Dates: குளிர்காலத்தில் பேரீச்சம்பழங்களை சாப்பிட ஆண்களுக்கு இந்த காரணம் போதாதா?
ஆண்களுக்கு பேரிச்சம்பழம் சாப்பிடுவதால் என்ன பயன் கிடைக்கும்? ஆயுர்வேதம் சொல்லும் மிகச்சிறந்த நன்மைகள்...
ஆரோக்கியமான உடலே நிம்மதியான வாழ்க்கைக்கு அடிப்படை ஆகும். ஆரோக்கியமான உடலைப் பெறுவதற்கு நாம் உண்ணும் உணவுகளே அடித்தளமாகின்றன. அதிலும், தற்போது குளிர்காலம் தொடங்கும் நிலையில், வழக்கமாக உண்ணும் உணவில் ஒருசில மாறுதல்களை செய்ய வேண்டிய காலம் இது.
உடலுக்கு சூடு தரும் உணவுகளை சாப்பிடுவது ஒருபுறம் என்றால், உடலுக்கு தேவையான சத்துக்களைத் தரும் பழங்களையும், உலர் பழங்களையும் உண்பது அவசியம். குளிர்காலத்தில் பேரீச்சம்பழம் சாப்பிடுவதன் அற்புதமான நன்மைகளைப் பற்றி ஆயுர்வேத வல்லுநர்கள் கூறியுள்ளனர். ஆண்களுக்கு பேரிச்சம்பழம் சாப்பிடுவதால் என்ன பயன் கிடைக்கும் என்றும் ஆயுர்வேதம் கூறுகிறது.
ஆண்கள் குளிர்காலத்தில் தினசரி 5 பேரீச்சம்பழங்களை சாப்பிட வேண்டும் என்று ஆயுர்வேத நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். அதற்கான காரணம் தெரியுமா?
குளிர்காலத்தில் பேரிச்சம்பழம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குளிர்காலத்தில், பல சத்தான பொருட்களை உட்கொள்வதன் மூலம் உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். பேரீச்சம்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் இந்த நன்மைகள் பற்றி ஆயுர்வேத நிபுணர் டாக்டர் அப்ரார் முல்தானியின் பரிந்துரைகள் இவை…
Also Read | ஆஸ்துமாவா? கவலையில்லாமல் தீபாவளியை கொண்டாட Tips
ஆண்களுக்கு பேரிச்சம்பழம் பலன்கள்: மெலிதான உடல்வாகு கொண்ட ஆண்களுக்கு பேரீச்சம்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
ஒல்லியான ஆண்களும்,குழந்தைகளும் நோய்வாய்ப்படும் அபாயம் அதிகம். அவர்கள் பேரிச்சம்பழம் சாப்பிடுவது உடல் வலிமையைக் கூட்டும். பேரீச்சம்பழத்தில் உள்ள புரதம், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், பொட்டாசியம், மெக்னீசியம், வைட்டமின் பி6, இரும்புச்சத்து போன்றவை தசைகளை மேம்படுத்த உதவுகிறது. இதனால் உடல் வலுவாகவும் ஆரோக்கியமாகவும் மாறும். நிபுணர்களின் கூற்றுப்படி, ஒல்லியான ஆண்கள் தினமும் இரவில் இளஞ்சூடான பாலுடன் 5 பேரீச்சம்பழங்களை சாப்பிட வேண்டும்.
பெண்களுக்கு பேரீச்சம்பழம் கொடுக்கு நன்மைகள்: ஒரு ஆய்வின்படி, கர்ப்பிணிகள் கர்ப்பத்தின் 5வது மாதத்திற்கு பிறகு தொடர்ந்து 4 வாரங்களுக்கு தினமும் 5-6 பேரீச்சம்பழங்களை உட்கொண்டால், அவர்களுக்கு பிரசவம் சுலபமானதாக இருக்கிறது. போலியான பிரசவ வலி ஏற்படுவதில்லை. அதுமட்டுமல்ல, பிரசவ வலியின் வேதனையும் குறைவாகவே காணப்படுகிறது.
பொதுவாகவே சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவருமே குளிர்காலத்தில் தினமும் 5 பேரீச்சம்பழங்களை சாப்பிடுவது நல்லது.
ரத்தப் பற்றாக்குறை நீங்கும்.
உடல் ஆற்றல் அதிகரிக்கும், விரைவில் சோர்வடைய மாட்டார்கள்.
எலும்புகள் வலுவடையும்.
செரிமான அமைப்பு வலுவாகும், வயிறு நன்கு சுத்தமாகும்.
நோய்த்தொற்றுகள் மற்றும் நோய்களை எதிர்த்துப் போராடுவதற்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
மூளையின் திறன் அதிகரித்து, கூர்மையாகிறது.
ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவலாம்.
இங்கு வழங்கப்பட்ட தகவல்கள் எந்த மருத்துவ ஆலோசனைக்கும் மாற்றாக இல்லை. விழிப்புணர்வுக்காக மட்டுமே வழங்கப்படுகிறது என்பதை கவனத்தில் கொள்ளவும்.
READ ALSO | ஒரு பழத்தின் விலை இவ்வளவா? 50 பவுன் நகையே வாங்கிடலாமே?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR