும் தவிர்ப்பது சோர்வு மற்றும் பலவீனத்தை ஏற்படுத்தும்.  அதனால், குறைந்த கார்போ ஹைட்ரேட் உணவு நீரிழிவு நோயில் நன்மை பயக்கும். 


கட்டுக்கதை 2: குடும்பத்தில் யாருக்கும் நீரிழிவு நோய் இல்லை என்றால், நமக்கு வராது.


நீரிழிவு நோய்க்கான மரபணு ஆபத்து அதிகம் என்பது உண்மைதான், அதாவது உங்கள் பெற்றோர் அல்லது உடன்பிறந்தவர்களில் யாருக்காவது சர்க்கரை நோய் இருந்தால், உங்களுக்கும் அது உருவாகும் அபாயம் அதிகம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இருப்பினும், குடும்பத்தில் யாருக்கும் சர்க்கரை நோய் இல்லையென்றாலும்,  வேறு சில காரணங்களால் சர்க்கரை நோய் வரலாம். வாழ்க்கை முறை மற்றும் உணவுக் கோளாறுகள், உடல் உழைப்பின்மை மற்றும் உடல் பருமன் போன்ற நிலைமைகள் காரணமாக, உங்களுக்கு மரபணு ஆபத்து இல்லாவிட்டாலும், நீரிழிவு நோய் ஏற்பட வழிவகுக்கும்.


மேலும் படிக்க | நீரிழிவு நோயை விரட்ட ‘இந்த’ பழத்தின் விதைகளே போதும்! பயன்படுத்தும் முறை!


கட்டுக்கதை 3: சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்போது நீரிழிவு மருந்துகள் தேவையில்லை.


பெரும்பாலான நீரிழிவு நோயாளிகள் இந்த தவறை அடிக்கடி செய்கிறார்கள், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வந்தவுடன், அவர்கள் தாங்களாகவே நீரிழிவு மாத்திரைகள் மற்றும் இன்சுலின் சாப்பிடுவதை நிறுத்துகிறார்கள். இது ஆபத்தை விளைவிக்கும் என்று மருத்துவர்கள் கருதுகின்றனர். நீரிழிவு நோயை முழுமையாக குணப்படுத்த முடியாது, மருந்துகள் மற்றும் பிற வழிகளில் அதைக் கட்டுப்படுத்த முயற்சிக்கப்படுகிறது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். மருந்தை நீங்களே நிறுத்துவதன் மூலம் சர்க்கரையின் அளவு திடீரென அதிகரிக்கும். இது கடுமையான உடல் நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும், பல உறுப்பு செயலிழப்புக்கு கூட வழிவகுக்கும். மருத்துவரின் ஆலோசனையின்றி மருந்துகளை உட்கொள்ளவோ ​​அல்லது மருந்துகளை நிறுத்தவோ கூடாது


கட்டுக்கதை 4: நீரிழிவு என்பது வளர்சிதை மாற்றம் மற்றும் இரத்தத்தில் ஏற்படும் ஒரு பிரச்சனை.


நிச்சயமாக, நீரிழிவு என்பது வளர்சிதை மாற்றத்தில் ஏற்படும் இடையூறுகளால் ஏற்படும் ஒரு பிரச்சனையாகும். இதில் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கணிசமாக அதிகரிக்கிறது, ஆனால் இது உடலின் பல உறுப்புகளின் பிரச்சனைகளையும் அதிகரிக்கிறது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கண், சிறுநீரகம், கல்லீரல், நரம்புகள் போன்ற நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். தொடர்ந்து கட்டுப்பாடற்ற வகையில் இரத்த சர்க்கரை அளவு இருப்பது,  உடல் உறுப்புகள் பாதிப்பு உட்பட கடுமையான உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும், அவை தடுப்பது மிகவும் முக்கியம்.


மேலும் படிக்க | முக அழகை கெடுக்கும் இரட்டை கன்னத்தை நீக்க சில ‘முக’ பயிற்சிகள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ