இந்தியாவில் நாளுக்கு நாள்  கோவிட்-19 தொற்று பாதிப்புகள், அதிகரித்து கொண்டே போகின்றன.  இதுவரை இல்லாத அளவு கொரோனா பாதிப்புகள் உச்சம் தொட்டுள்ளதால், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க போதுமான ஆக்ஸிஜன் இல்லாமல், பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. போர் கால அடிப்படையில் மத்திய அரசு, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொரோனா தொற்று (Corona Virus) ஏற்படும் அனைவருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை தேவை என்ற நிலை இல்லை என்பது சிறிது ஆறுதலான விஷயம். பலருக்கு வீட்டில் இருந்தே சிகிச்சை பெறுகின்றனர். அத்தகையவர்கள் தங்கள் உடலின் ஆக்ஸிஜன் அளவை குறையாமல் பார்த்துக் கொள்வது முக்கியம். இதனால், அவசர நிலை ஏற்படுவதை தவிர்க்கலாம்.


கொரோனா இரண்டாவது அலையில், தொற்று ஏற்படும் நோயாளிகளுக்கு ‘மூச்சுத் திணறல்’  என்பது ஒரு பொதுவான அறிகுறியாக உள்ளது. உருமாறிய கொரோனா வைரஸை பொறுத்தவரை அவை மூச்சுக் குழாயின் துவக்கத்தில் அதிக எண்ணிக்கையில் இருப்பது தான் இதற்கு காரணம் என்கின்றனர் மருத்த்துவர்கள். இதனால் பலருக்கு சுவாசிப்பதில் பிரச்சனை ஏற்படுகிறது என்கின்றனர். 


இவர்கள் உடலில் இருக்கும் ஆக்சிஜன் அளவுகளில் மாற்றம் ஏற்பட்டாலோ அல்லது ஆக்சிஜன் குறைவது உள்ளிட்ட அறிகுறிகள் தொன்பட்டாலோ, இதில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டாலோ, அதற்கான எளிய தீர்வு உங்களிடமே உள்ளது. ஆமாம், நீங்கள் குப்புற படுத்துக் கொள்வது போன்ற ஒரு நிலையில், கால்கள் வயிற்றுக்கு கீழ் தலையணை வைத்து குப்புற படுத்தால் அதற்கான தீர்வு கிடைக்கும். 


ALSO READ | கொரோனா காலத்தில் உங்கள் வீட்டில் கட்டாயம் இருக்க வேண்டிய 5 மருத்துவ கருவிகள்


ரத்த ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க புரோன் பொசிஷனிங்கை (Prone Positioning) பயன்படுத்துவதை மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். புரோன் பொசிஷன் என்பது குறிப்பிட்ட நேரம் குப்புறபடுப்பது, பின்னர் வலதுபுறம் படுப்பது,  பின்னர், சிறிது நேரத்திற்கு  உட்கார்ந்து கொண்ட பிறகு,  இடது புறமாக படுப்பது. பின்னர்  இறுதியாக மீண்டும் குப்புறபடுப்பது. முகத்தை கவிழ்த்துக் கொண்டு, மார்பை உயர்த்தி, விரைவான சுவாசத்தை பயிற்சி செய்வதும் இதில் அடங்கும். இது ‘புரோன் வென்டிலேட்டர் முறை’ எனவும் அழைக்கப்படுகிறது.


புரோன் நிலையில் (Prone Positioning) ஒருவர் படுக்கும் போது  நுரையீரல் விரிவாக்குவதற்கு இதயம் இடமளிக்கிறது, காற்றோட்டம் அதிகரித்து ரத்த ஓட்டமும் அதிகமாகிறது. பொதுவாகவே கடும் சுவாச கோளாறு உள்ள நோயாளிகளுக்கும், வென்டிலேட்டரிலும் இந்த முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், தொடர்ந்து ஆக்ஸிஜன் அளவு குறைந்தால், மருத்துவரை தொடர்பு கொள்ள வேண்டும். 


ALSO READ | வீட்டிலேயே ஆக்ஸிஜன் அளவை சரியாக பராமரிக்க சுகாதார அமைச்சகம் பரிந்துரைக்கும் வழிகள்


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR